என் அன்பான மகனே/மகளே...

பெற்றோர்களை நேசியுங்கள்,
அவர்களை கடைசி காலத்தில்
தனியே விட்டு விடாதீர்கள்.
ஏனெனில்,
''தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது.
தந்தையின் பொருத்தத்தில் இறைவனின் பொருத்தம் இருக்கிறது.''(நபிமொழி)
ஒரு தாய்/தந்தை தன்னுடைய மகன்/மகளுக்கு எழுதும் மிகவும் உருக்கமான கடிதம்...
என் அன்பான மகனே/மகளே...
நான் முதுமை ஆன பின், நீ என்னை புரிந்து கொண்டும் கனிவாக இருப்பாய் என்று நம்புகிறேன்.
நான் தெரியாமல் கண்ணாடியை போட்டு உடைத்து விட்டாலோ, அல்லது எதையேனும் கீழேபோட்டு விட்டாலோ, நான் பார்வை குறைவதால் தான் செய்கிறேன். நீ என்னை புரிந்து கொண்டு திட்ட மாட்டாய் என்று நினைகிறேன்.
முதியவர்கள் மிகவும் இளகிய மனம் படைத்தவர்கள் அதனால் திட்டும்போதும் கொஞ்சம் கனிவோடு திட்டு.
என்னுடைய கேட்கும் திறன் குறைத்து விட்டால் என்னால் நீ கூறுவதை கேட்க முடியாது, அப்பொழுது நீ என்னை செவிடன் என்று சொல்ல மாட்டாய் என்று நம்புகிறேன். நீ என்ன சொல் வந்தாயோ அதை திரும்ப சொல்! இல்லை என்றால் எழுதி தெரியபடுத்து.
என்னை மன்னித்து விடு, எனக்கு வயது ஆகிக்கொன்டே இருகின்றது.
என்னுடைய முழங்கால்கள் பலவீனமாகி கொண்டே இருகின்றது, நான் எழுந்து நிற்பதற்கு நீ பொறுமையாக எனக்கு உதவி செய்வாய் என்று நம்புகிறேன். எப்படி நீ குழந்தையாக இருக்கும் பொழுது நான் உனக்கு உதவி செய்தேனோ அப்படி நீயும் செய்வாய் என்று நம்புகிறேன்.
நான் ஏதேனும் சொன்னதையே திரும்ப திரும்ப பழைய ரெகார்ட் போல் பேசி வந்தாலும்; நீ! நான் சொல்லுவதை கேட்பாய் என்றும் என்னை கேலி செய்ய மாட்டாய் என்றும் அல்லது சலிப்படைய மாட்டாய் என்றும் நம்புகிறேன்.
உனக்கு ஞாபகம் இருகின்றதா, குழந்தையாக இருக்கும் பொழுது பலூன் வாங்கி தரும்வரை நீ அடம் பிடித்து பலூன் வாங்கியது...
என் மேல் இருந்து வரும் ஒரு விதமான நாற்றதிற்கும் என்னை மன்னிக்க வேண்டும். என்னை தினமும் குளிக்க சொல்லி வற்புறுத்தாதே ஏனென்றால் என்னுடைய உடம்பு மிகவும் பலவீனமாக இருகின்றது.
நான் ஏதேனும் புலம்பிக் கொண்டு இருந்தால் நீ பொறுமையாக இருப்பாய் என்று நம்புகிறேன். இது வயதானவர்கள் செய்யும் செயல். நீயும் வயதானவுடன் அதை தெரிந்து கொள்வாய்.
உன்னால் எனக்காக ஒரு ஐந்து நிமிடம் நேரம் ஒதுக்கி என்னுடன் நட்புடன் பேசுவாயா? உனக்கு வேலை அதிகம் என்று தெரியும் இருத்தாலும் நான் சொல்லும் கதைகளை உன்னை கேட்குமாறு கேட்டு கொள்கிறேன் அதற்காக எனக்கு கொஞ்சம் நேரம் ஒதுக்கு.
எப்பொழுது என்னுடைய நேரம் நெருங்குகிறதோ அப்பொழுது நான் படுத்த படுகையாக இருபேன், அப்பொழுது நீ என்னை கனிவோடு கவனிப்பாய் என்று நம்புகிறேன். தெரியாமல் நான் படுக்கையை நனைத்து விட்டால் என்னை மன்னித்துவிடு.
என்னுடைய கடைசி காலத்தில் நீ என்னை மிகவும் கவனமாகவும், அக்கறையோடும் பார்த்து கொள்வாய் என்று எனக்கு தெரியும், என்னுடைய நேரம் நெருங்கும் பொழுது நான் நீண்ட நாட்கள் உனக்கு தொல்லை தர மாட்டேன். நீ எனக்காக என்னுடன் கை கோர்த்து சாவை எதிர் கொள்ளும் மன தைரியத்தை தருவாய் என்று நம்புகிறேன்.
கவலைப் படாதே, இறைவனை நான் பார்க்கும் பொழுது அவனிடம் உன் மீது அருள் மழைப் பொழியச்சொல்கிறேன், ஏனென்றால் நீ உனது தாய் தந்தையை மிகவும் நேசித்தாய் என்று. நீ எங்களை மிகவும் கனிவோடு கவனித்ததற்கு மிக்க நன்றி..
என்றும் அன்புடன்,
அப்பா/அம்மா
நினைவு படுத்துகிறோம்
பெற்றோர்களை நேசியுங்கள், அவர்களை கடைசி காலத்தில் தனியே விட்டு விடாதீர்கள்.
ஏனெனில்,
''தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது.
தந்தையின் பொருத்தத்தில் இறைவனின் பொருத்தம் இருக்கிறது.'' (நபிமொழி)

குழந்தைகளின் சிந்தனையை சிதைக்கும் டி வி சேனல்


இந்தியா முழுவதுமே பள்ளி கோடை விடுமுறை நாள்களில்குழந்தைகளின் 

எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டுகேபிள் இணைப்புகள் மூலம் 

ஒளிபரப்பப்படும் குழந்தைகளின் சேனல்களை தடை செய்ய வேண்டும் என்ற 

கருத்து சமூக ஆர்வலர்களிடையே மேலோங்கி வருகிறது.
3 வயது குழந்தை முதல்பள்ளி மாணவமாணவிகள் வரை குழந்தைகளுக்கான சேனல்களின் (தமிழ் மற்றும் ஆங்கிலம்நிகழ்ச்சிகளை விரும்பிப் பார்க்கின்றனர்விரும்பி பார்க்கின்றனர் என்பதைவிட அதில் மூழ்கிவிடுகின்றனர் என்றே சொல்ல வேண்டும்.
இத்தகைய சேனல்களை மட்டுமே குழந்தைகள் விரும்பிப் பார்ப்பதால்அவர்களுக்கு வேறு எதன் மீதும் கவனம் செலுத்த இயலாத அளவுக்கு மூளையின் செயல்திறன் குறைகிறது.
படிக்கும் காலங்களில் படிப்பதற்கு அளிக்கும் முக்கியத்துவத்தைக் காட்டிலும் டிவி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதில் அதிக கவனம் செலுத்துவதால்கல்வியின் மீதான ஆர்வம் குறைந்து தேர்வில் குறைந்த மதிப்பெண்களே பெறும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்மேலும் டிவி பார்ப்பதால் கண்பார்வை பாதிக்கப்பட்டு சிறு வயதிலேயே கண்ணாடி அணிய வேண்டிய சூழலும் உருவாகி விடுகிறது.
இத்தகைய குழந்தைகள் சேனல்களை பார்க்கும்போதுபெற்றோர்கள் அதை பார்க்காதே என அறிவுரை கூறினாலோஅல்லது சேனல்களை மாற்றினாலோ அவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்துகிறதுஅதிலும் ஒரே வீட்டில் 2, 3 குழந்தைகள் இருந்தால் குழந்தைகள் சேனல்களிலே எந்த சேனல்களை வைப்பது என்ற சண்டை வேறு.

இத்தகைய சேனல்களை தொடர்ந்து பார்ப்பதால் குழந்தைகள் வீட்டைவிட்டு வெளியே செல்வதில்லை.இதனால்அவர்களுக்கு நட்பு வட்டாரம் குறைகிறதுஉறவினர்கள் வீட்டுக்குச் சென்று வரலாம் என பெற்றோர் அழைத்தால்கூட அவர்கள் வர மறுப்புத் தெரிவிக்கின்றனர்அப்படியே வந்தாலும்கூட அங்கு யாரிடமும் நன்கு பழகுவதில்லைஅங்கேயும் டிவி பார்ப்பதிலேயே கவனம் செலுத்துகின்றனர்.
உணவுவேளைகளில் சரியான நேரத்துக்கு சாப்பிடச் சொன்னால்கூட ஒழுங்காகச் சாப்பிடுவதில்லை.அப்படியே சாப்பிட்டாலும் அரைகுறை சாப்பாடுதான்இதனால்உடல் ரீதியாகவும்மன ரீதியாகவும் அவர்களுக்கு ஒரு விதத் தளர்வும்மன உளைச்சலும் ஏற்படுகின்றன.
சீரியலில் மூழ்கிக் கிடக்கும் பெண்களைப்போல இப்போது குழந்தைகள் சேனல்களால் வீடுகளில் பிரச்னைதான்.
இது தொடர்ந்தால் குழந்தைகளை இந்த மாதிரியான சேனல்கள் கற்பனை உலகத்திலே சுற்ற வைத்து விடும்பெற்றோர்களிடம் பாச உணர்வுடன் இருக்கவோசரியாக படிக்கவோவிளையாட்டுத்திறனை அதிகரிக்கவோ அது தடையாக இருக்கும் அவர்களின் மூளை செயல்திறனை மழுங்கடிக்கும்இத்தகைய சேனல்கள் குழந்தைகளுக்கு ஒரு போதைப் பொருள்போல ஆகிவிடும்.
இதனால் வருங்கால சமுதாயமே பாதிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லைஇதில் மத்தியமாநில அரசுகள் முக்கிய கவனம் செலுத்த வேண்டும்பொதுமக்கள் நலன் கருதி எப்படி ஆபாச சேனல்களுக்கு அரசு தடை விதிக்கிறதோஅதேபோல இத்தகைய குழந்தைகள் சேனல்களுக்கும் உடனடியாகத் தடைவிதிக்க வேண்டும்.
அவ்வாறு செயல்பட்டால் அன்றிவருங்கால இந்தியாவல்லரசு இந்தியா என்பதெல்லாம் பெயரளவில் சொல்லிக் கொள்ளலாமே தவிரநடைமுறைக்கு சாத்தியமில்லைஏனென்றால் இன்றைய குழந்தைகள் தானே நாளைய இளைஞர்கள்அவர்கள் ஒரு நல்ல குழந்தையாக இருந்தால் மட்டுமே நல்ல இளைஞராக உருவாக முடியும்அப்போதுதான் ஒரு நல்ல இந்தியனாக வந்து இந்தியாவை வல்லரசாக உருவாக்க முடியும்.
எனவேஅரசு இதைக் கருத்தில் கொண்டுகோடை விடுமுறை தொடங்கிவிட்டதுஇனி குழந்தைகளுக்கு நேரம் அதிகமாகக் கிடைக்கும் என்பதால்அந்தச் சேனல்களில் மூழ்கிவிடாமல் இருக்கவும்உடனடியாக கவனித்து குழந்தைகள் சேனல்களை தடைசெய்ய வேண்டும்அது விடுமுறை காலம் மட்டுமன்றி அனைத்து காலங்களிலும் இத்தகைய சேனல்கள் தேவை இல்லை என்பதில் உறுதியுடன் செயல்பட வேண்டும் என சமூக நல ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

