புனித முஹர்ரம் ஒரு பார்வை

    புனிதமான மாதங்களில் ஒன்று


إِنَّ عِدَّةَ الشُّهُورِ عِنْدَ اللَّهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِي كِتَابِ اللَّهِ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ ذَلِكَ الدِّينُ الْقَيِّمُ فَلَا تَظْلِمُوا فِيهِنَّ أَنْفُسَكُمْ وَقَاتِلُوا الْمُشْرِكِينَ كَافَّةً كَمَا يُقَاتِلُونَكُمْ كَافَّةً وَاعْلَمُوا أَنَّ اللَّهَ مَعَ الْمُتَّقِينَ ( (36: 9


நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் - அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை, இது தான் நேரான மார்க்கமாகும் - ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள், இணைவைப்பவர்கள் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போல் நீங்களும் அவர்கள் அனைவருடனும் போர் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். (9:36).


عَنْ أَبِي بَكْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الزَّمَانُ قَدْ اسْتَدَارَ كَهَيْئَتِهِ يَوْمَ خَلَقَ اللَّهُ السَّمَوَاتِ وَالْأَرْضَ السَّنَةُ اثْنَا عَشَرَ شَهْرًا مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ ثَلَاثَةٌ مُتَوَالِيَاتٌ ذُو الْقَعْدَةِ وَذُو الْحِجَّةِ وَالْمُحَرَّمُ وَرَجَبُ مُضَرَ الَّذِي بَيْنَ جُمَادَى وَشَعْبَانَ (البخاري).


''நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் - அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை, இது தான் நேரான மார்க்கமாகும் - ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள், இணைவைப்பவர்கள் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போல் நீங்களும் அவர்கள் அனைவருடனும் போர் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். (9:36).

     ஆரம்பத்தில் கடமையாக இருந்தது:


أَنَّ عَائِشَةَ رَضِي اللَّه عَنْهَا قَالَتْ كَانَ يَوْمُ عَاشُورَاءَ تَصُومُهُ قُرَيْشٌ فِي الْجَاهِلِيَّةِ وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُهُ فَلَمَّا قَدِمَ الْمَدِينَةَ صَامَهُ وَأَمَرَ بِصِيَامِهِ فَلَمَّا فُرِضَ رَمَضَانُ تَرَكَ يَوْمَ عَاشُورَاءَ فَمَنْ شَاءَ صَامَهُ وَمَنْ شَاءَ تَرَكَهُ (البخاري, ومسلم) 1863

குறைஷிகள் அறியாமை காலத்தில் ஆஷூரா தினம் நோன்பு நோற்பவர்களாக இருந்தனர், நபியவர்களும் அன் நாளில் நோன்பு நோற்றார்கள். நபியவர்கள் மதீனாவுக்கு வருகை தந்ததன் பின், தானும் அன் நாளில் நோன்பு நோற்றதோடு ஸஹாபாக்களையும் ஏவினார்கள். ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்டதன் பின் ஆஷூரா நோன்பை விட்டு விட்டார்கள். உங்களில் நாடியவர்கள் (ஆஷூரா) நோன்பை நோற்கலாம், நாடியவர்கள் விடலாம் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, ஆதாரம்: முத்தபகுன் அலைஹி).

عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ فَوَجَدَ يَهُودَ يَصُومُونَ يَوْمَ عَاشُورَاءَ فَقَالَ مَا هَذَا فَقَالُوا هَذَا يَوْمٌ عَظِيمٌ يَوْمَ نَجَّى اللَّهُ مُوسَى وَأَغْرَقَ آلَ فِرْعَوْنَ فَصَامَهُ مُوسَى شُكْرًا قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِنِّي أَوْلَى بِمُوسَى وَأَحَقُّ بِصِيَامِهِ فَصَامَهُ وَأَمَر بِصِيَامِهِ (أحمد).

நபி யவர்கள் மதீனாவுக்கு வந்து போது யூதர்கள் ஆஷுரா நாளில் நோன்பிருப்பதைப் பார்த்தார்கள். இது என்ன? என நபியவர்கள் யூதர்களிடம் கேட்டார்கள் அதற்கு அவர்கள் இது ஒரு மகத்தான நாளாகும், இது போன்ற ஒரு நாளில் தான் அல்லாஹ் மூஸாவை பாதுகாத்தான், பிஃர்அவ்னின் கூட்டத்தாரை மூல்கடித்தான். மூஸா நன்றி செலுத்தும் விதமாக நோன்பு நோற்றார் என்றனர். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நிச்சயமாக நான் மூஸாவுக்கும், அந்த நோன்பிருப்பதற்கும் மிகத் தகுதியுடையவன் நபியவர்கள் நோன்பு நோற்றார்கள், ஸஹாபாக்களையும் ஏவினார்கள்'' (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, அஹ்மத்).

      முஹர்ரம் மாத நோன்பின் சிறப்பு:


عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَفْضَلُ الصِّيَامِ بَعْدَ رَمَضَانَ شَهْرُ اللَّهِ الْمُحَرَّمُ وَأَفْضَلُ الصَّلَاةِ بَعْدَ الْفَرِيضَةِ صَلَاةُ اللَّيْلِ (مسلم).


ரமழானுக்குப் பின் சிறந்த நோன்பு முஹர்ரம் மாத நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பின் சிறந்த தொழுகை இரவுத் தொழுகையாகும்'' என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைரா ரளியல்லாஹு அன்ஹு, முஸ்லிம்).

...... 
ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثٌ مِنْ كُلِّ شَهْرٍ وَرَمَضَانُ إِلَى رَمَضَانَ فَهَذَا صِيَامُ الدَّهْرِ كُلِّهِ صِيَامُ يَوْمِ عَرَفَةَ أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ وَالسَّنَةَ الَّتِي بَعْدَهُ وَصِيَامُ يَوْمِ عَاشُورَاءَ أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ (مسلم).
 
பின் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ''ஒவ்வொரு மாதமும் மூன்று நோன்புகள் ஒரு ரமழானிலிருந்து மற்றொரு ரமழான் வரை செய்வது காலம் முழுக்க நோன்பு நோற்பதைப் போன்றாகும். அரஃபா நாள் நோன்பு கழிந்த ஒரு வருடத்தின், வரும் ஒரு வருடத்தின் பாவங்களுக்குப் பரிகாரமாகும் என எண்ணுகிறேன். ஆஷூரா தின நோன்பு வரும் வருடத்தின் பாவங்களுக்குப் பரிகாரம் என எண்ணுகின்றேன்'' என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ கதாதா ரளியல்லாஹு அன்ஹு, முஸ்லிம்).

     யூதர்களுக்கு மாற்றம்:


عَنْ جَدِّهِ ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صُومُوا يَوْمَ عَاشُورَاءَ وَخَالِفُوا فِيهِ الْيَهُودَ صُومُوا قَبْلَهُ يَوْمًا أَوْ بَعْدَهُ يَوْمًا (أحمد).

''நீஙகள் ஆஷூரா தினத்தில் நோன்பிருங்கள். நீங்கள் யூதர்களுக்கு மாற்றம் செய்யும் விதமாக அதற்கு முன்னாலோ பின்னாலோ ஒரு நாள் நோன்பிருங்கள்.''ன் நபிகள் நாயகம் ஸல்லல்லா ஹு அலைஹி வஸல்லம் அவர்கள்கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, அஹ்மத்).

سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا يَقُولُا حِينَ صَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ عَاشُورَاءَ وَأَمَرَ بِصِيَامِهِ قَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّهُ يَوْمٌ تُعَظِّمُهُ الْيَهُودُ وَالنَّصَارَى فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِذَا كَانَ الْعَامُ الْمُقْبِلُ إِنْ شَاءَ اللَّهُ صُمْنَا الْيَوْمَ التَّاسِعَ قَالَ فَلَمْ يَأْتِ الْعَامُ الْمُقْبِلُ حَتَّى تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (أحمد).


ஆஷூரா தினத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோன்பு நோற்றார்கள், ஸஹாபாக்களையும் நோன்பு நோற்குமாறு ஏவினார்கள். இது யூதர்களும், கிறிஸ்தவர்களும் புனிதப்படுத்துகின்ற ஒரு நாளாயிற்றே என்று கூறப்பட்ட போது நாம் வரக்கூடிய வருடம் பிறை ஒன்பதிலும் நோன்பிருப்போம் எனக்கூறினார்கள். ஆனால் நபியவர்கள் அதற்கு முன்னரே மரணித்துவிட்டார்கள்'' (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, அஹ்மத்).


     இஸ்லாமிய ஆண்டின் முதல் மாதம்


''முஹர்ர்ரம்'' இஸ்லாமிய ஆண்டின் முதல் மாதமாகும் முஹர்ரம். முற்காலம் தொட்டு அரபிகள் இம்மாதத்தைப் புனித மாதங்களில் ஒன்றாகக் கொண்டிருந்தனர். முஹர்ரம் என்னும் அரபிச் சொல்லிற்கு ''விலக்கப்பட்டது'' என்று பொருள். முஹர்ரம், ஹராம்,ஹரம், ஹுரும், தஹ்ரீம, இஹ்ராம் என்ற சொற்கள் ஒரே வேர் சொல்லிலிருந்து பிறந்த சொற்களாகும். பாவங்கள் அல்லது செய்யக்கூடாதவைகளை செய்வதை விட்டும் தடுக்கப்படுவதால் விலக்கப்பட்டது, தடுக்கப்பட்டது,என்றும் விலக்கப்பட்டதை செய்வதைவிட்டும் தடுக்கப்படுவதால் அச்செயல் புனிதமானது என்றும், தடுக்கப்படும் இடம் புனிதமான இடம் என்றும் பொருள் கொள்ளப்படுகிறது.

