மகத்தான பெரும் வெற்றி !

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய   அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்) ...   "(முஃமின்களே!) அறிந்து கொள்ளுங்கள்;    நிச்சயமாக அல்லாஹ்வின் நேயர்களுக்கு    எவ்வித அச்சமும் இல்லை;    அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்."   "அவர்கள் ஈமான் கொண்டு (அல்லாஹ்விடம்)    பயபக்தியுடன் நடந்து கொள்வார்கள்."   "அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையிலும்,    மறுமையிலும் நன்மாராயமுண்டு;    அல்லாஹ்வின் வாக்கு(றுதி)களில்    எவ்வித மாற்றமுமில்லை -    இதுவே மகத்தான பெரும் வெற்றி ஆகும்."   -ஸூரத்து யூனுஸ் (நபி)_10:62, 63, 64   "அல்லாஹ்வையும் அவனது தூதரையும்   முஃமின்களையும் யார் நேசர்களாக ஆக்குகிறார்களோ,   அவர்கள்தாம் ஹிஸ்புல்லாஹ் (அல்லாஹ்வின் கூட்டத்தினர்) ஆவார்கள்;    நிச்சயமாக இவர்களே மிகைத்து வெற்றியுடையோராவார்கள்."   -ஸூரத்துல் மாயிதா(ஆகாரம்) (உணவு மரவை)_5:56   "(நபியே!) நீர் கூறும்:   “நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால்,   என்னைப் பின் பற்றுங்கள்;   அல்லாஹ் உங்களை நேசிப்பான்;   உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும்,   அல்லாஹ் மன்னிப்பவனாகவும்,   மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்."   -ஸூரத்துல்ஆல இம்ரான் (இம்ரானின் சந்ததிகள்)_3:31   "உங்களை விட்டுத் தவறிப்போன ஒன்றின் மீது   நீங்கள் துக்கப்படாமல் இருக்கவும், அவன்   உங்களுக்கு அளித்தவற்றின் மீது   நீங்கள் (அதிகம்) மகிழாதிருக்கவும்   (இதனை உங்களுக்கு அல்லாஹ் அறிவிக்கிறான்);   கர்வமுடையவர்கள்,   தற்பெருமை உடையவர்கள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை."   -ஸூரத்துல் ஹதீத்(இரும்பு) _57:23   "ஓர் அடியாரை அல்லாஹ் நேசிக்கும் பொழுது   (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களை அவன் அழைத்து,   " நான் இன்னாரை நேசிக்கிறேன். ஆகவே நீங்களும் அவரை நேசியுங்கள்"   என்று கூறுவான். ஆகவே, அவரை ஜிப்ரீலும் நேசித்துவிட்டு   விண்ணகத்தில் வசிப்பவர்களை அழைத்து,   " அல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான். நீங்களும் அவரை நேசியுங்கள்" என்று   ஜிப்ரீல் அறிவிப்பார். உடனே விண்ணகத்தாரும் அவரை நேசிப்பார்கள். பிறகு   அவருக்குப் பூமியில் வசிப்பவர்களிடமும் அங்கீகாரம் அளிக்கப்படுகிறது"   -அல்லாஹ்வின் தூதர் (ஸல்)_அபூஹுரைரா (ரலி)_புகாரி 6040