மனைவிக்குப் பிடிக்காத வார்த்தைகள்!



வார்த்தைகளால் ஒருவரை மகிழ்ச்சிபடுத்தவோ, வருத்தபடுத்தவோ முடியும். ஓர் உறவை மலரச் செய்யவோ, கருகச் செய்யவோ இயலும். `ஆண்களும் தன்மையான வார்த்தைகளும்’ என்பது அபூர்வமான கூட்டணி. அதிலும் கணவன்மார்கள் மனைவியிடம் சர்வ ஜாக்கிரதையாக வார்த்தைகளை பயன்படுத்தாவிட்டால் சிக்கல்தான்.
எனவே, கணவன்மார்களுக்கு உதவும் விதமாக, அவர்கள் மனைவியிடம் கூறக் கூடாத வார்த்தைகள் இங்கே...

'உன்னோட ரசனை மகா மட்டம்’
எப்படித்தான் இப்படி ஒரு ரசனையை வளர்த்துக்கிட்டியோ?’ என்று ஒருபோதும் கூறாதீர்கள். ஆரம்பத்தில் நீங்கள் அப்படிச் சொல்லும்போது லேசாக முகம் சுளிப்பவர், பின்னர் `பளீரென்று’ திருப்பி அடிக்கத் தொடங்குவார். மனைவி `சீரியல்’ பார்பது பிடிக்கவில்லையா? சத்தமில்லாமல் அடுத்த அறைக்கு நகர்ந்து விடுங்கள்.
'ரொம்ப குண்டாஆயிட்டே’
எந்த பெண்ணும் தான் குண்டாகி விட்டதாகக் கூறப்படுவதை விரும்ப மாட்டார். மனைவி உடம்பு குண்டாகிக் கொண்டிருந்தாலும் அதை `ஒல்லியாகக் காண வேண்டியது’ உங்கள் பொறுப்பு.
'உனக்கு சமைக்கவே தெரியல’
உங்கள் அம்மாவின் கைபக்குவமே தனிதான். அவர் சாதாரணமாக புளி காய்ச்சினாலும் ஊரையே வாசனை தூக்கும்தான். ஆனால் உங்கள் இல்லத்தரசியின் சமையலைத்தான் இனி ஆயூசுக்கும் சாப்பிட்டாக வேண்டும். எனவே பாராட்டாவிட்டாலும், குறை சொல்லாமல் இருப்பது உத்தமம்.
'உங்க குடும்பத்தில எல்லாருமே இப்படித்தானா?’
நாசுக்காக அதிருப்தியை வெளிபடுத்தும் மாமனார், மாமியார், நீங்கள் அணிகிற ஆடை முதற்கொண்டு உரிமையோடு எடுத்து பயன்படுத்துகிற மைத்துனன் என்று உங்களின் மனைவி வீட்டார் ஓர் இனிய (?) இம்சை. அதற்காக, `உங்க வீட்டுல எல்லாருமே இப்படித்தானா?’ என்றோ, `உங்க அப்பா, அம்மா, தம்பி, தங்கச்சி எல்லாருமே `வித்தியாசமா’ இருக்கீங்களே!’ என்றோ கடுப்பாய் `கமெண்ட்’ அடிக்காதீர்கள்.
'உன்னை விட உன் தங்கச்சி...’
'உன்னைவிட உன் தங்கச்சி அழகு, புத்திசாலித்தனம் எல்லாத்திலயும் ஒரு படி மேலே....’ என்று சொல்லித் தொலைக்காதீர்கள். (ஜாலியாக பேசுகிற பாணியில் `உண்மையை’க் கூற நினைத்தாலும்!) சில ஆசைகளை மனசுக்குள்ளே போட்டு பூட்டிக்கொள்வது, குடும்பத்தில் கலவரம் வெடிக்காமல் இருக்க உதவும்.
'எங்க அம்மா மாதிரியே இருக்கே’
பாராட்டுவதாக நினைத்துக் கொண்டு கூட, `எங்க அம்மா மாதிரியே இருக்கே’ என்று கூறிவிடாதீர்கள். அது சுயமாக சூனியம் வைத்துக்கொள்வது மாதிரி. போயும் போயும் `மாமியாருடனா’ ஒப்பிடுவது?
அதுமட்டுமின்றி கணவன் தன் மனைவியைப்பார்த்து 'உன்னுடைய முதுகு என் அம்மாவின் முதுகைப் போல்' என்று சொன்னால் 'தலாக்' நிகழ்ந்து விடும். எச்சரிக்கையாக இருக்கவும்

காதல் என்றால் என்ன? எது உண்மையான காதல்?