(-ம் : தொழுகைக்கு முன் செய்யப்படும் செயல்கள் தொழுகையில் தடுக்கப்படுவதால் ''தக்பீர் தஹ்ரீம்'' என்றும், உம்ரா, ஹஜ்ஜுக்குமுன் அனுமதிக்கப்படுவை இஹ்ராமுக்கு நிய்யத் செய்ததும் தடுக்கப்படுவதால் ''இஹ்ராம்'' என்றும், ஹரம் எல்லைக்கு வெளியே செய்யப்படும் பாவமானவை- விலக்கப்பட்டவை- ஹரம் எல்லையில் தடுக்கப்படுவதால் ''ஹரம்''-புனித எல்லை- என்றும், ''மஸ்ஜிதுல்ஹராம்''- புனிதமான பள்ளி வாசல்-என்றும் சொல்லப்படுகிறது.)

     புனித மாதங்கள்-அஷ்ஹுருல் ஹுரும்



வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாகும். அவற்றுள் நான்கு மாதங்கள் புனிதமானவை ஆகும். (அல்-குர்ஆன் 9:36) எனத் திருமறை கூறுகிறது. அவை துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய மாதங்களாகும்.
இந்நான்கு மாதங்கள் புனிதமிக்கவை என்னும் போது ஏனைய மாதங்கள் சிறப்புக்குரியவை அல்ல என்பது பொருளல்ல. ஏனெனில் ரமளான் என்னும் மாண்பார் மாதம் இதில் தான் வருகிறது.இந்நான்கு மாதங்களை நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் காலம் முதல் மக்கள் புனிதமானவையாகக் கருதி வந்தனர்.

ஒருவர் அறியாமல் செய்த தீங்கையும் தம் மானம் அழிக்கும் பெரும் குற்றமாகக் கொண்டு அதற்காக பழி வாங்குவதில் தம் காலத்தையெல்லாம் கழித்து வந்தவர்கள் அரபிகள். கொலை,கொள்ளை போன்ற மாபாதகச் செயல்களை செய்வதற்கு அவர்கள் கொஞ்சமும் தயங்காதவர்கள்.இந்த ஓயாச்சண்டைகளிலும் ஒழியாச் சச்சரவுகளிலும் ஈடுபட்டிருந்த அவர்களை தடுப்பதற்கு இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாதங்களே இந்நான்கு மாதங்களும். அவற்றுள் முதன்மையானதே முஹர்ரம் மாதமாகும்.
குறிப்பாக இந்த மாதத்தில் தமது சண்டை சச்சரவுகளை விலக்கிவைத்திருப்பதால் தான் விலக்கப்பட்டது என்ற பொருள் கொண்ட ''முஹர்ரம்' என்ற பெயர் இதற்கு ஏற்பட்டது. இவ்விதம் அக்கால அரபிகள் தமது உணர்ச்சிகளையும், வாளையும் உறையுள் போடத்தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் இந்த மாதத்தை ஒரு புனித மாதமாகக் கருதியது தான்.
இந்த மாதத்தில் தான் ''ஆஷூரா'' என்னும் நாள் வருகிறது. இந்த ''ஆஷூரா'' என்னும் சொல் ஹீப்ரு மொழிச் சொல்லாகும். அதாவது ''பத்தாவது நாள்'' என்பது பொருளாகும். யூதர்களின் பத்தாவது நாளுக்கு இப்பெயர் இருந்து வருகிறது. யூதர்களின் ''திஷ்ரி'' மாதமும் அரபிகளின் ''முஹர்ரம்'' மாதமும் இணையாக வருபவையாகும். திஷ்ரி மாதத்தின் பத்தாம் நாளே முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளாகும்.யூதர்கள் இந்த பத்தாம் நாளில் நோன்பு நோற்கும் வழக்க முடையவர்களாக இருந்தனர்.



நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவைத் துறந்து மதீனா வந்தபோது இப்பழக்த்தைக் கண்டதும் அதற்குரிய காரணத்தை அவர்களிடம் கேட்டனர். அதற்கு ''நானே இறைவன்'' எனக் கூறிய பிர்அவ்னையும் அவனுடைய படையினரையும் இறைவன் செங்கடலில் மூழ்கடித்ததும் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களையும் அவர்களின் மக்களையும் காத்தருளியதும் அந்நாளில்தான் என்றும் அந்த நன்றியை நினைவுகூர மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அந்நாளில் நோன்பு நோற்றனர் என்றும் அதனையே தாங்களும் பின்பற்றுவதாகவும் கூறினர்.
அதைக்கேட்ட மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் , ''அவ்விதமாயின் நானும் என் மக்களும் தாம் உங்களையும்விட மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள்'' என்று கூறி அது முதல் தாங்களும் நோற்று தம் மக்களையும் அவ்வாறே நோன்பு நோற்குமாறும் பணித்தனர். அது மட்டுமன்றி ''வரும் ஆண்டும் நான் இவ்வுலகில் வாழ்ந்தால் முஹர்ரம் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்பேன்'' என்றும் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு. ஆதாரம்: முஸ்லிம்)

மறுமையில் வெற்றி பெற அமல்கள் மற்றும் பொதுமா?

  1. ஏக இறைவனின் திருப்பெயரால்
  • நாம் அன்றாட கடைபிடிக்கின்ற இறைவன் நம் மீது கடமையாக்கி இறுக்கின்ற வணக்க வணக்க வழிபாடுகளான தொழுகை நோன்பு ஜகாத் மற்றும் ஹஜ் போன்ற காரியைங்களை நாம் செய்யும் நோக்கமெல்லாம் அது இறைக்கட்டளை என்பதுடன் நாம் மறுமையில் வெற்றி பெற்று சொர்க்கத்தைப் பெற வேண்டும் என்று தான் இறைவன் நம் மீது கடமையக்கி இறுக்கின்ற வணக்க வழிபடுகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான கூலிகளை நமக்கு வழங்கவுள்ளான் யார் அதிகமான இறைக்கட்டளைகளை நிறைவேற்றி அதிகமான நன்மைகளைப் பெறுகிறார்களோ அவர்கள் தான் மறுமையில் வெற்றி பெற முடியும் இதை இறைவன் தன் திருமறையில் இவ்வாறு கூருகின்றன் 

  • யாருடைய எடைகள் கனமாக இருக்கின்றனவோ அவர் திருப்தியான வாழ்க்கையில் இருப்பார்.
    யாருடைய எடைகள் இலேசாக உள்ளனவோ அவர் தங்குமிடம் ஹாவியாவாகும்
    ஹாவியா என்றால் என்னவென்று உமக்கு எப்படித் தெரியும்?
    (அது) சுட்டெரிக்கும் நெருப்பாகும்
    அல்குர்ஆன் 101 6 7 8 9 10 11


    இப்படி மறுமை வெற்றியை தீர்மானிக்கக்கூடிய நன்மையான காரியைங்களை ஒருவர் செய்வதன் மூலம் மட்டுமே சொர்க்கத்தை பெற முடியுமா என்றால் ஒருபோதும் நன்மையான
    காரியங்கள் மட்டுமே மறுமை வெற்றியைத் தீர்மானிக்கப் போதுனமானதில்லை நன்மையான காரியங்களுடன் இறைவனின் தனிப்பெருங்கருனை இருந்தால் மட்டுமே மறுமையில் ஒருவர் வெற்றி பெற முடியும் என்பதை இறைத்தூதர் நபி (ஸல்)அவர்கள் கூருகிறார்கள்

    . இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
  •  
    நேர்மையோடு (நடுநிலையாகச்) செயல்படுங்கள். நிதானமாகச் செயல்படுங்கள். (வரம்பு மீறிவிடாதீர்கள்) அறிந்து கொள்ளுங்கள். உங்களில் யாரையும் அவரின் நற்செயல் சொர்க்கத்தில் ஒருபோதும் நுழைவிக்காது. (மாறாக, அல்லாஹ்வின் தனிப்பெரும் கருணையாலேயே எவரும் சொர்க்கம் புகமுடியும். நற்செயல்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது. (எண்ணிக்கையில்) மிகவும் குறைவாக இருந்தாலும், (தொடர்ந்து செய்யப்படும்) நிலையான நற்செயலே ஆகும். 
    என ஆயிஷா(ரலி) அறிவித்தார் புஹாரி 6464 


    . அபூ ஹுரைரா(ரலி) அவாக்ள் கூறினார்
    இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'எவரையும் அவரின் நற்செயல் சொர்க்கத்தில் ஒருபோதும் நுழைவிக்காது(; மாறாக, அல்லாஹ்வின் தனிபெரும் கருணையாலேயே எவரும் சொர்க்க புகமுடியும்)' என்று கூறினார்கள்
      புஹாரி 5673


    அருட்கொடைகளுக்கு வணக்க வழிபாடுகள் ஈடாகாது

    . நீங்கள் கேட்ட ஒவ்வொன்றையும் அவன் உங்களுக்கு வழங்கினான். அல்லாஹ்வின் அருட்கொடையை நீங்கள் எண்ணினால் அதை உங்களால் எண்ணி முடியாது. மனிதன் அநீதி இழைப்பவன்; நன்றி கெட்டவன்
      குர்ஆன் 14 34


