அருள் சுரக்கும் குர்பானி


முழு உலக முஸ்லிம்களாலும் கொண்டாடப்படுவது ஈதுல் அழ்ஹா எனப்படும் தியாகத் திருநாள். உண்மையிலே இதனை பெரு மைக்குரிய திருநாள் என அழைப்பதும் பொருத்தமாகும்.
ஏனெனில், அத்தகைய பெருமைக்குரிய ஒரு வரலாற்றை அல்லாஹ்வின் தோழர் ஹஸ்ரத் இப்றாஹீம் (அலை) அவர்கள் உருவாக்கி வைத்துச் சென்றுள்ளார்கள்.
ஆடு, மாடு, ஓட்டகைகளை அறுத்துப் பலியிட்டு ஆண்டு தோறும் செய்யப் படும் குர்பானிஹஸ்ரத் இப்றாஹீம் (அலை) அவர்களின் அந்த மகத்தான தியாகத்தை நமக்கு நினைவூட்டுகிறது.
குர்பானிஎனும் பலியிடுதல் அல் லாஹ்வின் சந்நிதானத்தில் அடியார்கள் செலுத்தும் சிறந்த இபாதத்தாக நிர்ண யிக்கப்பட்டு எல்லா நபிமார்களுடைய கூட்டத்தார் மீதும் கடமையாக் கப்பட்டு வந்துள்ளதை பின்வரும் அல்-குர்ஆன் வசனம் தெளிவுபடுத்துகிறது.
அல்லாஹ் அவர்களுக்குக் கொடுத்து இருந்த ஆடு, மாடு, ஒட்டகைகள் மீது அவன் பெயரைக் கூறும்படி, செய்வதற்காகவே ஒவ்வொரு வகுப்பாகும். நாம் குர்பானிசெய்வ தைக் கடமையாக ஏற்படுத்தி இருந் தோம் (அல்குர்ஆன் 21:34).
இறைவனின் சந்நிதானத்தில் தன் பணிவையும் நன்றியுணர்வையும் மனிதன் ஒளி பெறச் செய்யும் மேலான வணக்க முறை இது என்பது ஓர் உண்மையாரும், அல்லாஹ்வின் அன்பைப் பெறுவதற்கு தனது செல்வத்தை அர்ப்பணிப்பதா லேயே இந்த வணக்க முறை குர்பானி என்று சிறப்பிக்கப் படுகின்றது.
உண்மையில் குர்பானியின் அந்தரங்கத் தாற்பரியம் என்னவெனில், மனிதன் இதன் மூலம் தியாக உணர்ச்சியைப் பெற்று தன் இதயத்தையும், சிந்தனையையும் ஒளிபெறச் செய்ய வேண்டும். தனக்கு ள்ளே ஈமானின் உறுதியையும், இறையச் சத்தையும் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதுதான்.
இதனையே அல்குர் ஆன் கீழ்வருமாறு எடுத்துரைக்கிறது. (இவ்வாறு குர்பானி செய்த போதிலும்) அதன் மாமிசமோ, அல்லது அதன் இரத்தமோ அல்லாஹ்வை அடைந்து விடுவ தில்லை. உங்களுடைய (பரிசுத்த தன்மை யும்) பக்தியும் தான் அவனை அடையும்’ (அல்குர்ஆன் 22:97).
எந்தக் குர்பானியானது அல்லாஹ்வின் திருப்பொருத்தத் திற்காக மட்டும் நிறை வேற்றப் படுகின்றதோ அதுவே அல்லாஹ் விடத்தில் அங்கீகரிக்கப்படுவதற்கு தகுதி யானதாகும். எண்ணங்களைக் கொண்டே எல்லாச் செயல்களும் கணிக்கப்படும். மனிதன் அவன் எண்ணியதே கிடைக் கும்என்ற நாயகம் (ஸல்) அவர்களின் கூற்றுக்கேற்ப குர்பானியிலும் உள்ளத் தின் பரிசுத்தம் முக்கிய மானதாகும்.
புகழைத் தேடி தீர்த்துக் கொள்ளும் குர்பானி, இறைவனிடத்தில் அங்கீகரிக் கப்பட மாட்டாது என்பதை கீழ்வரும் அல்குர்ஆன் வசனம் எச்சரிக்கிறது. அல்லாஹ் அங்கீகரிப்பதெல்லாம் பய பக்தியு டையவர்களில் உள்ளவர்(களு டைய குர்பானிகளைத் தான்’ (5:27). (தானம் செய்தால்) உங்களுக்குப் பிரிய மான பொருளிலிருந்து நீங்கள் செலவு செய்யாத வரையில் நிச்சயமாக நீங்கள் நன்மையடையவே மாட்டீர்கள் (குர். 92).
குர்பானி கொடுப்பதற்கான காலம் துல் ஹஜ் மாதம் 10ம் நாள் பெருநாள்த் தொழுகை தொழுததி லிருந்து அய்யாமுத் தஷ்ரீக் என்னும் பிறை 11, 12, 13 அஸர்த் தொழுகை வரை நிறைவேற்றலாம்.
ஆகவே, உரிய முறையில் குர்பானியைக் கொடுத்து இறைவ னின் திருப்பொருத்தத்தைப் பெறுவோமாக.
மெளலவி எம்.யூ.எம். வாலிஹ் (அஸ்ஹரி)