                                                          
[ உன்னதமான காதலை மனைவிமேல் கொள்வதுதான் நூற்றுக்கு நூறு சரியான செயலாக இருக்கும். அதற்கு தகுதியுடையவளும் அவளே. காரணம் உங்களுக்காகவே இறைவனால் படைக்கப்பட்ட ஒரு ஜீவன் அவளே.
இறைவன் படைத்த மனிதப்படைப்பில் முதல் உறவே கணவன் மனைவி உறவுதான்.
முதல் மனிதர் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாமும் அவருக்குத்துணையாக இறைவன் படைத்ததும் அவர்களது மனைவியான ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்களைத்தானே! ]
காதல் என்றால் என்ன?  
எதிர்பாலினர் மீது அன்பு, ஆசை கலந்து இளமையில் உருவாகும் ஈர்பின் பெயர் காதல்!’ - இதை அறிவியல்பூர்வமாக பார்த்தால் `காதல் என்பது பசி, தாகம், கோபம் போன்ற ஓர் இயல்பான உணர்வு! உடல் ரீதியாக பார்த்தால் காதல் என்பது சுரபிகளின் விளையாட்டு. ஆண்ட்ரோஜன், ஈஸ்ட்ரோஜன், அட்ரினலின் போன்ற சுரப்பிகளின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள். `காதல் என்பது அப்பட்டமான சுயநலத்தின் வெளிப்பாடு’ என்கிறார்கள் உளவியல் அறிஞர்கள்!
காதல் செய்யும் மனிதர்களில் சுமார் பத்து சதவீதம் பேர்கூட திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதே நிதர்சன உண்மை! சுமார் 60 சதவீத காதல், திருமணம் என்ற பேச்சினை எட்டும் முன்னரே கலைந்து போய் விடுகிறது. இதற்கு அடிப்படை காரணம் இருவருமே முதன்முறையாக காதலில் விழும்போது அவசரபட்டு விடுவதுதான். பின்னர் இது காதல் இல்லை. நம் வாழ்க்கைக்கு இது சரிபடாது என்று பிரிந்து விடுகின்றனர்.
பருவ மாற்றம் காரணமாக இரண்டுங்கெட்டான் பருவத்தில் எதிர்பாலினத்தவரை பார்த்ததும் ஈர்ப்பு உண்டாகிறது. அதை காதல் என்று தவறாக நினைத்து விடுகிறார்கள். அது வெறும் இனக்கவர்ச்சி. ஆகவே திருமணத்திற்குப்பின் கணவன் மனைவிக்குள் ஏற்படும் ஈர்ப்புத்தான் உண்மையான காதல் என்று தாளாரமாகச் சொல்லலாம்.
காமம் என்பதில் காதல் இருக்க வேண்டிய அவசியமில்லை. காமம் என்பது காதல் ஆகாது. ஆனால் காதலில் காமம் என்பது ஒரு சிறு பகுதி மட்டுமே. அது ஒரு சிலருக்கு பெரும்பகுதியாகவும், சிலருக்கு முழு பகுதியாகவும் அமையலாம். திருமணத்திற்குமுன் ஏற்படும் காதல் பெரும்பாலும் காமத்தை நோக்கியே நகரும். இல்லையென்று சிலர் மறுத்தாலும் உண்மை அதுதான் என்பது எதார்த்தம்.
ஒரு ஆணும் பெண்ணும் தனித்திருந்தால் மூன்றவதாக (அவர்களைக்கெடுப்பதற்காக) ஷைத்தான் அங்கு நிச்சயம் இருப்பான் என்னும் இஸ்லாமிய கண்ணோட்டம் மிகவும் சரியானதே என்பதை விஞ்ஞான ஆய்வுகளும் நிரூபிக்கின்றன.
ஒரு ஆணும் பெண்ணும் பேசும்போது அவர்களுக்குள்ள இடைவெளியைப்பொருத்து அவர்கள் கெடுவதற்குள்ள வாய்ப்பைப்பற்றி குறிப்பிடும்போது, ஒரு அடி இடைவெளிக்குள் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் நான்கு முறை அருகருகே நின்று பேசினால் கெடுவதற்கான வாய்ப்பு மிக அதிகம் என்கிறார்கள்.
ஆகவே அன்பு, நட்பு, நம்பிக்கை, பொறுப்பு ஆகிய நான்கு தூண்களின் மீது கட்டப்படும் அழகிய மாளிகை போன்ற காதலே உன்னதமானது. இந்த உன்னதமான காதலை மனைவிமேல் கொள்வதுதான் நூற்றுக்கு நூறு சரியான செயலாக இருக்கும். அதற்கு தகுதியுடையவளும் அவளே. காரணம் உங்களுக்காகவே இறைவனால் படைக்கப்பட்ட ஒரு ஜீவன் அவளே. இறைவன் படைத்த மனிதப்படைப்பில் முதல் உறவே கணவன் மனைவி உறவுதான்நபி ஆதம் அலைஹிஸ்ஸலாமும் அவருக்குத்துணையாக இறைவன் படைத்ததும் அவர்களது மனைவியான ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்களைத்தானே!
திருமணத்துக்குமுன் காதலா...
கல்லூரி மற்றும் அலுவலகங்களில் அல்லது வேலை பார்க்கும் இடங்களில் தன்னுடன் படிக்கும், வேலை பார்க்கும் ஆண்கள் பெண்களுடனும், பெண்கள் ஆண்களுடனும் தீவிர நட்புடன் பழகுவதுண்டு. இந்த நட்பில் நல்ல நம்பிக்கை இருக்கும். இதில் எல்லோருக்கும் காமம் இருக்கும் என்று சொல்ல முடியாது. ஒரு சிலரிடையே மட்டும் இருக்கலாம். பெரும்பாலானவர்களுக்கு அன்பு, நட்பு, அளவுகடந்த பாசம் போன்றவற்றிற்கும் காதலுக்கும் என்ன வித்தியாசம் என்று தெரியாமலே எல்லாவற்றைம் காதல் என்ற பெயரில் போட்டுக் குழப்பிக்கொள்கிறார்கள்.
குடும்பத்தை பற்றி அக்கறை இல்லாமல் சிலர், முழுக்க முழுக்க காதலையே நினைத்துக் கொண்டிருப்பார்கள். எதிர்கால வாழ்வு பற்றிய எவ்வித பொறுப்பும் இருக்காது. அதனால் இதுவும் உண்மையான காதலாக இருக்க முடியாது. ஆனால் வெளிலகிற்கு இவர்கள் தீவிர காதலர்கள் போல் தோன்றுவார்கள்.
பொழுதுபோக்கிற்காக பலர் காதலிப்பது உண்டு. கல்லூரி மற்றும் தாம் பணியாற்றும் இடங்களில் தன்னை பற்றி மற்றவர்கள் பெருமையாக நினைக்க வேண்டும் அல்லது பேச வேண்டும் என்பதற்காக யாரையாவது காதலித்துக்கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு காமம்தான் அடிப்படை. இவர்களுக்குள் ஓரளவுதான் நம்பிக்கை இருக்கும். ஆனால் கொஞ்சம்கூட பொறுப்பே இருக்காது. ஆனால் இவர்கள் ஒன்றாக இணைந்து ஊர் சுற்றுவார்கள். பலர் முன்னிலையில் தீவிரமாக காதலிப்பது போல் நடிப்பார்கள். இதை தேறாத காதல் என்று கூறிவிடலாம்.
சினிமா நட்சத்திரங்கள் மீது சிலருக்கு காதல் ஏற்படும். சிலர், தனது காதலை சொல்லாமலேயே, தான் மட்டுமே தனியே காதலித்து ஒருதலையாக அலைந்து கொண்டிருப்பார்கள். சிலர் வயது வித்தியாசமின்றி காதலிப்பார்கள். இவையெல்லாம் நடைமுறைக்கு ஒத்துவராத காதல்கள். இதை மூடத்தனமான காதல் என்றும் பொருந்தாக் காதல் என்றும் சொல்லலாம். ஆனால் முரட்டுத்தனமான நம்பிக்கையும், குருட்டுத் தனமான பொறுப்பும் கொண்டிருப்பார்கள். டீன்ஏஜ் பருவத்தில் உடலும், மனமும் புதுமையைத் தேடும் ஏக்கத்தில் இருக்கும். கண்ணுக்கு அழகாக இருப்பவர்கள் அல்லது தைரியமாக முன்வந்து பேசுபவர்களை மனது விரும்பும். அதை காதல் என்று பெரும்பாலானவர்கள் தவறாக எடுத்துக்கொள்கிறார்கள். எதிர்பாலினரின் உருவம் தவிர வேறு எதைம் அறியாமல் காதலில் விழும்போது அங்கே காமம் மட்டுமே இருக்கும்.
இயல்பான காதல் என்பது முதலில் நம்பிக்கையில் தொடங்கும். பொறுப்புணர்வு முழுமையாக இருக்கும். அதன் பின்னரே காமம் வரும். நம்பிக்கை, பொறுப்புணர்வு, காமம் இவை முன்றும் சரியான விகிதத்தில் கலந்திருப்பதே உண்மையான காதலாகும். காமத்திற்கும், காதலுக்கும் பெருமளவு தொடர்பில்லை. காமம்தான் காதல் என்று சிலர் சொல்வது அவர்களின் அறியாமையே. இருவரும் ஒருவரை ஒருவர் முழுமையாக புரிந்து கொள்வதே இயல்பான காதலின் ஆணிவேர். காதலில் விழுந்த பிறகு, ஒரு ஆணுக்கு, தாம் நேசிக்கும் பெண்தான் உலகிலேயே அழகியாகத் தெரிவாள். (அது உங்கள் மனைவியாக இருக்கட்டுமே) பிறரது விமர்சனங்களை பற்றி கண்டு கொள்ளவோ, ஏற்றுக் கொள்ளவோ மாட்டார்கள். அதுபோலவே ஓர் ஆணின் புற அழகை பார்த்தே பெண்கள் காதலுக்குரியவர்களை தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால் அந்த அழகு அவர்களுக்கு பிடித்திருக்கும் அவ்வளவுதான். இவையத்தனையும் போலியான காதல்.
உண்மையான காதல்
உண்மையான காதல் என்பது கணவன் மனைவிக்குள் இருப்பது, இருக்க வேண்டியது. உங்கள் உண்மையான காதலி உங்கள் மனையாகவே இருக்கட்டும். ஆகவே மீண்டும் மீண்டும் நினைவு படுத்துகிறோம்; ''உன்னதமான காதலை மனைவிமேல் கொள்வதுதான் நூற்றுக்கு நூறு சரியான செயலாக இருக்கும். அதற்கு தகுதியுடையவளும் அவளே. காரணம் உங்களுக்காகவே இறைவனால் படைக்கப்பட்ட ஒரு ஜீவன் அவளே. இறைவன் படைத்த மனிதப்படைப்பில் முதல் உறவே கணவன் மனைவி உறவுதான்.முதல் மனிதர் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாமும் அவருக்குத்துணையாக இறைவன் படைத்ததும் அவர்களது மனைவியான ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்களைத்தானே!''