    சாதரனமாக நாம் ஒரு வேலைக்கு வழங்கப்படும் கூழியைத்தான் உழைப்புக்கேற்ற ஊதியம் என்போம் இதையே இறைக்கட்டளையை நாம் நிறைவேற்றும்போது இறைவன் நமக்கு மறுமையில் வாக்களித்திருக்கின்ற இன்பங்களுக்கும் பரிசுகளுக்கும் பொருத்திப்பார்போமென்றால் அந்த எண்ணிலடங்கா இன்பங்களுக்கு இந்த உழைப்பு ஈடாகுமா என்றால் இந்த அற்ப உலகத்தில் இறைவன் நமக்கு வழைங்கியிருக்கின்ற அருட்கொடைகளுக்குக் கூட அவை ஈடாகாது என்பதுதான் சரியாகும் ஏனென்றால்
    இந்த உலகத்தில் ஐம்பது வயது வரை வாழக்கூடிய ஒருவர் தனது வாழ்நளின் பெரும்பகுதியான நாற்பத்தி ஒன்பது வயது வரைக்கும் மிகவும் ஆரோக்கியமாகா வாழ்ந்து விட்டு தனது ஐம்பதாவது 
  • வயதில் நோய்வாய்ப்பட்டார் என்று வைத்துக்கொள்வோம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஒரு சிருநீரகம் செயலிலந்து விட்டது என்றால் மாற்று சிருநீரகம் போருத்துவதற்க்கு அவர் தன் வாழ்நாள் முழுவதும் சம்பாதித்த பணம் கூட போதுமனாதாக இல்லாமல் போகலம் அந்த அளவிற்க்கு ஒரு சிருநீரக்த்தின் விலை இருக்கும் அவரின் மனைவி மக்கள் உற்றார் உறவினர்கள் யாரவது சிரு.நீரகம் தரமுன்வந்தால் கூட அதைப்பொருத்துவதற்க்கு ஆகும் செலவுமே ஏராளம் அப்படிப் பொருத்தினால் கூட அவர் பழைய நிலையில் ஓடியடி நடக்க உழைக்க முடியுமா என்றால் கண்டிப்பாக முடியாது நடைபினமாக வாழ்.ந்து விட்டுப் போகலாம் அவ்வளவுதான் இப்போழுது சி.ந்தித்து பாருங்கள் அவர் தனது நாற்பத்தி ஒன்பது வயது வரைக்கும் சல்லிக்காசு
    செலவில்லமால் சிரநீரகத்தை சீராக இயக்கி சுகமாக வாழவைத்த அந்த இறைவனின் அருட்கொடைக்கு நம் வாழ் நாளில் மிக சொற்பமான நேரத்தில் செய்யப்ப்ட்ட வண்க்கவழிபாடுகள் ஈடாகுமா என்பதை அதேபோல் ஒருவருக்கு திடிரென மூச்சுத்தினரல் ஏற்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார் என்றால் அவர் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை அவர் சுவாசிப்பற்க்காக கொடுக்கப்ப்ட்ட ஆக்ஸிஜனுக்குக் கூட சிலிண்டர் இவ்வளவு என்று பணம் கொடுக்கவேண்டி வரும் இதைச்சிந்தனை செய்வோம் என்றால் நம்முடைய வாழ்/நாளில் இவ்வளவு காலம் எந்தச்செலவுமின்றி காற்றைச் சுவசிக்கத்தந்த அந்த இறைவனின் அருட்கொடைகளுக்கு நமது வணக்க வழிபடுகள் ஈடாகுமா என்று

     நாம் ஒருவருக்கொருவர் இறைவனின் கருனையை வேண்டுதல்

    முஃஸ்லீம்களாகிய நாம் ஒருவரையொருவர் ச/ந்தித்துதக் கொள்ளும்போது சொல்லிக்கொள்கிற சலாமில் கூட தன்னுடைய கருனையை வேண்டுமறுதான் இறைவன் கட்டளையிடுகின்றான்
    இறைவன் முதல் மனிதரான ஆதம் அலை அவர்களைப் படைத்து அவர்களை வானவர்களிடம் அனுப்பிவைத்து அவர்களுக்கு முகமன் சொல்லச்சொல்கிறன் அவர்களும் மலக்குகளிடம் சலாம் சொல்கிறார்கள் அதற்க்கு மலக்குகள் பதில் சொல்லும்பொழுது உங்கள்மீது சாந்தியும் இறைவனின் கருனையும் உண்டாகட்டும் என்று தான் பதில் சொன்னார்கள்  

  • . இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
    அல்லாஹ் (முதல் மனிதர்) ஆதமை அவருக்கே உரிய (அழகிய) உருவத்தில் படைத்தான். அப்போது அவர்களின் உயரம் அறுபது முழங்களாக இருந்தது. அவர்களைப் படைத்தபோது, 'நீங்கள் சென்று, அங்கு அமர்ந்துகொண்டிருக்கும் வானவர்களுக்கு சலாம் (முகமன்) கூறுங்கள். அவர்கள் உங்களுக்குக் கூறும் (பதில்) வாழ்த்தைக் கேட்டுக் கொள்ளுங்கள். ஏனெனில், அதுதான் உங்களின் முகமனும் உங்கள் சந்ததிகளின் முகமனும் ஆகும்' என்று இறைவன் சொன்னான். அவ்வாறே ஆதம்(அலை) அவர்கள் (வானவர்களிடம் சென்று), 'அஸ்ஸலாமு அலைக்கும்' (உங்களுக்கு சாந்தி நிலவட்டும்) என்று (முகமன்) சொன்னார்கள். 'சாந்தியும் இறைவனின் கருணையும் (உங்களின் மீது நிலவட்டும்)' என்று வானவர்கள் பதில் கூறினார்கள். அவர்கள் (தங்கள் பதிலில்) 'இறைவனின் கருணையும்' என்பதை அதிகப்படியாகச் சொன்னார்கள். எனவே, (மறுமை நாளில்) சொர்க்கத்தில் நுழைபவர்கள் ஒவ்வொருவரும் ஆதம்(அலை) அவர்களின் உருவத்தில் தான் நுழைவார்கள். ஆதம் (அலை) அவர்களின் காலத்திலிருந்து இன்று வரை (மனிதப்) படைப்புகள் (உருவத்திலும் அழம்லும்) குறைந்து கொண்டேவருகின்றன.
    என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். புஹாரி 6227
  •  
     நபி ஸல் அவர்களின் பிரார்த்தனை 

  •  நபி ஸல் அவர்கள் யாருக்காவது பிரார்த்தித்தால் அவருக்கு இறைவனின் கருனையை வேண்டித்தான் பிரார்த்திப்பர்கள் 

  •  அம்ர் இப்னு முர்ரா(ரஹ்) அறிவித்தார்.
    அந்த மரத்தின(டியில் பைஅத்துர் ரிள்வான் செய்தவ)ர்களில் ஒருவரான அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) சொல்ல கேட்டேன்.
    எவரேனும் ஒரு கூட்டத்தினர் தம் ஸகாத் பொருள்களைக் கொண்டு வந்தால் நபி(ஸல்) அவர்கள், 'இறைவா! இவர்களின் மீது கருணை புரிவாயாக!" என்று பிரார்த்திப்பது வழக்கம். என் தந்தை (அபூ அவ்ஃபா(ரலி) தம் ஸகாத்தைக் கொண்டு வந்தார். அப்போது 'இறைவா! அபூ அவ்ஃபாவின் குடும்பத்தினருக்குக் கருணை புரிவாயாக!" என்று பிரார்த்தித்தார்கள். புஹாரி 4166
  •  
    . ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
  •  
    நபி(ஸல்) அவர்கள் ஒருவர் பள்ளிவாசலில் குர்ஆன் ஓதுவதைக் கேட்டு, 'அல்லாஹ் அவருக்குக் கருணை புரியட்டும். நான் இன்னின்ன அத்தியாயத்திலிருந்து (சற்று) மறந்து விட்டிருந்த இன்னின்ன வசனத்தை எனக்கு அவர் நினைவூட்டிவிட்டார்" என்று கூறினார்கள். 
    ஆயிஷா(ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பில் பின்வரும் வரிகள் அதிகப்படியாக இடம் பெற்றுள்ளன: 
    நபி(ஸல்) அவர்கள் என் வீட்டில் தஹஜ்ஜுத் தொழுகை தொழுதார்கள். அப்பாத் இப்னு பிஷ்ர்(ரலி) பள்ளிவாசலில் தொழுது கொண்டிருக்க, அவரின் (குர்ஆன் ஓதுகின்ற) குரலைச் செவிமடுத்து (என்னிடம்), 'ஆயிஷாவே, இது அப்பாதின் குரலா?' என்று கேட்டார்கள். 'ஆம் (இது அப்பாதின் குரல் தான்)" என்று நான் பதிலளித்ததும் நபி(ஸல்) அவர்கள், 'இறைவா! அப்பாதிற்குக் கருணை செய்" என்று பிரார்த்தித்தார்கள்.
  •                                                                                            புஹாரி 2655 

    அதே போல் நபி ஸல் அவர்கள் யாருக்காவது எதிராக பிரார்தித்தாலும் இறைவா இவரை உன் கருனையைலிருந்து அப்புறப்படுத்துவாயாக என்று தான் பிரார்த்திப்பர்கள்


     இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்
  •  
    நபி(ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபாவில் உருவப்படங்களைப் பார்த்தபோது அவற்றை அழிக்கும்படி உத்திரவிட்டு 
  • அவ்வாறே அவை அழிக்கப்பட்ட பின்புதான் அதனுள் நுழைந்தார்கள். இப்ராஹீம்(அலை) அவர்களையும் அவர்கள் தம் கையில் குறி சொல்லும் அம்புகளைப் பிடித்தபடி இருக்கும் நிலையில் (உருவங்களாகப்) பார்த்தார்கள். உடனே, 'அல்லாஹ் தன் கருணையிலிருந்து அவர்களை (குறைஷிகளை) அப்புறப்படுத்தவானாக! அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் இருவரும் ஒருபோதும் அம்புகளின் மூலம் குறி பார்த்ததில்லை" என்று கூறினார்கள். புஹாரி. 3352
    'நபி(ஸல்) அவர்கள் எழாமல்போன அந்த நோயின்போது, 'அல்லாஹ் யூதர்களைத் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக. அவர்கள் தங்களின் இறைத்தூதர்களின் அடக்கத் தலங்களை வழிபாட்டுத் தலங்களாக்கிவிட்டார்கள்" என்றார்கள். நபி(ஸல்) அவர்களின் இந்த அறிவிப்பு இல்லையானால் அவர்களின் அடக்கத் தலம் வெளிப்படையாக அமைக்கப்பட்டிருக்கும். 'தம் அடக்கத் தலம் எங்கே வணக்கத் தலமாக்கப்பட்டுவிடுமோ' என்று அவர்கள் அஞ்சினார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார் புஹாரி. 4441.
  •  
    நபி ஸல் அவர்களுக்குக்கூட இறைவனின் கருணைதான் அவசியம் 


    மறுமையில் வெற்றி பெற வணக்கவழிபாடுகளோடு இறைவனின் கருணை எந்த அளவிற்க்கு முக்கியமானாதென்பதை புரிய நபி ஸல் அவர்கள் தங்களைப் பற்றி கூறிய செய்தியே சிறந்த
    சான்றகும் .

