ஆணும் பெண்ணும்


பெண் எப்படிப் படைக்கப்பட்டாளோ அப்படியே அவள் இருக்கிறாள். ஆண் எப்படிப் படைக்கப்பட்டானோ அப்ப்டியே அவன் இருக்கிறான்.
80 வயதுவரைகூட காமம் தளராளம் இருப்பது ஆணின் படைப்பு. 50க்குள்ளேயே காமம் ஒடுங்கிப்போய்விடுவது பெண்ணின் படைப்பு
ஒரு வருடத்தில் ஒரு பிள்ளை பெறுவது பெண்ணின் படைப்பு. ஒரே வருடத்தில் 365க்கு மேலும் பெற்றுக்கொள்ள முடிவது ஆணின் படைப்பு.
அவளிடம் கருவறை இவனிடம் சாவி அதுதான் இனப்பெருக்கத்தின் வழி. அதுதான் இயற்கை. அதனால்தான் இந்தப் பிரபஞ்சம்.
ஆணிடம் பெண்தேடல் இல்லாவிட்டால் இந்த உலகமே இல்லை. அப்படிப் பெண்தேடல் இல்லாத ஓரினச்சேர்க்கையாளர்களால் பிரபஞ்சமே அழிந்து போகும்
ஆண் பெண்ணைத் தேடவேண்டும். பெண் ஆணைத் தேடவேண்டும்
பிள்ளைகள் பிறந்தபின் பெண்ணின் நிலைப்பாடு. தேடுதலிலிருந்து சற்றே விலகிவிடும்
ஆனால் ஆணின் தேடல் தொடரும். இது அடிப்படை, இயற்கை, வாழ்வியல் தத்துவம்.
நம் சமூகத்தில் ஏன் ஒரு பெண்ணை அடிமுட்டாளாகவே சித்தரிக்கிறார்கள். என்று தெரியவில்லை.
ஆணின் மேதாவித்தனம் பெண்ணை இப்படி அடிமையாகவே பார்ர்கிறது. தானே சுயசிந்தனை உள்ளவன் என்ற அகம்பாவம்.
பெண் பின்புத்திக்காரி என்று காலகாலமாய்ச் சொல்லும் அவலம்.
18 வயதை எட்டிய பெண் தன் எண்ணங்களில் தன் தேவைகளில் தெளிவாகவே இருப்பாள்.
அந்த வயதில் அவளுக்குக் கிடைப்பதுதான் வாழ்க்கை. அவள் வாழ்க்கையை வாழ நம் சமூகம் அனுமதிப்பதே இல்லை.
ஆணுக்கும் பெண்ணுக்கும் நட்பு இனிமையானது என்றாலும் ஆபத்தானது.
பஞ்சும் நெருப்பும் எளிதாக பற்றிக்கொள்ளும்.
ஆணுக்கும் பெண்ணுக்கும் நட்பு. இருவரும் ஒன்றாகவே நட்பு பாராட்டுகிறார்கள்.
நட்பு காதல் கல்யாணம் பிள்ளைகள்.
ஆனால் காதல் என்று வந்துவிட்டால் நட்பு ஒருபடியாவது கீழே இறங்கிவிடுகிறது
கல்யாணம் என்று வந்துவிட்டால் காதல் சில படிகள் கீழே இறங்கிவிடுகிறது என்பது நடைமுறை உண்மை.
உரிமைகளும் பொறுப்புகளும் வந்ததும் காதல் வெளிக்காட்ட நேரமின்றி தடுமாறுகிறது
உடல்கள் பழகியபின் ஈர்ப்பில் அலட்சியம் புகுந்து அதிகாரங்கள் உயர்ந்து காதல் காயப்படுகிறது
குழந்தைகள் என்று வந்துவிட்டால் ஆண்களின் காதல் மனைவியிடம் அப்படியே இருக்கும்
ஆனால் பெண்ணின் காதல் பிள்ளைகளுக்கு மாறிவிடும் அதுதான் பெண்ணின் படைப்பு
பெண் அப்படிப் படைக்கப்படவில்லை என்றால் இனவிருத்தி உயிரின பெருக்கும் எல்லாம் இல்லாமல் அழிந்துபோகும்.