பிள்ளைகளின் ஆளுமையும் பெற்றோர்களின் முழுமையும்

கருவிலேயே குழந்தையின் கல்வி ஆரம்பிக்கப்படுகின்றதுஅக்கல்வியை நற்கல்வியாகப் புகட்ட வேண்டிய பொறுப்பு பெற்றோர்களிடத்தில் தான் தங்கி இருக்கிறதுஅக்கல்வியை "எந்தக் குழந்தையும் நல்லகுழந்தை தான் மண்ணிற் பிறக்கையிலே அது நல்லது ஆவதும் தீயது ஆவதும் அன்னை வளர்ப்பினிலே..." என்கிறது ஒரு கவிஞரின் பாடல்உண்மை தான்ஆனாலும் தாய் மட்டும் இதற்குப் பாத்திரவாளியல்லதந்தையும் தான்நிச்சயமாக குழந்தையிலே எந்தக் கள்ளம் கபடமும் கெட்ட நடத்தையும் பிறக்கும் போது இருப்பதில்லை.
கருவுற்ற நாளிலிருந்து அறிவுச் சிந்தனைகளை நல்லெண்ணங்களை கணவன்மனைவியோடு பரிமாற வேண்டும். இப்படி செயற்படும் போது கருவிலே இவை பதியும். இவை சிறந்த கல்வியாக பிள்ளைக்கு உருவாகும், உதவும்.
பிள்ளை மணலாலே பாதை அமைக்கும். பாலம் உருவாக்கும். வீடு கட்டும், பூக்கள் அமைக்கும், இன்னும் ஏதோ ஏதோவெல்லாம் செய்யும். இவற்றிலெல்லாம் பிள்ளையின் புத்திக் கூர்மை தெரியும். கலைநயம் காட்சியளிக்கும். இலட்சியம் கூடத் தென்படும். ஆகவே மனமார பிள்ளைகளை விளையாட விடவேண்டும்.
"ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அது தாண்டா வளர்ச்சிஎன்பதற்கேற்ப பிள்ளையின் வளர்ச்சி இரண்டு விதமாகவும் இருக்க வேண்டும்ஆளோடு சேர்ந்து அறிவும் வளர வேண்டும்அறிவு வளரும் போதுதான் ஆளுமை வளரும்எனவே இந்த விடயத்திலும் பெற்றோர் முக்கிய கவனம் எடுக்க வேண்டும்.]
"எந்தக் குழந்தையும் நல்லகுழந்தை தான் மண்ணிற் பிறக்கையிலே - அது நல்லது ஆவதும் தீயது ஆவதும் அன்னை வளர்ப்பினிலே - அது அன்னை வளர்ப்பினிலே..." என்கிறது ஒரு கவிஞரின் பாடல். உண்மை தான். ஆனாலும் தாய் மட்டும் இதற்குப் பாத்திரவாளியல்ல. தந்தையும் தான். நிச்சயமாக குழந்தையிலே எந்தக் கள்ளம் கபடமும் கெட்ட நடத்தையும் பிறக்கும் போது இருப்பதில்லை.
குழந்தை பிறந்து வளர்ந்து பிள்ளைப் பருவத்துக்கு வரும் போது தான் ஒன்றில் நல்லதாகிறது, அன்றேல் கெட்டதாகிறது. மண்ணில் பிறக்கும் போது நல்லதாகப் பிறந்த குழந்தை நாளடைவிலே ஏன் தீயதாகிறது? சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.
நல்லதாகப் பிறந்த குழந்தையை நல்லதாகவே வளர்த்து வீட்டுக்கும், நாட்டுக்கும், ஏன் முழு உலகுக்கும் சிறந்த குடிமகனாக
 உருவாக்க வேண்டிய முக்கிய பொறுப்பு முழுப் பொறுப்பாக பெற்றோர்களின் தலைகளில் தான் சுமத்தப்பட்டிருக்கிறது.
ஆகவே தான் தாய் மாத்திரம் அன்றி அக்குழந்தையின் தந்தையும் அதனது ஆளுமை வளர்ச்சிகளிலே அதிக அக்கறை காட்ட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
கருவிலேயே குழந்தையின் கல்வி ஆரம்பிக்கப்படுகின்றது. அக்கல்வியை நற்கல்வியாகப் புகட்ட வேண்டிய பொறுப்பு பெற்றோர்களில்த் தான் தங்கி இருக்கிறது.
ஆக, கருவிலே இடம் பெறும் இக்கல்விக்குக் குருவாகத் தாயும், தந்தையும் தான் தலைமை வகிக்கின்றார்கள். இந்த இரு குருமாரின் வழி நடத்தல்களும் வழி தவறிப்போனால் "கருக்கல்வி" பாழாகி விடும். கருக்கல்வி பாழாகிப் போனால் பிள்ளையின் காலம் முழுதுமான வாழ்வும் பாழாகிப் போகும். இது அத்தலைமுறையையே தாக்கும்.
எனவே தான் ஒரு குழந்தை கருவாகும் போது தாயும் தந்தையும் குருவாக உருவாக வேண்டும். எத்தனை தாய் தந்தையர்கள் இப்படி உருவாகிறார்கள் என்பது தான் கேள்விக் குறியாக இருக்கிறது. அக்கேள்விக்குறி தான் பிரச்சினைக்கு உரியதாக இருக்கிறது.
கருவுற்ற நாளிலிருந்து
 அறிவுச் சிந்தனைகளை நல்லெண்ணங்களை கணவன்மனைவியோடு பரிமாற வேண்டும். இப்படி செயற்படும் போது கருவிலே இவை பதியும். இவை சிறந்த கல்வியாக பிள்ளைக்கு உருவாகும், உதவும்.
பிள்ளை கருவுற்று இருக்கும் போது பெற்றோர் மிகவும் நிதானமாகவும், புத்தி சாதூரியத்துடனும், சண்டை சச்சரவுகள் எதுவும் அற்ற வகையிலும் நடந்து கொள்ள வேண்டும். அன்பும், அகிம்சையும், ஐக்கியப்பாடும், நல்லெண்ணங்களும், நன்னடத்தைப் போக்குகளுமே குடும்பத்தில் நிலைத்திருக்க வேண்டும். இப்படியாக குறிப்பிட்ட தாயும், தந்தையும் செயற்படுவார்களாக இருந்தால் இருவருமே சிறந்த குருமாராக விளங்குவார்கள். அதன் மூலம் கருவிலிருக்கும் குழந்தை அறிவொளி பெற்றுத் துலங்கும். சுருங்கச் சொல்லப் போனால் கருவறை காத்திரமான படிப்பறையாக இருந்து குழந்தையை வளர்த்தெடுக்கும்.
இவை அனைத்தும் குழந்தை கருவாக இருக்கும் போது பெற்றோர் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய கடப்பாடுகளாகும். இதனுடன் நின்று விட்டால் போதுமா? நிச்சயமாக இல்லை.
குழந்தை பிறந்த பின்பு தான் பெற்றோர் கூடிய கட்டுப் பாட்டுக்கும், பொறுப்புக்கும் உள்ளாக வேண்டியவர்களாக இருக்கிறார்கள். குழந்தை தவழும் வரை கருவில் இருக்கும் போது மேற்கொண்ட கற்பித்தல் நெறி முறைச் செயற்பாடுகளை இருவரும் மேற்கொள்ளலாம்.
பின்பு அது தத்தி தத்தி நடக்க முற்படும் போது, மழலை மொழி பேசத் தொடங்கும் போது இலகுவான மொழிப் பாவனைகளை பெற்றோர் கடைப்பிடிக்க வேண்டும். மழலையோடு மழலையாக மழலை மொழி பேச வேண்டும். ஆடிப்பாடி அக்குழந்தையை மகிழ்விக்க வேண்டும். பல் திறப்பட்ட நற் சிந்தனைகளை குழந்தையின் நெஞ்சிலே விதைக்க வேண்டும்.
குழந்தை படிப்படியாக பேசக் கற்றுக் கொள்ளும் போது பெற்றோரும், மற்றோரும் உற்றார் உறவினரும் குழந்தைக்கு முன்பாக வேண்டத் தகாத வார்த்தைகளையும், கெட்ட கதை பேச்சுக்களையும் கட்டாயமாகத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இவற்றையே பிள்ளை மனதிலே அழியாது பதித்துக் கொள்ளும். அது பின்பு 'தொட்டிற்பழக்கம் சுடுகாடு வரை' என்பது போல அப்பிள்ளையின் முழு வாழ்க்கையையும் பாதிக்கும்.
எனவே இவ்வாறான வார்த்தைப் பிரயோகங்களையும், தான்தோன்றித் தனங்களையும் தவிர்த்து நல்ல கதை பேச்சுக்களையும், நன்னடத்தை நெறிமுறைகளையும் கடைப்படிக்க முடியும். இதன் மூலம் தான் அக்குழந்தை சிறந்த குழந்தையாக வளப்படவும், வளரவும், வாழவும் முடியும்.
மண் விளையாட்டிலே நாட்டம் கொள்ளும் பருவம் வந்ததும் அனேகமான பெற்றோர்கள் அப்பிள்ளையை திட்டித் தீர்ப்பதும், அடிப்பதுமாகத் தான் இருப்பார்கள். இது தவறாகும், தண்டனைக்குரிய குற்றமுமாகும்.
மண் விளையாட்டிலும் எவ்வளவோ கற்க வேண்டிய விடயங்கள் அடங்கி இருக்கின்றன. அவற்றைப் பிள்ளை கற்றுக் கொள்ளும். இதனாலே தான் 'வளரும் பயிரை முளையிலே தெரியும்'. வாழும் பிள்ளையை மண் விளையாட்டிலே தெரியும்' என்பார்கள். ஏன் சும்மாவா? இல்லை.
பிள்ளை மணலாலே பாதை அமைக்கும். பாலம் உருவாக்கும். வீடு கட்டும், பூக்கள் அமைக்கும், இன்னும் ஏதோ ஏதோவெல்லாம் செய்யும். இவற்றிலெல்லாம் பிள்ளையின் புத்திக் கூர்மை தெரியும். கலைநயம் காட்சியளிக்கும். இலட்சியம் கூடத் தென்படும். ஆகவே மனமார பிள்ளைகளை விளையாட விடவேண்டும்.
அக்கம் பக்கம் பிள்ளை விளையாடச் செல்கிறது என்றால் அதற்கும் விட வேண்டும். அதன் மூலம் பிள்ளை பலவித புதுமுகங்களை, புதிய நண்பர்களைக் கண்டு கொள்ளும். சமூக மயப்படுவதற்கான சந்தர்ப்பத்தைப் பெற்றுக் கொள்ளும். ஆனால் இந்த இடத்திலே பெற்றோர் மிகவும் கண்ணும், கருத்துமாக இருக்கவும் வேண்டும். பிள்ளை விளையாடச் செல்கின்ற இடம் சூழல் பொருத்தமற்றதாயின் அங்கே செல்வதை புத்திசாலித்தனமாக தவிர்க்கச் செய்ய வேண்டும். நல்ல இடத்தில், நல்ல சூழலில் நல்ல பிள்ளைகளுடன் சேர்வதற்கே சந்தர்ப்பம் அதிகம் கொடுக்க வேண்டும்.
பிள்ளை பாடசாலைக்குச் செல்லும் பருவம் வந்ததும் பெற்றோர் தமது கவனத்தையும், கடப்பாட்டையும் மேலும் கூட்டிக் கொள்ள வேண்டும். பிள்ளை ஒழுங்காக பாடசாலை செல்கிறதா? படிக்கிறதா? எப்படிப்பட்ட நண்பர்களுடன் சேர்கிறது? என்பது போன்ற விடயங்களில் அதிக கவனம் செலுத்தி இருந்து பிள்ளைகளை வழி நடத்துவது இன்றியமையாததாகும். "ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அது தாண்டா வளர்ச்சி" என்பதற்கேற்ப பிள்ளையின் வளர்ச்சி இரண்டு விதமாகவும் இருக்க வேண்டும். ஆளோடு சேர்ந்து அறிவும் வளர வேண்டும். அறிவு வளரும் போதுதான் ஆளுமை வளரும். எனவே இந்த விடயத்திலும் பெற்றோர் முக்கிய கவனம் எடுக்க வேண்டும்.
பிள்ளையை ஒழுங்காக பாடசாலைக்கு அனுப்ப வேண்டும். ஒழுக்க நெறிமுறைகளை கடவுள் சிந்தனைகளை, அன்பை, பண்பை, மனித நேயத்தை, இரக்க சிந்தனைகளை கடைப்பிடிக்கப் பழக்க வேண்டும். நல்லவர்களாக, வல்லவர்களாக, வீட்டுக்கும், நாட்டுக்கும், வெளி உலகுக்கும் உகந்தவர்களாக நானிலத்திலே நற்பிரஜையாக தமது பிள்ளைகளை உருவாக்குவது ஒவ்வொரு பெற்றோருக்குமான உரிய கட்டுப்பாடுகளாகும்.
பிள்ளையின் அறிவும், ஆளுமைச் செயற்பாடுகளும் சிறப்புற அமைந்து செழுமையும், மகிமையும் பெறுவதற்குப் பெற்றோர்கள் முழுமை பெற்றவர்களாக, நாலும் அறிந்தவர்களாக, நற்பெற்றோராக இருக்க வேண்டும். பானையிலே முழுமையாக இருந்தால் தானே அகப்பையிலும் முழுமையாக வரும். ஆகவே முழுமை பெற்றவர்களாக பெற்றோர்கள் மாற வேண்டும். அந்த மாற்றமே ஆளுமை படைத்த அதிசிறந்த சந்ததியை உலகினுக்கு உருவாக்கிக் கொடுக்கும்.