  • அபூ ஹுரைரா(ரலி) அவாக்ள் கூறினார்
    இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'எவரையும் அவரின் நற்செயல் சொர்க்கத்தில் ஒருபோதும் நுழைவிக்காது(; மாறாக, அல்லாஹ்வின் தனிபெரும் கருணையாலேயே எவரும் சொர்க்க புகமுடியும்)' என்று கூறினார்கள்.
    மக்கள், 'தங்களையுமா (தங்களின் நற்செயல் சொர்க்கத்தில் நுழைவிப்பதில்லை), இறைத்தூதர் அவர்களே?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், '(ஆம்) என்னையும் தான்; அல்லாஹ் (தன்னுடைய) கருணையாலும் அருளாளலும் என்னை அரவணைத்துக் கொண்டால் தவிர' என்று கூறிவிட்டு, 'எனவே, நீங்கள் நேர்மையோடு (நடு நிலையாகச்) செயல்பாடுங்கள். நிதானமாக நடந்துகொள்ளுங்கள். உங்களில் எவரும் மரணத்தை விரும்பிட வேண்டாம். ஒன்று அவர் நல்லவராக இருப்பார்; அவர்(உயிர் வாழ்வதன் மூலம்) நன்மையை அதிகமாக்கிக் கொள்ளலாம். அல்லது அவர் தீயவராக இருப்பார்; அவர் (உயிர் வாழ்வதால்) மனம் திருந்தக்கூடும்' என்று கூறினார்கள         ் புஹாரி. 5673


    மேலும் இறைவனின் கருணையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக நபி ஸல் அவர்கள் தனது மரணத்தருவாயில் பிரார்த்திப்பதைப் பாருங்கள் 

    . ஆயிஷா(ரலி) கூறினார்
    நபி(ஸல்) அவர்கள் (இறப்பதற்கு முன்பு) என் மீது சாய்ந்தபடி, 'இறைவா! எனக்கு மன்னிப்பளிப்பாயாக. எனக்குக் கருணை புரிவாயாக. மிக்க மேலான தோழர்களுடன் (சொர்க்கத்தில்) என்னைச் சேர்த்தருள்வாயாக' என்று பிரார்த்திப்பதை செவியுற்றேன் புஹாரி 5674 


    இறைக்கருணை இருந்தால் சிறிய செயலுக்குக்கூட சொர்க்கம்

    இறைவன் ஒருவருக்குக் கருணை புரிய நாடிவிட்டால் அவரின் சிறிய செயலுக்குக்கூட சொர்க்கத்தை தருவான் என்பதை கீழ்க்கானும் நபிமொழிகளிகலிருந்து அறியலாம்

    'ஒரு நாய் தாகத்தின் காரணமாக ஈர மண்ணை (நக்கி) சாப்பிடுவதை ஒருவர் பார்த்தார். உடனே அவர், தான் அணிந்திருந்த காலுறையை எடுத்து அதில் தண்ணீர் மொண்டு அந்நாய் தாகம் தீரும் வரை கொடுத்தார். எனவே அல்லாஹ் அம்மனிதருக்கு கருணை காட்டி அவரைச் சுவர்க்கத்தில் புகத்தினான்' என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்று என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். புஹாரி 173
    மேலும் அல்லாஹ்வின் கருனையைப் பற்றி நபி ஸல் கூறுகையில்

  • . இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
    அல்லாஹ் படைப்புகளை படைத்தபோது (தன்னுடைய) அரியாசனத்தின் மீது வைக்கப்பட்டிருந்த தன்னுடைய பதிவேட்டில், 'என் கருணை என் கோபத்தை வென்றுவிட்டது' என்று (கருணையைத்) தனக்கு.த்தானே விதியாக்கிக் கொள்ளும் வகையில் எழுதினான்.
    இதைஅபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் புஹாரி 7404
     எனவே நாமும் அந்த கருனையாளனிடம் தொழுகையிலும் மற்ற மற்ற பிரார்த்தனையிலும் இறைவனின் கருணையை அதிகமதிகம் வேண்டக்கூடியவர்களாக ஆகவேண்டும் அதன் மூலம் மறுமையில் வெற்றிபெற்றவர்களாக நாம் அனைவரையும் அ/ந்தக் கருணையலார்களுக்கெல்லாம் கருனையாளனான அல்லாஹ் ஆக்கியருள்புரிவானாகா
  • அல்லாஹ் மிக அறிந்தவன்

மனைவிக்கு மட்டுமா உபதேசம்?



'ஒரு மனிதன் பாவியாகிவிட, அவன் உணவளிக்க கடமைப்பட்டவரு(மனைவி)க்கு உணவளிக்காமல் கடமை தவறுவது போதுமாகும்.' (நூல்: அபூதாவூது.)
ஒரு பெண்ணுக்கு திருமணமாகிவிட்டால் அவள் கரம்பிடித்த கணவனுக்கு கட்டுப்பட்டு நடந்து அவனது கௌரவத்தையும், குடும்ப கண்ணியத்தையும் காப்பது அவளது கடமை என்பதில் இருகருத்தில்லை.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்ற, "நல்ல பெண் எவரென்றால், கணவன் அவளைக் காணும்பொழுது மகிழ்விப்பாள். அவன் கட்டளையிட்டால் கீழ்படிந்து நடப்பாள். தனது விஷயத்திலும்; தமது பொருள் விஷயத்திலும் கணவனுக்கு விருப்பமில்லாத போக்கை கடைப்பிடிக்க மாட்டாள்!' என்ற நபிமொழிக்கொப்ப, ஒரு பெண் பணிந்து வாழ்ந்தால்தான் அவள் சிறந்த பெண்மணி என்ற நற்பெயரை அடைய முடியும். கண்ணியம் வாய்ந்த கணவனை அவமதிக்கும் வகையிலும் பெற்ற பிள்ளைகளை நிராதரவாக விட்டும் ஒரு பெண் வாயடித்துக்கொண்டும், வம்பளத்துக்கொண்டும், அடங்காப்பிடாரியாக சுற்றியளைந்தாள் என்றால்…ஊர்மக்கள், இவளா? ராட்சசியாயிற்றே! வாயாடியாயிற்றே பெண்ணுருவில் நடமாடும்…ஆயிற்றே! என்றெல்லாம் (அவள் காதில் விழாதவாறு) பேசத் தலைப்படுவர். இத்தகைய பெண்களை நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கடிந்துரைத்துள்ளார்கள்.
'கணவனுக்கு மாறு செய்வதன் மூலமும் வந்தபடி பிறரை சாபமிடுவதன் மூலமும் அனேக பெண்கள் நரகம் புகுத நான் கண்டேன்' என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். ஆக, ஒரு கணவன் தமது மனைவியுடன் இன்புற்று வாழ அப்பெண் நடந்துகொள்ள வேண்டிய ஒழுக்க முறைகள், சட்டமுறைகள், வழிபாட்டு முறைகள் பற்றி இஸ்லாம் நன்குரைத்துள்ளது. இதன்படி வாழ்வது இஸ்லாமிய பெண்ணின் கடமையாக இருக்கிறது.
ஆயினும் ஒரு பெண்ணுக்கு இஸ்லாம் கூறிய அளவு அறிவுரைகளை, அவளைக் கரம்பிடித்த கணவனுக்கு எடுத்துரைக்கவில்லையா? என்ற கேள்விக்கணை பல ஊர் முஸ்லிம் பெண்கள் தரப்பிலிருந்து எழுந்தவாறுள்ளது. இவ்வாறு இவர்கள் கேள்வி எழுப்ப நியாயமான காரணங்களும் உள்ளன.