பெண்களே! ஃபேஸ்புக், ஆர்குட், டிவிட்டரில் புகைப்படத்தை வெளியிட்டு ஆபத்தை விலைக்கு வாங்காதீர்கள்!





பெண்களுக்கு மிகப்பெரும் எச்சரிக்கை!
ஆர்குட்’, 'ஃபேஸ்புக்’, 'டிவிட்டர்’... இவையெல்லாம்தான் இன்றைய ஃபேஷன் பரபரா!
''நீ எந்த சோஷியல் நெட்வொர்க்கிங் சைட்ல இருக்க..?' என்ற கேள்விக்கு, ''எதுலயும் எனக்கு அக்கவுன்ட் இல்ல...' என்று சொல்பவர்களை, டெக்னோ உலகில் இருந்து ஏதோ கண்காணாத தொலைவில் இருப்பவர்களைப் போல பரிகாசத்துடன் பார்ப்பதுதான் இப் போதைய நிலைமை!

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவில் இருந்து... பக்கத்து வீட்டு ப்ளஸ் டூ பெண் வரை ஆண்களையும், பெண்களையும் தங்கள் பக்கம் ஈர்க்கும் தொழில் நுட்ப ஜனரஞ்சக ஹீரோவான இந்த சமூக வலைதளங்களில் அக்கவுன்ட் ஆரம்பிக்கும் ஒருவர்... அதில் தன் புகைப்படம், இ-மெயில் ஐ.டி, தொலைபேசி எண் போன்றவற்றை விரும்பினால் கொடுக்கலாம். அதைப் பார்த்து அந்த வலைதளத்தில் உலவும் மற்றவர்கள் (பள்ளி, கல்லூரி, அலுவலக நட்புகள் என ஏற்கெனவே அறிமுகமானவர்களும் இருக்கலாம், புதியவர்களும் இருக்கலாம்), அவருடன் ஃப்ரெண்ட்ஷிப் வைக்க விருப்பம் தெரிவித்து தகவல் அனுப்புவார்கள். ஏற்பதும்... ஏற்காததும் அவரவர் விருப்பம்.
ஏற்றுக்கொண்டால்... புகைப்பட பரிமாற்றங்கள், கருத்துப் பரிமாற்றங்கள், வாழ்த்துப் பரிமாற்றங்கள் என்று அந்த நட்பு நீளும்! இத்தகைய நட்பு... ஓர் எல்லையோடு இருந்தால் பிரச்னை இல்லை. எல்லை தாண்டும்போது... ஆபத்துதான்! குறிப்பாக, பெண்கள் பலரும் அந்த இணைய உலகின் முட்கரங்களில் சிக்கிக் கொண்டு சீரழியும் செய்திகள் பகீரிடச் செய்கின்றன.

அமெரிக்காவில் ஒரு பெண், 'குடும்பத்துடன் டூர் போறேன் கைஸ்! ஒரு வாரம் ட்விட்டர் ஃப்ரெண்ட்ஸுக்கு பை!’ என்று 'ட்விட்’ செய்துவிட்டுச் சென்றார். டூர் முடிந்து வீடு திரும்பியவருக்கு... அதிர்ச்சி! துடைத்து வைத்தாற்போல வீடு திருடப்பட்டிருந்தது. கொள்ளையனை வலைவீசி காவல்துறை பிடித்தபோது, ''ட்விட்டர்ல நான் அவங்க ஃப்ரெண்ட். ஒரு வாரம் வீட்டுல இருக்க மாட்டேன்னு 'ட்வீட்’ செஞ்சிருந்ததைப் படிச்சுட்டு, பிளான் பண்ணினேன்'' என்றான் கூலாக!

''முன்பின் தெரியாதவர்களை நண்பர்களாக ஏற்கும்போது... இப்படித்தான் மோசடிக்காரர்கள், திருடர்கள், கொலைகாரர்களும் நமக்கு 'நெட் ஃப்ரெண்ட்ஸ்’ ஆகிவிடுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் சமூக வலைதளத்தின் மூலமாக, 'ஃப்ரெண்ட்ஷிப்' வேண்டும்' என்று கேட்கும்போதே 'குட்பை' சொல்லிவிட்டால் பிரச்னையிலிருந்து தப்பிக்கலாம்'' என்பதுதான் இதற்கான அட்வைஸாக இருக்கும். ஆனால், இப்படி 'ரிஜக்ட்' செய்தும்கூட அந்த டீன் ஏஜ் கேர்ளுக்கு நேர்ந்த துன்பம், பரிதாபம்! எங்களிடம் வந்த அந்த கேஸ் பற்றி பார்ப்போம்.
தமிழகத்தின் முக்கியமான நகரம் ஒன்றில் ப்ளஸ் டூ படித்துக் கொண்டிருந்த அந்த மாணவியின் வீட்டுக்கு, ''ரக்ஷனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இருக்காங்களா..?'' என்று கேட்டு வந்தான் ஓர் இளைஞன். மகளை அழைத்து, ''யாரது உன்னைத் தேடி வந்திருக்கிறது..?'' என்று அப்பா கேட்க, அவனை யாரென்றே அவளுக்குத் தெரியாததால்... ''யாருனே தெரியலயேப்பா...'' என்றாள் ரக்ஷனா. கோபமான அப்ப, அவனைக் கடுமையாகக் கண்டித்தார். உடனே பதிலுக்கு, ''ஹலோ... உங்க பொண்ணோட ஃபேஸ்புக் ஃப்ரெண்ட் நான். ஈவ்னிங் என்கூட ஒரு காபி சாப்பிடலாம் வாங்கனு அவங்கதான் கூப்பிட்டாங்க'' என்று சீறினான்.
''ஃபேஸ்புக்ல எனக்கு அக்கவுன்ட் இருக்கறது உண்மைதான். ஆனா, நீங்க என் ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்ல இல்ல; உங்கள நான் வீட்டுக்கு வரச் சொல்லவும் இல்ல'' என்று ரக்ஷனா படபடக்க, அவனை வீட்டை விட்டுத் துரத்தினார் ரக்ஷனாவின் அப்பா.
பிரச்னை முடியவில்லை. வாரம் ஒருவர், ''ரக்ஷனா வீடுதானே... வரச் சொன்னீங்களே...'' என்று படையெடுக்க, ஆத்திரமும் ஆற்றாமையுமாக எங்களிடம் வந்தார் ரக்ஷனாவின் அப்பா. ரக்ஷனாவிடமிருந்தே தொடங்கினோம் விசாரணையை.
''வந்தவங்க யாரும் என்னோட ஃபேஸ்புக் 'ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்’ல இல்ல. அவங்கள நான் வீட்டுக்கும் வர சொல்லல. கூடவே, முதல் ஆள் வந்தப்போவே பதறிப்போய், எதுக்கு வம்புனு என் அக்கவுன்ட்டையே டெலிட் பண்ணிட்டேன். இருந்தும் என்னைச் சுத்தி என்ன நடக்குதுனே புரியல'' என்றார் குழப்பமும், அழுகையுமாக.
அந்த வீக் எண்ட்... ''ரக்ஷனா இருக்காங்களா...'' என்று வந்தவனைப் பிடித்து நாங்கள் 'விசாரிக்க’, ''சார்... வேணும்னா பாருங்க...'' என்று அவன் தன் ஃபேஸ்புக் புரொஃபைலைத் திறந்து காட்டினான். அவனுடைய நண்பர்கள் லிஸ்ட்டில்... ரக்ஷனா! மேலும், அவனுக்கு அவள் அனுப்பியிருந்த மெஸேஜ்கள், தகவல் பரிமாற்றங்களில் எல்லாம்... காதல் சம்மந்தப்பட்டது. 'இந்த சனிக்கிழமை எங்க வீட்டுக்கு வா. காபி குடிச்சுட்டே உங்கிட்ட என் காதலை சொல்லணும்’ என்ற மெஸேஜுடன் அவள் அனுப்பியிருந்த வீட்டு முகவரியையும் காட்டி, ''பாருங்க சார்!'' என்றான் அந்த இளைஞன் ஆதாரத்துடன்.