இஸ்லாமிய மார்க்கத்தில் ஒரு பெண் எப்படி குடும்பம் நடத்த வேண்டும்? ஒழுக்கம் பேண வேண்டும்? கணவனையும், குழந்தைகளையும், அண்டை அயலாரையும் அவள் எப்படி ஆதரிக்க வேண்டும் என்பதற்கான பெண்ணுபதேசங்கள் நிறைய உள்ளன. அவை ஒவ்வொரு ஊரிலும் பிசங்கங்களில் உபதேசிக்கப்படுகின்றன. ஆனால், இவைபோன்ற அறிவுரைகள் கணவனுக்கும் அதிகம் இருந்தும் கணவனுக்கு செய்யும் உபதேசங்கள் குறைவாக உள்ளன.! இது ஏன்? ஏன்ற கேள்வியை பேண்கள் கேட்கின்றனர்.
தவிர, ஒரு சில குடும்பங்களில் சில கணவன்களால் குடும்பப்பெண்கள் கடும் பிரச்சனைக்கும் தொல்லைக்கும் ஆளாகி, அவனது கொடும்பிடியில் நரக வாழ்க்கையை அனுபவிக்க வேண்டிய நிலை. ஒரு சில கணவன்கள் பெண்களை அடிமைகளைப்போலெண்ணி இழிவுபடுத்துகின்றனர். இன்னும் பலர் தமது குடும்பப்பொறுப்பை எண்ணி சம்பாதிக்காமல் மாமனார் வீட்டை உறிஞ்சிக்கொண்டு மிடுக்குடன் பவனி வருகின்றனர். மற்றும் சிலர் மணமுடித்த கையோடு பெண்ணை அந்தரத்தில் விட்டு திரும்பிப்பாராமல் தலைமறைவாகி விடுகின்றனர். வேறு சிலரிடம் சொல்ல முடியாத உடல்கூறு நோய்கள், கடும் பிணிகள் இருப்பதால் பெண்கள் தமது சுகமான வாழ்வை இழக்கும் நிலை!
இப்படி எத்துனையோ வெகு மோசமான குற்றங்கள் குறைகள் பல கணவன்களிடம் உண்டு. இதில், தந்தை, நாத்திகளின் அவதூறுகளையும் கிசுகிசுப்புகளையும் காதில் போட்டுக்கொண்டு அமைதியின் வடிவங்களாகத் திகழும் பெண்மணிகளை அணுஅணுவாக இம்சித்து சித்ரவதை செய்யும் கொடும்பாவிகளும் உண்டு. ஊர்தோறும் இப்படிப்பட்ட அவஸ்தைகளால் மனம் குமைந்து குமுறி அவதியுறும் அபலைப் பெண்களின் ஈனஸ்வரங்கள்தான் சில சமயம் கேள்விக்கணைகளாக மாறுகிறது.
அதாவது, பெண்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ள இஸ்லாம் இவர்களைப்போன்ற கொடுமைக்கார கணவன்களுக்கு ஒன்றும் கூறவில்லையா? என்பதுதான் அந்தக் கேள்விக்கணைகள்! உண்மையில் கணவன்மார்களுக்கும் இஸ்லாம் நிறைய அறிவுரைகள் நல்கியுள்ளன. இதோ, ஒரு பெண்ணை கரம்பிடித்து விட்டால், அந்த நிமிடமே கணவனின் கடமையென்னவென்பதை தெளிவுபடுத்துகிறது.
நீங்கள் அப்பெண்களை நல்ல முறையில் வாழச்செய்யுங்கள். இது சுருக்கமான திருக்குர்ஆன் வசனமாகும். இதைத்தொடரந்து இவ்வாறு உபதேசிக்கிறான் அல்லாஹ்.
'அவர்களை நீங்கள் வெறுத்தால்; நீங்கள் அவர்களை வெறுக்கலாம்-ஆனால் அல்லாஹ் அவர்களில்தான் உங்களுக்கு பெரும் நன்மைகளை வைத்திருப்பான்.' - அல்குர்ஆன் 4:19
பெண்ணினத்தின்மீதே நல்லபிப்ராயத்தை விதைக்கும் வகையில் இவ்வசனங்களை அல்லாஹ் கூறியுள்ளான். இனிய வாழ்க்கை, இரணவிருத்தி, மன அமைதி போன்ற பாக்கியங்கள் ஒருவன் மணமுடித்தபின் கரம்பிடித்தவள் மூலம் பெறவியலும்-அதை முறையாகப் பெறுவது கணவனின் கடமை என்பது இவ்வசனங்களின் நோக்கம்.
ஒரு மனிதன் பதவி பட்டங்கள் சொத்து செல்வங்கள் குழந்தைப்பேறுகள் மூலம் அடையாத அமைதியை தமது இல்லாள் மூலம் அடைய முடியும். தமது மனைவி மூலம் அவன் காணும் அன்பும் ஆதரவுமே  முக்கியமானது, நீடித்தது, கலங்கலில்லாதது! என்பதை இதோ இன்னொரு வசனத்தில் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.
'நீங்கள் சேர்ந்து வாழும்) மனைவிகளை அவர்களிடம் நீங்கள் நிம்மதி பெறுவதற்காகவே உங்களிலிருந்து அல்லாஹ் அவர்களைப் படைத்து, உங்களுக்கிடையில் அன்பையும், நேசத்தையும் உண்டுபண்ணினான் - அல்குர்ஆன் 30:21 

 இந்தளவு பெண்ணின் பெருமையை அல்லாஹ் கணவன்களுக்கு அறிவித்துள்ளான். ஒரு பெண்ணுக்குரிய கடமைகளை தனது திருமறையில் விபரித்துள்ளதுபோல், ஆணுக்கும் தெளிவாக உபதேசித்துள்ளான். இஸ்லாமியப் பெண்களில் பலர் குர்ஆன், ஹதீஸ் அறிவுரைகளை கற்பதிலும் மார்க்க நூல்களை படிப்பதிலும் அக்கறையில்லாமல் இருப்பதால், கணவன்மீது தங்களுக்குரிய உரிமைகளைப் பெறத் தெரியாமல் இருக்கிறார்கள்.

பெண்ணுரிமை நிலைநிறுத்தும் உபதேசங்கள் திருக்குர்ஆனில் நெடுகேயுள்ளன. குர்ஆனில் எங்கெல்லாம் பெண்களுக்கான உபதேசங்கள் இடம்பெற்றுள்ளனவோ அங்கெல்லாம் ஆண்களுக்கும், உபதேசிக்கப்பட்டுள்ளன. சுpல எடுத்துக்காட்டுகளைப் பாருங்கள்.
'நபியே! விசுவாசிகளான பெண்களுக்கு நீர் கூறும்!அவர்களும் தமது பார்வையை கீழ் தாழ்த்தி தமது கற்பை அரட்சித்துக் கொள்வார்களாக! அதுவே அவர்களுக்கு பரிசுத்தமானதாகும். அவர்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவனாகும்.' - அல்குர்ஆன் 24:30
மேலும் அல்லாஹ் கூறுகிறான்: 'ஆண்கள் சம்பாதித்தவை அவர்களுக் குரியதாகும். பெண்கள் சம்பாதித்தவை அவர்களுக்கே உரியதாகும்.' - ஆல்குர்ஆன் 4:32
 
இப்படி ஆண்களுக்கும் பெண்ணுரிமைகளை போதிக்கும் பொன்மொழிகள் குர்ஆனிலும், ஹதீஸிலும் சட்ட அமைப்பிலும் நிறையவுள்ளன. அதேபோல், பெண்கள் விஷயத்தில் ஆண்களுக்கு சற்று அதிகமான அறிவுரைகள் உள்ளன. அதில் முத்தாய்ப்பாக'அப்பெண்களுக்கு உரிமைகள் உள்ளன! கடமைகள் உள்ளதுபோல்!' 
என்ற திருக்குர்ஆன் வசனத்தை அறிஞர்கள் எடுத்துக்காட்டுகிறார்கள். இவ்வசனத்தில் பெண்களின் கடமைகளை காட்டும் சொல்லைவிட அவர்களது உரிமைகளுக்கு குரல் எழுப்பும் சொல் முதன்மை இடம் பெற்றுள்ளது. பெண்களின் நியாயமான உணர்வுகளுக்கு இஸ்லாம் முழுமையாக செவி சாய்த்துள்ளதற்கு இவ்வசனம் ஒன்றே பலமான சான்று!
ஒரு கணவனால், தமது மனைவிக்கு நியாயமான முறையில் வாழ்க்கையை தரவில்லையெனில் அவளுக்கு அன்பான முறையில் விவாக விடுதலை அளித்து விடுவதே அவனது மனுஷத்தன்மைக்கும் மனித நேயத்துக்கும் அடையாளமாகும்.
அண்டை அயலாருக்கும் தமது பணியாட்களுக்கும்-ஏன் முஸ்லிம அல்லாதோருக்கும்-இன்னும் சொல்வதெனில் வாயற்ற ஜீவன்களுக்கும் புற்பூண்டுகளுக்கம் அத்துணை படைப்புகளின் உரிமைகளையும் போற்றச்சொல்லும் இஸ்லாம்-கணிசமான மஹரீந்து கண்ணியமான முறையில் ஒரு பெண்ணை கரம் கோர்க்கச் செய்யும்போது-அவளது பெண்ணுரிமையை எந்தளவு போற்றும்ஃ என்பதை அனைவரும் எண்ணிப்பார்க்க வேண்டும்.


ஒரு பெண்ணை ஆதரித்து பாதுகாக்கும் முறையை அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு விளக்கினார்கள்:
'நீங்கள் உண்ணும்பொழுது மனைவியையும் உண்ணச்செய்யுங்கள். உங்களுக்க உடை வாங்கும்போது அவருக்கும் வாங்குங்கள். அவரது முகத்தில் அடிக்காதீர்கள். அசிங்கமாக பேசாதீர்கள். வீட்டில் தவிர (வெளியில்) அவரை கண்டிக்காதீர்கள்.' (ஆதாரம்: அபூதாவூது)
இதுபோன்ற ஹதீஸ்களெல்லாம், ஒரு பெண்ணை இரக்கமின்றி தண்டிப்பதையும், அவளது பாசம் மிக்க பெற்றோரிடமிருந்து அரக்கத்தனத்துடன் அவளை பிரித்து வைப்பதையும், அனாதையாக அவளை விட்டு விட்டு ஒதுங்கி பதுங்கி விடுவதையும், தமது அக, புற நோய்கள் காரணமாக அவளுக்கு வாழ்வளிக்க முடியாத பொழுது, இதமான முறையில் விவாக விலக்களித்து அவளது மறுவாழ்வுக்கு இடந்தராதிருப்பதையும் பெரிதும் கண்டிக்கின்றன.
'ஒரு மணிதர் அவரது மனைவி மக்களை நேர்மையுடன் பராமரிக்க வேண்டியவராக இருக்கின்றார். அது பற்றி அவர் மறுமையில் விசாரிக்கப்படுவார்!' (ஆதாரம்-புகாரி)  