''சார்... இது நான் கிரியேட் பண்ணின அக்கவுன்ட்டே இல்ல. என் போட்டோ, இ-மெயில் ஐ.டி. கொடுத்து வேற யாரோ என் பெயர்ல கிரியேட் பண்ணி, இப்படி என் வாழ்க்கையில விளையாடறாங்க'' என்று அழுதாள் ரக்ஷனா. ஒரே வாரத்தில், அப்படி கேடித்தனம் செய்த கேரள இளைஞனை, அவனுடைய கணினியின் அடையாள எண்ணை வைத்து கண்டுபிடித்தோம்.
அவனுக்கு ரக்ஷனா மீது அப்படியென்ன வெறுப்பு?
''ஃப்ரெண்ட்ஷிப் வெச்சுக்கலாம்னு ஃபேஸ்புக் மூலமா அவளுக்கு தகவல் அனுப்பிட்டே இருந்தேன். 'முன்ன பின்ன தெரியாதவங்கள நான் ஃப்ரெண்டா ஏத்துக்கிறதில்ல’னு ரிஜக்ட் செய்துட்டே இருந்தா. ஒரு கட்டத்துல ஆத்திரமாகி, அவளை பழிவாங்க நினைச்சேன். அவ படிக்கிற ஸ்கூல் பெயரை ஃபேஸ்புக்ல குறிப்பிட்டிருந்தா. சென்னையில இருக்கற என் ஃப்ரெண்ட்ஸ் மூலமா அந்த ஸ்கூல் ரெஜிஸ்டர்ல இருந்து அவ அட்ரஸை எடுத்தேன். ஏற்கெனவே தன்னோட புரொஃபைல்ல அவ அப்டேட் பண்ணியிருந்த போட்டோவை எடுத்து, அவ பேர்லயே புதுசா ஒரு அக்கவுன்ட் கிரியேட் பண்ணினேன். அதன் மூலமா பல பசங்ககிட்டயும் அவ பேர்லயே 'சாட்’ பண்ணி, அவ வீட்டுக்குப் போக வெச்சேன்'' என்று கக்கினான் அந்த இளைஞன். அவனைக் கண்டித்து, அந்த அக்கவுன்ட்டை டெலிட் செய்ய வைத்தோம்.
''ஃபேஸ்புக்ல போட்டோ எல்லாம் போடாதே... பிரச்னைகள் வரலாம்’'னு என் ஃப்ரெண்ட்ஸ் சொன்னதை கேட்காம விட்ட தப்புக்கு நான் கொடுத்திருக்கிற விலை அதிகம்’ என்று தவறை உணர்ந்து வருந்தினாள் ரக்ஷனா!

ஆம்... புகைப்படம், மெயில் ஐ.டி, மொபைல் நம்பர், பள்ளி, கல்லூரி, அலுவலகம் என நம் பர்சனல் விவரங்களை சமூக வலைதளங்களில் பந்தி வைத்தால் பிரச்னைதான்... குறிப்பாக பெண்களுக்கு!
 
 
நன்றி: அவள் விகடன்

கணவன் மனைவி புரிந்துணர்வில் ஏற்படும் கோளாறுகள்


திருமணம் செய்து கணவன் மனைவியாக கைக் கோர்ப்பவர்கள் கடைசிவரை ஜாலியாக வாழ வேண்டும் என்றே ஆசைப்படுவார்கள். மணமக்களை வாழ்த்துபவர்கள் கூட இதைத்தான் விரும்புவார்கள். ஆனால் பல்வேறு காரணங்களால் பல தம்பதியர்களின் வாழ்க்கை ஜாலியாக அமைவதில்லை. முக்கியமாக புரிந்துணர்வில் ஏற்படும் கோளாறுகள் இதற்கு காரணமாக அமைந்து விடுகின்றது.
கட்டிலுக்கு கணவன் மனைவியாக இருந்து, விடிந்ததும் நீயா, நானா என்று மோதிக் கொள்பவர்கள் அல்லது நீ யாரோ, நான் யாரோ என்று கண்டுக் கொள்ளாமல் இருப்பவர்கள் என்று கணவன் மனைவிகள் என்ற அந்த உன்னத உறவுக்குள் போலியாக வாழ்பவர்களும் உண்டு. ஜாலி கணவன் மனைவியாக வாழ்க்கை சிறக்க இஸ்லாம் வழிகாட்டுகின்றது. அதுவே இந்தக் கட்டுரை.
திருமணம் செய்து சந்தோஷத்தை தொலைப்பதை விட திருமணம் செய்யாமலே இருந்து விடலாம் என்ற எண்ணம் கூட சிலருக்கு வருகின்றது. அதற்கு அனுமதியில்லை.
"உமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும், மக்களையும் ஏற்படுத்தினோம். " (அல்குர்ஆன் 13:38)
"திருமணம் செய்ய வசதி வாய்ப்பு உள்ளவர்கள் உடனே திருமணம் செய்து கொள்ள வேண்டும்'' என நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் கட்டளை பிறப்பித்துள்ளார்கள்.
"இளைஞர்களே! தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றோர் திருமணம் செய்து கொள்ளட்டும். ஏனெனில் அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும், கற்பைக் காக்கும். (அதற்கு) இயலாதோர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும்! ஏனெனில் நோன்பு (ஆசையைக்) கட்டுப் படுத்தக் கூடியதாகும்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் ரளியல்லாஹு அன்ஹு,நூல்கள்: புகாரி, முஸ்லிம்.)
மனிதனின் வாழ்க்கையில் மிக அவசியமான இத்திருமணத்தை வசதியில்லாத ஜோடிகளுக்கு வசதியுள்ளவர்கள் முடித்து வைக்குமாறும் அல்லாஹ் கட்டளையிடுகிறான்.
"உங்களில் வாழ்க்கைத் துணையற்றவர்களுக்கும், நல்லோரான உங்களின் ஆண் அடிமைகளுக்கும், பெண் அடிமைகளுக்கும் திருமணம் செய்து வையுங்கள்! அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தனது அருளால் அவர்களைத் தன்னிறைவு பெற்றோராக ஆக்குவான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்." (அல்குர்ஆன் 24:32)
மனிதனின் வாழ்க்கையில் அவசியம் தேவைப்படும் இந்தத் திருமணம், பெரும்பாலானவர்களின் வாழ்க்கையில் பெரும் புயலை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் புரிந்த பிறகு சில நாட்கள் அல்லது சில மாதங்களில் பெரும் பிரச்சனைகள் ஏற்பட்டு, அது தொடர்கதையாக மாறி விடுகிறது. பலரின் வாழ்க்கையே தொடர்பு அறுந்து அந்தரத்தில் தொங்குகிறது.
மனித வாழ்க்கையில் பிரித்துப் பார்க்க முடியாத இந்தத் திருமணம் ஏன் சில நாட்களில் கசக்கத் துவங்குகிறது? இதற்குக் காரணம் என்ன? இன்பமான வாழ்க்கை அமைய என்ன வழி வகைகள் இருக்கின்றன? என்பன குறித்து மார்க்கம் என்ன சொல்கிறது? என்று பார்ப்போம்.
இல் வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டுமானால் முதலில் முக்கியமான ஒரு அடிப்படையைப் புரிந்து கொள்ள வேண்டும். கணவனாக இருந்தாலும் சரி, மனைவியாக இருந்தாலும் சரி இருவரும் தவறு செய்பவர்களே! என்பதை ஆழமாக மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.
எதிர் பார்த்த அளவிற்கு முழுமையாக யாரும் இருக்க மாட்டார்கள். கொஞ்சம் அப்படியும் இப்படியும் தான் இருக்கும். குறிப்பாக பெண்கள் நாம் எதிர் பார்த்த அளவிற்கு இருப்பது மிகக் கஷ்டம் தான். அவர்களிடம் பல குறைகள் நமக்கு தென்படலாம். அப்போது நாம் பொறுத்துக் கொண்டு அவளிடம் இருக்கும் மற்ற நற்பண்புகளை எண்ணி திருப்தி கொள்ள வேண்டும். அப்பெண்ணிடம் இருக்கும் சில குறைகள் கூட நமக்கு நன்மைகளை பெற்றுத் தரலாம்.
அவர்களுடன் நல்ல முறையில் குடும்பம் நடத்துங்கள்! நீங்கள் அவர்களை வெறுத்தால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை அமைத் திருப்பான். (அல்குர்ஆன் 4:19)
தான் விரும்பியபடி நடக்கவில்லை, என் விருப்பதிற்கு மாற்றமாக நடக்கிறாள் என்ற எண்ணம் தான் பெரும்பாலும் கணவன், மனைவியிடம் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இந்த எண்ணத்திற்கு முதலில் முட்டுக்கட்டை போட வேண்டும்.
திருமணம் வாழ்க்கை சிக்கலாக அமைவதற்கு இன்னொரு காரணம் மணப்பெண்ணை மார்க்கத்தின் அடிப்படையில் தேர்வு செய்யாமல் பணத்தையும் அழகையும் மட்டும் பார்த்து தேர்வு செய்வது தான்.
"நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்: 1. அவளது செல்வத்திற்காக 2. அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக 3. அவளது அழகிற்காக 4. அவளது மார்க்கத்திற்காக. ஆகவே மார்க்கம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்!'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹுநூல்கள்: புகாரி, முஸ்லிம்.)
மார்க்கம் தெரிந்து, அதன் படி நடக்கக் கூடிய பெண்ணை மணமகளாகத் தேர்வு செய்ய வேண்டும் என்ற நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கட்டளை முழுமையாக புறக்கணிக்கப்படுவது குடும்ப வாழ்க்கையில் சிக்கலை ஏற்படுத்தக் காரணமாக அமைகின்றது.
கணவன், மனைவிக்கு மத்தியில் சிக்கல் ஏற்படும் போது, அவர்களைச் சேர்த்து வைக்கும் நல்ல நோக்கத்தில் அவர்களை அழைத்து, மார்க்கம் கூறும் அறிவுரைகளைச் சொல்லும் போது, மார்க்கத்தைப் பற்றி தெரிந்திருந்தால் அந்த அறிவுரைகளை மதித்து சேர்ந்து வாழ முயற்சிப்பார்கள். மார்க்கத்தின் அடிப்படையே தெரியாதவர்களாக அந்தத் தம்பதி இருந்தால் எப்படி மார்க்கத்தின் போதனைகளை செவி சாய்த்துக் கேட்பார்கள்?
எனவே மணமகளையோ, மணமகனையோ தேர்வு செய்யும் போது இஸ்லாத்தின் அடிப்படை பற்றித் தெரியுமா? தொழும் பழக்கம் இருக்கிறதா? திருக்குர்ஆன் ஓதத் தெரியுமா? நற்பண்புகள் இருக்கிறதா? என்பதை முதலில் தெரிந்து இதற்கு முதலிடம் கொடுத்துத் தேர்வு செய்யுங்கள்.
"இவ்வுலகம் இன்பங்களாகும். இவ்வுலக இன்பங்களில் சிறந்தது நல்லொழுக்கமுள்ள பெண்ணாவாள்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல்: முஸ்லிம்
"அதிகம் குழந்தை பெற்றுக் கொள்ளக் கூடிய, அன்பு செலுத்தக் கூடியவர்களை திருமணம் செய்து கொள்ளுங்கள்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: மஃகல் பின் யஸார் ரளியல்லாஹு அன்ஹுநூல்: நஸயீ.)
"அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் தங்கத்தையும், வெள்ளியையும் சேர்த்து வைப்போருக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு'' என்று எச்சரிப்பீராக! என்ற வசனம் இறங்கிய போது முஸ்லிம்களுக்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியது.
அப்போது உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், ''நான் உங்கள் கவலையை நீக்குகிறேன்'' என்று கூறி விட்டு (நபியவர்களிடம்) சென்று ''அல்லாஹ்வின் தூதரே! தங்களின் தோழர்களுக்கு இந்த வசனம் பெரும் கவலையை ஏற்படுத்தி விட்டது'' என்று கூறினார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ''உங்களில் மீதமுள்ள செல்வங்களை தூய்மைப் படுத்துவதற்குத் தான் அல்லாஹ் ஸகாத்தை கடமையாக்கியுள்ளான். வாரிசுரிமையை உங்களுக்குப் பிறகு வருபவர்களுக்காக ஏற்படுத்தியுள்ளான்'' என்று கூறினார்கள்.
அப்போது உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், ''அல்லாஹு அக்பர்'' என்று கூறினார்கள். பின்னர் ''மனிதன் சேமிப்பதிலேயே சிறந்ததை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?'' என்று கேட்டு விட்டு ''கணவன் பார்க்கும் போது மகிழ்ச்சியூட்டுவாள். அவன் கட்டளையிட்டால் கட்டுப்படுவாள். அவன் இல்லாத போது கற்பைப் பாதுகாப்பாளே அப்படிப்பட்ட நல்லொழுக்கமுள்ள பெண்மணி'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு,நூல்: அபூதாவூத்.)
மேற்கூறிய நபிமொழிகளின் படி மணமக்களைத் தேர்வு செய்திருந்தால் பெரும்பாலான பிரச்சனைகளைச் சரி செய்து விடலாம்.
குடும்ப வாழ்க்கை அமைதியாக இன்பமாக இருக்க மார்க்கம் சொல்லும் வழிமுறைகள் என்ன?