என்ற ஹதீஸை சம்மந்தப்பட்ட கணவன்கள் சிந்திக்க வேண்டும். தமது மனைவியை எந்தவொரு வகையில், இம்சித்தாலும், தமக்கு விளையும் இறை முனிவுகள் தண்டனையிலிருந்து எந்த ஆணும் தப்பிக்கவியலாது. நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்வில் சமுதாயத்துக்கு அவர்கள் வழங்கிய ஆயிரக்கணக்கான பிரசங்க நிகழ்ச்சிகளில் ஹிஜ்ரீ 9-ஆம் ஆண்டு அவர்கள் நிகழ்த்திய அரஃபாத் பிரசங்கம் வரலாற்று சிறப்பு கொண்டதாகும். இக்காலம் இஸ்லாம் முழுமை பெற்றிருந்த காலமாகும். பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறையோனைக் காணச்செல்ல நேரம் நெருங்கிக் கொண்டிருந்த காலமாகும். லட்சக்கணக்கான சஹாபாக்கள் குழுமியிருந்த அந்த சபையில் அவர்களின் பெரும்பகுதி பேச்சு பெண்ணினத்துக்கே பெருமை சேர்ப்பதாகவும், அவர்களின் உரிமைகளுக்கு குரல் கொடுப்பதாகவும் அமைந்தது. 'மக்களே! பெண்களுடன் நியாயமான முறையில் நடந்து கொள்ளுங்கள்! அவர்கள் உங்களிடம் சிறைக்கைதிகள் நிலையிலுள்ளனர். அவர்கள் உங்களிடம் தப்பாக நடந்து கொள்ளும்பொழுது மட்டும்தான் நீங்கள் அவர்களிடம் கண்டிப்புக் காட்டலாம். அவர்கள் உங்கள் சொல்லைக் கேட்டு நடந்தால், அவர்களை இம்சிக்க நீங்கள் எந்த வழியும் தேடவேண்டாம்.தெரிந்து கொள்ளுங்கள்! உங்கள்மீது உங்கள் மனைவியர்க்கு நியாயமான பல உரிமைகள் உண்டு-அதனைக் காப்பாற்றுங்கள்! முக்கியமாக அவர்களுக்கு நீங்கள் சரிவர உணவும், உடையும் அளிக்க வேண்டும்.' (ஆதாரம்-புகாரி)'உங்களில் சிறந்தவர் உங்களின் மனைவியிடம் சிறந்தவராகும்! நான் எமது மனைவியரிடம் நல்லவனாக இருக்கிறேன்'. என்ற நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொன்மொழிக்கிணங்க- ஒவ்வொரு ஆண் மகனும் தனது துணைவியின் உரிமைகளையும், அந்தஸ்துகளையும் காப்பாற்றுவது புனித கடமையாகும்.
 


                            நன்றி-- மௌலவி, A.முஹம்மது இஸ்மாயீல் ஃபாஜில்பாகவி,
முதல்வர், ஜாமிஆ மிஸ்பாஹுல்ஹுதா,
 


 

விட்டுக்கொடுத்தால் விவாகரத்து தேவையில்லை!




                                                                
திருமணம்பற்றி தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். தவழ்கிறோம், நடக்கிறோம், பேச ஆரம்பிக்கிறோம். அதுபோல திருமணம் என்பது இன்னும் ஒரு நிலை. அந்த நிலையில் பொறுப்புகள் வர வேண்டும். இருவரும் அடுத்தவரின் விருப்பம், அபிப்ராயம், ரசனை, வேலைப்பளு புரிந்து நடக்க வேண்டும்.]
திருமண உறவு முறிவது ஏன்? மணமுறிவு கேட்டு நீதிமன்றம் போவதன் பின்னுள்ள காரணங்கள் என்னென்ன?
"கணவன் – மனைவிக்கு இடையேயான உரசல்களின் உச்சகட்டம்தான் விவாகரத்து. மற்ற தீர்வுகள் எதுவுமே கை கொடுக்காத நிலையில், இது ஒரு தீர்வாக மாறுகிறது. விவாகரத்துக்கு மிக முக்கியக் காரணம், எதிர்பார்ப்பு. நம் ஊரில் கணவனுக்கும் மனைவிக்கும் எதிர்பார்ப்புகள் அதிகம். ஒருவர் 17 வயது முதல் காதலித்து 37-வது வயதில் திருமணம் செய்கிறார் என்றாலும், அவர்களுக்குள் இரண்டே மாதங்களில் தகராறு வந்துவிடும்.
ஏனெனில், திருமணத்துக்குப் பிறகு, நிறைய மாற்றங்கள் வருகின்றன. அதைச் செய்தாக வேண்டிய கட்டாயம் வருகிறது. ஆனால், அதை இரண்டு பேராலும் செய்ய முடிவது இல்லை. அதுமட்டுமல்லாமல்; திருமணத்துக்குப் பிறகு பொருள் கிடைத்துவிடுவதால், அதன் சுவை குறைந்துவிடுகிறது.
யதார்த்தம் இல்லாத, நடைமுறைச் சாத்தியம் இல்லாத எதிர்பார்ப்புகள் இருவரிடமும் இருக்கும். சுற்றியுள்ள சிறந்த விஷயங்கள் எல்லாம் நம் கணவன்/ மனைவியிடம் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். திருமணம் ஆன நாளில் இருந்து ஒருவரை ஒருவர் கட்டுப்படுத்த ஆரம்பிப்பார்கள். இதனால் சுதந்திரம் பறிபோகிறது என்ற எண்ணம் வரும்.
அவர்கள் யாராக இருக்கிறார்களோ, அப்படியே ஏற்றுகொள்ளாமல் நமக்கு ஏற்ற மாதிரியான ஆளாக மாற்ற முயற்சிப்போம். இந்தப் போராட்டம் நான்கு ஆண்டுகள் தொடரும். இதைத் தாண்டி வருபவர்களுக்கு ஒருவித புரிதல் உண்டாகிறது. ‘ஓ.கே! இது இப்படித்தான் இருக்கும்’ என நினைத்து ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து ஏற்றுக்கொள்கின்றனர்.
திருமணமாகி ஐந்து ஆண்டுகள் முடிந்தால், பெரிய அளவில் பிரச்னைகள் வராது. குழந்தை வரும்போது ஏகப்பட்ட மாற்றங்களைச் சந்திக்க வேண்டி வருகிறது. குழந்தைக்காக மனைவி அதிக நேரம் செலவிடும்போது, கணவன் தப்பிக்கிறார். அதனால், மனைவிக்கு ஆத்திரம் வரும். யாராவது ஒருவர் குழந்தையைப் பார்த்துக்கொள்ள வேண்டும். மேற்கத்திய நாடுகளின் விவாகரத்துக்கு பிரதான காரணமே இந்தக் குழந்தை வளர்ப்புதான்.
நுகர்வு வெறிகொண்ட இன்றைய நவீன கலாசாரத்தில் பொருட்களை வாங்கிக் குவித்துக்கொண்டே இருக்கிறோம். அதுவும் எதுவாக இருந்தாலும், உடனே வாங்க வேண்டும். அப்படி நடக்கவில்லை என்றால், தன் துணை மீது வெறுப்பும் கோபமும் வருகிறது. அது பிரச்னையாக மாறுகிறது.
தமிழகத்தில் ஆண்டுதோறும் 4,000-க்கும் மேற்பட்ட விவாகரத்து வழக்குகள் தாக்கலாகின்றன. ஆண்டுக்கு 20 சதவிகித வழக்குகள் அதிகரிக்கின்றன. முதலில் திருமணம்பற்றி தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். தவழ்கிறோம், நடக்கிறோம், பேச ஆரம்பிக்கிறோம். அதுபோல திருமணம் என்பது இன்னும் ஒரு நிலை. அந்த நிலையில் பொறுப்புகள் வர வேண்டும். இருவரும் அடுத்தவரின் விருப்பம், அபிப்ராயம், ரசனை, வேலைப்பளு புரிந்து நடக்க வேண்டும். விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை!"

அனைவருக்கும் ஈதுல் அத்ஹா நல் வாழ்த்துக்கள்

அன்னை ஹாஜரா (அலை) அவர்களின் தியாகம்
இஸ்லாமிய வாழ்வியலில் புனித ஹஜ் வழிப்பாடா னது மிக முக்கியத்துவம் மிக்கதாகக் காணப்படுகிறது. அந்த வணக்கமுறையின் உருவாக்கத்திற்கு அல்லது ஆரம்ப நிகழ்வுகளுக்கு ஒரு பெண்ணினது பங்கும் மிக முக்கிய த்துவமுடையதாகக் காணப்படு கிறது.
குறிப்பாக புனித ஹஜ்ஜின் போது ஹஜ் கிரிகைகளின் செயற் பாட்டு ரீதியான வரலாற்றுச் சம்ப வங்களில் அன்னை ஹாஜரா (அலை) அவர்களின் தியாக உணர்வுகள் முஸ்லிம் உலகின் பெண்ணினத் திற்கே பெருமை சேர்க்கும் கைங்கரியமாகக் காணப்பட்ட அன்றைய தியாக நிகழ்வுகள் உலகிற்கே பறைசாற்றி நிற்கின்றன.
ஹஜ் வணக்க வழிபாடுகளுக்கு கால்கோளாய் அமைந்த தியாகத்தின் உயர் இலட்சியத்தினை அடைவதில் நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் செயற்பாடுகளுக்கு தமது மனைவி யான அன்னை ஹாஜரா (அலை) அவர்களின் தியாகமும் முன்னிலை பெறுகிறது.
ஒரு பெண்ணாக இருந்து தன் பிஞ்சுப் பாலகன் பசி யுடன் தகித்துக்கொண்டிருந்த வேளை யில்தான் இறைவன் ஸம் ஸம் எனும் வற்றா நீரூற்றை இவ்வுலகிற்கு அளித்தான். அன்றுமுதல் இன்றுவரை ஏன் உலகம் முடிவுறும் வரையில் இவ்வற்றா நீரூற்று உலக மாந்தர் களுக்கு முடிவுறா நீராகவே காணப் படும் என்பது இறைவன் வாக்கு.
ஹஜ்ஜின் போது ஹஜ்ஜாஜிகள் ஸபா, மர்வா எனும் இரு மலை களுக்கிடையில் ஏழுமுறை தொங் கோட்டம் ஓடுவதன் காரணம், அன்னை ஹாஜரா (அலை) அவர்கள் அன்று தன் பாலகனுக்கு நீர்த்தேடி இரு மலைகளுக்குமிடையில் ஓடிய அந்நிகழ்வை ஞாபகமூட்டி, அன்னா ரின் தியாகத்தை உணர்த்தவே ஹஜ் மாந்தர் அனைவரும் இவ்வாறு ஓட வேண்டுமென இறைவன் கட்டளையாக இருக்கிறது.
இன்றைய உலகில் பெண் என்னதான் தியாகம் செய்தாலும் அன்னை ஹாஜரா (அலை) அவர்களின் தியாகத்தைவிட மேம்பட்டதாய் இருக்க முடியாது. ஏனென்றால் இறைவனின் கட்டளையை ஏற்று அதனை நடைமுறைப்படுத்திய அன்னை ஹாஜரா (அலை) அன்னாரது கணவரான அஜரத் இப்றாஹீம் (அலை) அவர்களின் செயற்பாடுகளில் பங்கெடுத்து இன்றைய மக்கா அமைந்துள்ள இடத்தில் தன்னந்தனியாக தன் இளம் பாலகனுடன் கொளுந்து விட்டெரியும் பாலைவனத்தில் தம் இறைவன் இட்ட ஆணையை நிறைவேற்ற மனைவியையும் பிள்ளையையும் விட்டுச் சென்ற அவ்வேளையின் நிகழ்வை உலகில் எப்பெண்தான் ஏற்கத் துணிவாள்? எனவேதான் பெண்களின் உயர் விழுமிய பாங்கையும், அன்புக் கணவன் இட்ட கட்டளையையும் மீறாது நடந்துகொண்டார்கள்.
இன்றைய ஸம் ஸம் நீரூற்று அமைந்துள்ள இடத்தில் கொண்டு வந்து தனிமையில் விட்டு விட்டுத் திரும்பி வருகின்ற போது கேட்கி றார்கள். அன்னையர் ஹாஜரா எவ்வித மனித நடமாட்டமோ வாழ்வதற்கான வசதி வாய்ப்புக் களோ அற்ற இந்த இடத்தில் என்னையும் நம் பாசக் குழந்தையையும் விட்டுவிட்டு நீங்கள் (இப்றாஹீம் நபி) எங்கே சொல்கிaர்கள்எனக் கேட்டார்கள்.
அதற்கு இப்றாஹீம் நபி அவர்கள் எதுவும் பேசாது மெளனமாக இருக்க மீண்டும். மனைவி அதே வினாவைத் தொடுக்க மீண்டும் மெளனமாகி றார்கள். மனைவியவர்கள் 3ம் தடவையும் கேட்கிறார்கள். இது அல்லாஹ்வின் கட்டளையா? ஆம் இது அல்லாஹ்வின் கட்டனையேதான் எனக் கூறியதும் நீங்கள் அக்கட்டளையை நிறைவேற்றுங்கள்.
எங்களை அந்த அல்லாஹ்வே காப்பாற்றுவான்என இறை நம்பிம்பிக்கையை முன்னிலைப்படுத்திய நம்பிக்கையுடன் கூறி தன் கணவனுக்கு விடைகொடுத்தார்கள் இதுதான் தியாகம்!யாருமற்ற பாலைவனத்தில் தமது பிஞ்சுக் குழந்தையுடன் தனிமையில் இருக்கக வேண்டுமே என அஞ்சாத நெஞ்சத்துடன் பசித்தாகத்தைப் பெரிதாக நினைக்காது இறைக்கட்டளைக்கு அடிபணிந்து, கணவன் சொற்கேட்ட மனைவியாக அவ்வாறு நடந்து கொண்டதை, அந்த ஈமானிய வெளிப்பாட்டின் உறுதியினை தனிப்பெண்ணாக இருந்து வாழ்ந்து காட்டிய அன்னை ஹாஜரா (அலை) அவர்கள் உயர்ந்த பெண்ணாக மளிர்கிறார்.
இன்றைய அறபு நாடு செல்வச் செழிப்பு மிக்கதாய் திகழ்வதற்கும் உலக மக்கள் ஒன்றுகூடும் இடமாக மக்கமா நகரம் திகழ்வதற்கும், அபயமளிக்கப்பட்ட பூமியாக திகழவும் இப்றாஹீம் நபி அவர்களினதும், மனைவியார் ஹாஜரா (அலை), தனயன் இஸ்மாயில் (அலை) ஆகியோரின் உறுதியான ஈமானிய வெளிப்பாடே புனித ஹஜ் எனும் கடமையில் கூடிய பாங்கினை செலுத்தும் கிரிகைகளின் தொகுப்பாய் அமைந்துள்ளது; கணவன் தனிமையில் விட்டபோது கணவன் மீது எவ்விதமான எரிச்சலும் கோபமும் கொள்ளாது, தனையனது பசியினை போக்கிடவும் அவ்வேளை அவர்கள் பட்ட துயர் உலகில் எந்த பெண்ணுக்குத்தான் முடியும்.
எனவேதான் அல்லாஹ்வின் பற்றுறுதி வாய்ந்த அசைக்க முடியாத ஈமானியத்தின் உச்சியில் நிற்கிறார் அன்னை ஹாஜரா நாயகி அவர்கள். உலக முஸ்லிம் பெண்மணிகளின் முன்மாதிரியாகத் திகழும் இவர்களின் தியாகத்தின் விளைவு உலக முடிவு நாள்வரையும் உலக மக்களால் பேணப்பட்டு வரும் ஹஜ் வணக்கத்தின் பல செயற்பாடுகளில் அன்னை ஹாஜரா அவர்கள் பட்ட துயரின் மீட்டலை முஸ்லிம் உம்மா குறிப்பாக பெண்ணினம் இவ்வேளை நினைவு கூர்வது இஸ்லாமிய நெஞ்சங்களின் தார்மீக கடமையல்லவா.

துல் ஹஜ் மாத முதல் 10 தினங்களும் குர்பானியின் (உளுகியா ) சட்டங்களும்

அல்லாஹ் கூறுகிறான் : பத்து இரவுகள் மீது சத்தியமாக! (அல்குர்ஆன் 89:2) 10 இரவுகளை உள்ளடக்கிய இந்த துல் ஹஜ் மாதத்தின் முதல் 10 நாட்களின் சிறப்பு என்ன என்பதை அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறியிருப்பதன் மூலம் புரிந்து கொள்ளலாம்.
துல்ஹஜ் மாதத்தில் முதல் 10 நாட்களில் செய்யப்படும் நல் அமல்களைப்போல அல்லாஹ்விற்கு பிரியமான அமல் வேறு இல்லை என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்பொழுது அல்லாஹ்வின் பாதையில் போர் செய்வதையும் விடவா! என நபித்தோழர்கள் கேட்டார்கள். ஆம்! அல்லாஹ்வின் பாதையில் போர் செய்வதை விடவும்தான். என்றாலும் போரில் உயிரையும், பொருளையும் தியாகம் செய்து வீர மரணமடைந்தவரைத் தவிர என்று கூறினார்கள். (அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரழி) நூல் : புகாரி)

இஸ்லாமிய சமூகத்தில்; வசதி படைத்தவர் அல்லாஹ்வால் இடப்பட்ட கட்டளையாகிய ஹஜ், குர்பானி போன்றவைகளை நிறைவேற்றிக்கொண்டிருக்கும் அதே வேளையில், நமக்கு அந்த பாக்கியம் கிடைக்கவில்லையே என்று ஏங்கிக் கொண்டிருக்கும்; அல்லது அக்கடமையை ஏற்கனவே நிறைவேற்றி விட்டு இருக்கும் மற்ற முஸ்லிம்களும் நன்மையில் பங்கு கொள்ள வேண்டு மென்பதற்காக உலக மக்களுக்கு அருட்கொடையாக அனுப்பப்பட்ட உண்மைத் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் துல்ஹஜ் மாதத்தின் முதல் 10 நாட்களுக்கு இவ்வளவு பெரிய சிறப்பை கொடுத்துள்ளார்கள். மேலும் இந்த 10 நாட்களில் இன்ன அமல்கள் தான் செய்ய வேண்டும் என்றில்லாமல் அல்லாஹ்விற்கு விருப்பமான எந்த அமல்களை செய்தாலும் அது அல்லாஹ்விற்கு விருப்பமானதாகவும், இறைவழியில் போர் செய்வதை விட சிறந்ததாகவும் அமையும் என்பதை மேலுள்ள ஹதீஸ் மூலம் விளங்கமுடிகிறது. ஆனால் இன்றைக்கு இந்த நாட்களின் சிறப்பை முழுமையாக அறியாமல் 10ஆம் நாளுக்கு மட்டுமே சிறப்பை கொடுப்பதை பார்க்க முடிகிறது! இன்னும் துல்ஹஜ் மாதம் என்றாலே 10ஆம் நாள் மட்டுமே மக்களுக்கு நினைவுக்கு வருகிறது ஆனால் பின் வரும் செயல்களை செய்வதன் மூலம் அந்த 10 நாட்களில் அல்லாஹ்வால் வழங்கப்படும் வெகுமதியை பெற்றுக் கொள்ள முடியும்.
 