சிறு சிறு உதவிகளைச் செய்தல்
கணவன் மனைவிக்கு மத்தியில் அன்பு அதிகரிக்க, மனைவி வீட்டு வேலைகள் செய்யும் போது அவளுக்குத் துணையாக இருந்து உதவ வேண்டும். காய்கறி நறுக்கும் போது, ரொட்டி சுடும் போது இது போன்ற காரியங்களில் மனைவி ஈடுபடும் போது சிறு சிறு உதவிகளைச் செய்தால் கணவன் மீதுள்ள அன்பு மேலும் அதிகரிக்கும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறான உதவிகளைச் செய்து வந்துள்ளார்கள்.
"நான் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம், ''நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வீட்டில் என்ன (வேலை) செய்து வந்தார்கள்?'' என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள், ''நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் வீட்டாருக்காக (வீட்டு) வேலைகளைச் செய்து வந்தார்கள். தொழுகை அறிவிப்பை (பாங்கு சப்தத்தை) செவியுற்றால் (தொழுகைக்குப்) புறப்பட்டு விடுவார்கள்'' என்று பதிலளித்தார்கள்." அறிவிப்பவர்: அஸ்வத் பின் யஸீத் நூல்: புகாரி.
"நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வீட்டில் வேலை செய்வார்களா?'' என்று ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், ''தனது ஆடையைத் தைப்பார்கள்; கிழிந்த செருப்பை தைப்பார்கள்; வீட்டில் ஆண்கள் செய்ய முடிகின்ற வேலைகளை செய்வார்கள்'' என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: உர்வா நூல்: அஹ்மத். (அஹ்மதின் மற்றொரு அறிவிப்பில் ஆட்டின் பாலைக் கறப்பார்கள் என்றும் இடம் பெற்றுள்ளது.)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் வீட்டில் ஆண்கள் செய்ய முடிந்த வேலைகளைச் செய்து தம் மனைவியருக்கு உதவியாக இருந்துள்ளார்கள். அவர்களுக்கு எத்தனையோ அலுவல்கள் இருந்தும் தம் குடும்பத்தினருக்காக நேரத்தை ஒதுக்கியது அவர்களின் சிறந்த பண்பாட்டைக் காட்டுகிறது. இறைத்தூதர் அவர்களே இவ்வாறு நடந்திருந்தால் நாம் எந்தளவிற்கு நடக்க வேண்டும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இவ்வாறு செய்யும் சிறு சிறு உதவிகள் கணவன் மனைவிக்கு மத்தியில் அன்பையும் பாசத்தையும் நிச்சயம் ஏற்படுத்தும்.