நல் அமல்களுக்குரிய நாட்கள்
இந்த 10 நாட்களில் நஃபிலான தொழுகைகள், நோன்புகள், தர்மங்கள் போன்ற உபரியான வணக்கங்களை அதிகப்படுத்துவதன் மூலம் அதிகமான கூலி கிடைக்கும். மேலும் இந்த பத்து நாட்களில் தக்பீர்களை அதிகமாக கூறுவதன் மூலமும் நன்மையை பெற்றுக் கொள்ளமுடியும். இதற்கு ஆதாரமாக நபித்தோழர்கள் இப்னு உமர் (ரழி), அபூஹூரைரா (ரழி) ஆகிய இருவரும் கடை வீதிக்குச் செல்லும் போதெல்லாம் தக்பீர்களை கூற அதைக் கேட்டு மக்களும் தக்பீர் கூறியதைக் காணலாம்; (நூல் : புகாரி)

ஆனால் இன்றைக்கு வழக்கத்தில் 9 ஆம் நாள் துவங்கி 13 ஆம் நாள் வரை ஒவ்வொரு ஃபர்ளான தொழுகைக்கு பிறகு தக்பீர் ஓதும் வழக்கத்தை மட்டுமே பார்க்க முடிகிறது, ஆனால் நபித்தோழர்கள் 10 நாட்களும் செல்லும் இடங்களிலெல்லாம் தக்பீர்களை கூறியுள்ளனர் என்பதை அறிய முடிகிறது! இதனால் முதல் 8 நாட்களும் தக்பீரின் சிறப்புகளால் கிடைக்கும் நற்கூலியை இழந்து விடுகிறோம். எனவே அல்லாஹ்வின் தூதரின் வழிமுறையை தங்களது வாழ்நாளில் பின்பற்றி வாழ்ந்த உத்தமர்களின் வழியை விட்டு விட்டு இன்றைக்கு நமது நடைமுறையில் அல்லது யாரோ ஏற்படுத்திய நடைமுறைக்கு முக்கியத்துவம் கொடுப்பதை ஏற்க முடியாது. இந்த 10 நாட்களில் செய்யும் எல்லா நல்லறங்களுக்கும் அல்லாஹ் விசேஷமாக கூலி வழங்குகிறான் என்று எண்ணி செய்கின்ற பொழுது நற்கூலியை பெற்றுக் கொள்ள முடியும் அதிலும் குறிப்பாக இந்த தக்பீர்களை 10 நாட்களும் சொல்வதன் மூலம் இச்சிறப்பை பெறமுடியும்.

அரஃபா நாள் நோன்பு நோற்பது
அரஃபா நாள் என்பது துல்ஹஜ் 9ஆம் நாளாகும், அன்றைய தினம் ஹாஜிகள் அல்லாதவர்கள் நோன்பு நோற்க வேண்டும். நபி (ஸல்) அவர்களிடம் அரஃபா நாள் நோன்பு நோற்பது பற்றி கேட்கப்பட்டது அதற்கு நபி (ஸல்) அவர்கள் முந்தைய மற்றும் பிந்தைய வருடத்து பாவங்கள் மன்னிக்கப்படுகிறது என்று கூறினார்கள். (அறிவிப்பாளர் : அபூகதாதா(ரலி) நூல் : முஸ்லிம்)

எல்லா நோன்பிற்கும் எல்லா நல்லறங்களுக்கும் முந்தைய வருட பாவங்கள் மட்டுமே மன்னிக்கப்படுகிறது ஆனால் அரஃபா நோன்பிற்கு மட்டுமே பிந்தைய வருட பாவங்களும் மன்னிக்கப்படுகிறது என்பதை மேற்கண்ட ஹதீஸிலிருந்து விளங்கிக்கொள்ள முடிகின்றது.

குர்பானியின் சிறப்புகள்
அல்லாஹ் கூறுகிறான்: (குர்பானி கொடுக்கப்பட்ட) பிராணிகளின் மாமிசங்களோ, அல்லது இரத்தங்களோ அல்லாஹ்வை சென்றடைவதில்லை மாற்றமாக உங்களிலுள்ள பயபக்தி (இறையச்சம்) மட்டும் தான் அல்லாஹ்வை சென்றடையும். (அல் குர்ஆன் 22:37)

குர்பானி கொடுப்பதால் அப்பிராணியின் மாமிசத்தையோ, இரத்தத்தையோ அல்லாஹ் புசிப்பதில்லை மாற்றமாக இறைக்கட்டளையை யார் நிறை வேற்றுகிறார்கள் என்று பார்க்கவே விரும்புகிறான். இந்த கட்டளையை நிறைவேற்றாமல் விட்டுவிட்டால் இறைக்கட்டளையை புறக்கணித்து நமது மனோ இச்சையை பின்பற்றி வாழ்வதாக ஆகிவிடும். இதனால்தான் அல்லாஹ் நாம் கொடுக்கும் குர்பானி மூலம் இறையச்சம் மட்டும்தான் ஏற்றுக்கொள்ளப்படுகிறது என பிரகடனம் செய்கிறான் எனவே இறையச்சத்தை உள்ளடக்கியதாக நமது குர்பானியை ஆக்கிக்கொள்வோம்.

யார் குர்பானி கொடுக்க வேண்டும்?
குர்பானியை வசதி படைத்த ஒவ்வொருவரும் கொடுக்கவேண்டும்! ஆடு கொடுக்கின்ற அளவு வசதி இல்லாதவர்கள் மாட்டில் ஏழு நபர்களில் ஒருவராக சேர்ந்து கூட்டாக கொடுக்கலாம். இந்த வசதியை யார் பெறுகிறாரோ அவரே வசதி படைத்தவர் என்பதன் பொருளாகும், அவரே குர்பானி கொடுக்க வேண்டும் இதற்கு குறைவாக வசதி படைத்தவர்கள் கொடுக்கத் தேவையில்லை இந்த அளவு வசதி படைத்த ஒவ்வொருவரும் குர்பானி கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் இறைக்கட்டளையை நிறைவு செய்தவராக ஆகமுடியும். இல்லையேல் அவனது கோபத்தை அடைய வேண்டிவரும் இதுவரை வசதி இருந்தும் கொடுக்காதவர்கள் இப்பொழுதே கொடுக்கத் தயாராகுங்கள்! குடும்பத்தலைவர் தனக்காகவும், தனது குடும்பத்தார்களுக்கும் சேர்த்து ஒன்று கொடுத்தாலே போதுமானதாகும்.

இன்னும் சிலர் எங்கள் வீடுகளில் குர்பானி கொடுக்கும் அளவிற்கு ஆட்களில்லை அதனால் குர்பானி கொடுக்கவில்லை எனக்கூறுவதை பார்க்க முடிகிறது, இதுபோன்ற காரணங்கள் கூறி தப்பிக்க முடியாத அளவிற்கு இன்றைக்கு பல்வேறு இடங்களில் கூட்டு குர்பானி திட்டங்கள் நடை முறைப்படுத்தப்படுகிறது அதில் சேர்ந்து நாம் கொடுப்பதன் மூலம் குர்பானி கொடுத்ததன் நன்மையை பெறமுடியும் எனவே வசதியிருந்தும் எந்த காரணம் கூறியும் அல்லாஹ்விடத்தில் தப்பிக்க முடியாது என்பதை கவனத்தில் கொண்டு குர்பானி கொடுக்க தயாராகுவோம்.

குர்பானிக்கு தகுதியான பிராணிகள்
ஆடு, மாடு, ஒட்டகம் இவைகள் மட்டுமே குர்பானி கொடுக்கமுடியும், இவைகளை தேர்வு செய்யும் பொழுது கீழ்காணும் குறைகள் இல்லாதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும். 1. கண் பாதிக்கப்பட்டது 2. கடுமையான நோய் ஏற்பட்டது 3. நடக்க இயலாத அளவு முடமாக உள்ளது 4.மெலிந்தது. இது போன்ற ஊனங்கள் இல்லாதவாறு பார்த்து கொடுக்க வேண்டும். ஏனெனில் நாம் செய்யும் செயல்களில் நல்லதையே அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான் கெட்டவைகளை புறக்கணித்து விடுகிறான்.

குர்பானி கொடுக்கும் நேரம்

துல்ஹஜ் மாதம் 10 ஆம் நாள் பெருநாள் தொழுகை தொழுத பின்னர் தொடங்கி 13 ஆம் நாள் வரை கொடுக்கலாம். பெருநாள் தொழுகைக்கு முன்னர் யாரும் அறுத்தால் அது சாதாரண ஒன்றாக ஆகிவிடும். ஆதலால் பெருநாள் தொழுகை தொழுத பின்னரே கொடுக்க வேண்டும். (நூல் : புகாரி)

குர்பானியின் மாமிசத்தை பங்கீடு செய்யும் முறை:
அல்லாஹ் கூறுகிறான்: குர்பானி கொடுத்தவற்றிலிருந்து நீங்களும் உண்ணுங்கள் (தேவையுடையோராக இருந்தும்) பிறரிடம் கேட்காதவர்களுக்கும், யாசிப்பவர் களுக்கும் கொடுங்கள். அல்குர்ஆன் : 22:36

குர்பானியின் இறைச்சியை நமது தேவைக்கு எடுத்தது போக மீதமுள்ளதை ஏழைகளுக்கு கொடுக்க வேண்டும். தேவையிருப்பின் சேமித்தும் வைத்துக் கொள்ளலாம்.(அறிவிப்பாளர் : ஸலாமாபின் அக்வஃ (ரலி) நூல் : அபூதாவூது

அதன் தோலை கூலியாக கொடுக்கக்கூடாது மாறாக அதனை தர்மம் செய்துவிட வேண்டும்.

குர்பானி கொடுப்பவர் செய்யக்கூடாதவை
குர்பானி கொடுக்க நாடியவர் துல்ஹஜ் மாதம் முதல் பிறை கண்டதிலிருந்து குர்பானி கொடுக்கும் வரை தனது முடிகள், நகங்கள் இவற்றில் எதையும் களைய வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பாளர் : உம்முஸலமா(ரலி) நூல் :முஸ்லிம்)