ஊட்டி விடுதல்
சாப்பிடும் போது மனைவிக்கு ஒரு கவள உணவையாவது ஊட்டி விட்டால் கணவனின் மீது உள்ள அன்பை அதிகரிக்கச் செய்வதோடு இறையருளையும் பெற்றுத் தரும்.
"உன் மனைவியின் வாயில் ஊட்டக் கூடிய ஒரு கவள உணவு உட்பட அல்லாஹ்வின் திருப்தியை நாடி நீ செலவழிப்பதற்குக் கூலி வழங்கப்படாமல் இருக்காது'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸஅத் பின் அபீவக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி, முஸ்லிம்.)
மாதவிடாய் நேரத்தில்...
பெண்கள் மாதவிடாய் நேரத்தில் சுத்தமாக இருக்க மாட்டார்கள் என்று கூறி யூதர்கள் அவர்களைத் தனி அறையில் அடைத்து வைத்தனர். பொதுவாக இந்த நேரத்தில் அனைவரும் பெண்களை ஒதுக்கியே வைப்பார்கள். எனவே இதைப் போன்ற நேரங்களில் அவர்களிடம் அன்புடன் நடந்து கொண்டால் கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.
"யூதர்கள் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களுடன் அமர்ந்து சாப்பிட மாட்டார்கள். வீடுகளில் அவர்களுடன் ஒட்டி உறவாடாமல் (ஒதுங்கி) இருப்பார்கள். எனவே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தோழர்கள் (இது குறித்து) நபியவர்களிடம் கேட்டனர். அப்போது, ''நபியே! அவர்கள் மாதவிடாய் பற்றி உம்மிடம் வினவுகின்றார்கள். அது ஓர் (இயற்கை) உபாதை என்று நீர் கூறுவீராக! எனவே மாதவிலக்குற்ற போது பெண்களை (தாம்பத்திய உறவு கொள்வதை) விட்டு விலகியிருங்கள்'' என்று தொடங்கும் (2:222வது) வசனத்தை அல்லாஹ் அருளினான். அதையடுத்து நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ''தாம்பத்திய உறவைத் தவிர மற்ற காரியங்களைச் செய்து கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்.)
மாதவிடாய் ஏற்பட்டுள்ள நேரத்தில் உடலுறவைத் தவிர மற்ற அனைத்துக் காரியங்களையும் செய்து கொள்ளலாம். அவர்களுடன் பேசுவது, அவர்கள் சமைத்ததைச் சாப்பிடுவது போன்ற எந்தக் காரியத்தையும் செய்யலாம். இதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்ந்துள்ளார்கள்.
"நான் மாதவிடாயுடன் இருக்கும் நிலையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தலை முடியைச் சீவிவிடுவேன். (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹாநூல்: புகாரி)
"எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது எனது மடியில் சாய்ந்து கொண்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குர்ஆனை ஓதும் வழக்கமுடையவர்களாக இருந்தனர்." (அறிவிப்பவர்:ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரி.)
"நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருக்கும் போது அங்கிருந்தவாறே என் (அறையின்) பக்கம் தலையைக் காட்டுவார்கள். நான் மாதவிடாய்க்காரியாக இருக்கும் நிலையில் அவர்களது தலையைக் கழுவுவேன்." (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹாநூல்: புகாரி.)
"எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது நான் (ஏதேனும் பானத்தை) பருகி விட்டு அதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கொடுப்பேன். அப்போது அவர்கள் நான் வாய் வைத்த இடத்தில் தமது வாயை வைத்து அருந்துவார்கள். மாதவிடாய் ஏற்பட்டிருந்த நான் இறைச்சியுள்ள எலும்புத் துண்டைக் கடித்து விட்டு அதை நபியவர்களிடம் கொடுப்பேன். நான் வாய் வைத்த இடத்தில் அவர்கள் தமது வாயை வை(த்துப் புசி)ப்பார்கள்." (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹாநூல்: முஸ்லிம்.)
மாதவிடாய் என்று கூறி மற்றவர்கள் பெண்களை ஒதுக்கி வைக்கும் நேரத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் மனைவியரிடம் அனைத்து உதவிகளையும் பெற்று வந்துள்ளார்கள். மேலும் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் தண்ணீரை வாய் வைத்துக் குடித்து விட்டுத் தரும் போது, ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் எந்த இடத்தில் வாய் வைத்து குடித்தார்கள் என்பதைக் கவனித்து, அதே இடத்தில் வாய் வைத்து குடித்துள்ளார்கள். இறைச்சியைக் கொடுக்கும் போதும் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கடித்த அதே இடத்தில் கடித்து, மாதவிடாய் நேரத்தில் பெண்களிடம் அன்போடு நடந்து கொள்ள வேண்டும் என்பதை தெரியப்படுத்துகின்றார்கள்.
இந்த நேரம் மட்டுமல்ல! ஒரு பெண் கவலையோடு இருக்கும் போதும், தனக்கு உறுதுணையாக யாரும் இல்லை என்று அவள் எண்ணும் போதும் அவளிடம் கணவன் இது போன்று நடந்து கொண்டால் நிச்சயம் கணவனிடம் மனைவி மதிப்பும் மரியாதையும் வைப்பாள் என்பதில் சந்தேகம் இல்லை.
இல்லற வாழ்க்கை இனிக்க மார்க்கம் தடை செய்யாத விஷயங்களில் மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்கள் விரும்பியதைச் செயல் படுத்த வேண்டும்.
இவ்வாறு செயல் படுத்தும் போது அவர்களின் ஆசை நிறைவேறுவதுடன் கணவன் மீதும் மதிப்பும் மாரியாதையும் உயரும்.
உதாரணமாக எதாவது ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்லுமாறு சொன்னால் அந்த இடத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும். முடியவில்லையானால் இன்னொரு நாளில் அழைத்துச் செல்வதாகக் கூறி அதன்படி நடக்கவேண்டும்.
இவ்வாறு செய்வதால் கணவன் மனைவி உறவு சீர்படும்; சிறப்பாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறே நடந்து கொண்டார்கள்.
ஒரு பெருநாளின் போது சூடான் நாட்டவர்கள் போர்க் கருவிகளையும் கேடயங்களையும் வைத்து விளையாடினார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தாமாகவோ அல்லது நான் கேட்டுக் கொண்டதற்காகவோ, ''நீ பார்க்க ஆசைப்படுகிறாயா?'' எனக் கேட்டார்கள். நான் ஆம் என்றேன். அவர்கள் என்னைத் தமக்குப் பின்புறமாக என் கன்னம் அவர்களின் கன்னத்தில் படுமாறு நிற்க வைத்தனர்.
(பிறகு அவர்களை நோக்கி) ''அர்பிதாவின் மக்களே! விளையாட்டைத் தொடருங்கள்'' என்று கூறினார்கள். நான் பார்த்து சலித்த போது, ''உனக்கு போதுமா?'' என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். ''அப்படியானால் (உள்ளே) போ!'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹாநூல்: புகாரி.)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னைத் தமது மேல் துண்டால் மறைத்துக் கொண்டிருக்க பள்ளிவாசலில் (ஈட்டியெறிந்து) விளையாடிக் கொண்டிருந்த அபிசீனியர்களை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். நானாக சடைந்து விடும் வரை பார்த்துக் கொண்டிருந்தேன். விளையாட்டுகள் மீது பேராவல் கொண்ட இளம் பெண் எவ்வளவு நேரம் வேடிக்கை பார்ப்பாள் என்பதை நீங்களே மதிப்பிட்டுக் கொள்ளுங்கள்! (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹாநூல்: புகாரி.)
அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் விளையாட்டைப் பார்க்க ஆசைப்பட்ட போது அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடையாக இருக்கவில்லை.மாறாக ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்காகத் தாமும் பார்த்ததுடன், அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் போதும்! போதும்! என்று சொல்லும் அளவுக்குத் தன் தோளை விளையாட்டை பார்க்கும் சாதனமாக மாற்றிக் கொடுத்துள்ளார்கள்.
இறைத் தூதராக இருந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எத்தனையோ பணிகள் இருந்த போதும் மனைவியின் ஆசையையும் நிறைவேற்ற வேண்டும் என்று அறிந்து அதற்கும் நேரத்தை ஒதுக்கியுள்ளார்கள்.
"நான் (சிறுமியாக இருந்த போது) பொம்மைகள் வைத்து விளையாடுவேன். எனக்குச் சில தோழியர் இருந்தனர். அவர்கள் என்னுடன் விளையாடிக் கொண்டிருப்பார்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தால் அவர்களைக் கண்டதும் தோழியர் (பயந்து கொண்டு) திரைக்குள் ஒளிந்து கொள்வார்கள்.அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என் தோழியரை என்னிடம் அனுப்பி வைப்பார்கள். தோழிகள் என்னுடன் (சேர்ந்து) விளையாடுவார்கள்." (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா நூல்: புகாரி.)
ஆசையோடு தன் தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹாஅவர்களைக் கடிந்து கொள்ளவும் இல்லை; தடுக்கவும் இல்லை. மாறாக அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வண்ணம் அவர்களின் தோழிகளிடம் மீண்டும் விளையாட அனுப்பியுள்ளார்கள்.
இதைப் போன்று மனைவியின் தோழிகளைப் பார்ப்பதற்கு அவர்களுடன் பேசுவதற்கு அனுமதி கேட்டால் கணவன்மார்கள் அனுமதி அளிக்க வேண்டும். பெற்றோர்களிடம் கூட பேசுவதற்கும் பார்ப்பதற்கும் அனுமதி மறுக்கும் கணவன்மார்கள் நபிகளாரின் இந்த முன்மாதிரியை சிந்திக்க வேண்டும்.

விளையாடுதல்
திருமணம் முடிப்பவர்கள் கணவன் மனைவி அன்புடனும் பாசத்துடனும் இருக்க, தாங்கள் அன்பை வெளிப்படுத்தும் வண்ணம் சிரித்து விளையாடுவதும் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது; ஆர்வப் படுத்தப்பட்டுள்ளது.
"கன்னிப் பெண்ணை மணந்து, நீ அவளுடனும் அவள் உன்னுடனும் கூடிக் குலாவி விளையாடலாமே! நீ அவளுக்கும் அவள் உனக்கும் மகிழ்வூட்டலாமே!'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹுநூல்: புகாரி.)
கணவன் மனைவியுடனும் மனைவி கணவனுடனும் விளையாடு வதற்கும் அன்பை வெளிப்படுத்துவதற்கும் வயது வரம்பு ஏதும் கிடையாது.
"நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் ஒரு பயணத்தில் சென்றேன். அப்போது நான் இளம் வயதுப் பெண்ணாக இருந்தேன். எனக்கு சதை போட்டு உடல் கனத்திருக்க வில்லை. அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்களிடம் (ஓட்டப் பந்தயம் வைத்து) ''முந்தித் செல்லுங்கள்!'' என்றார்கள். அவர்கள் முந்திச் சென்றார்கள். என்னைப் பார்த்து ''வா! உன்னை நான் முந்திச் செல்கிறேன்'' என்றார்கள். அவர்களை முந்திச் சென்று (இறுதியில்) நானே முந்தினேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அமைதியானார்கள்.
எனக்கு சதை போட்டு நான் கனத்து விட்டேன். (ஓட்டப் பந்தயம் விஷயத்தையும்) நான் மறந்து விட்டேன். இன்னொரு முறை அவர்களுடன் ஒரு பயணத்தில் சென்றேன். அப்போதும் மக்களிடம் (ஓட்டப் பந்தயம் வைத்து) ''முந்தித் செல்லுங்கள்!'' என்றார்கள். அவர்கள் முந்திச் சென்றார்கள்.
பின்னர் என்னைப் பார்த்து ''வா! உன்னை நான் முந்திச் செல்கிறேன்'' என்றார்கள். நான் அவர்களுடன் ஓடினேன். (இறுதியில்) என்னை நபிகளார் முந்தி விட்டார்கள். சிரித்துக் கொண்டு ''அதற்கு இது சரியாகி விட்டது'' என்றார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹாநூல்கள்: அஹ்மத், அபூதாவூத்.)
எந்தப் பயணத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது என்ற விவரம் இல்லை. எனினும் குறைந்த பட்சம் நபிகளாரின் வயது என்ன? என்பதை நாம் தெரிந்து கொள்ள முடியும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுடன் கலந்து கொண்ட பயணங்கள் மதீனா வாழ்க்கையில் தான் நடந்துள்ளது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவிற்குப் போகும் போது வயது 53. மதீனா சென்றவுடனே இந்த நிகழ்ச்சி நடந்திருந்தாலும் அவர்களின் வயது 53 ஆக இருக்க வேண்டும்.
நபிகளாரின் வயது (குறைந்த பட்சம்) 53 ஆக இருக்கும் போது தன் மனைவியிடம் ஓட்டப் பந்தயம் வைத்து தோற்றுப் போய், பல வருடங்கள் கழித்து அதை நினைவில் வைத்து வெற்றிக் கொண்டது, மனைவியிடம் கணவன் வயது வரம்பின்றி இதுபோன்று விளையாடி மகிழ்விக்கலாம் என்பதை மிகத் தெளிவாகப் பறை சாற்றுகிறது.
இவ்வாறு நடப்பதும் கணவன், மனைவியிடம் அன்பை அதிகரிக்க உதவும் என்பதை அறியலாம்.