முழங்கியது போதும் வழங்குகள் உரிமைமையை!


முழங்கியது போதும் வழங்குகள் உரிமைமையை!
   ஃபாகிரா  
நாம் மேடையில் நின்று கொண்டு, ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாத்தில் பெண்களுக்கு இன்னின்ன உரிமைகள் வழங்கப்பட்டிருந்தன என்று முழங்கினால் மட்டும் போதாதுமாறாக, இஸ்லாம் அளித்துள்ள பெண்ணுரிமைகளை நடைமுறையில் செயல்படுத்திக் காட்டவேண்டும்.
பெண்களின் பிரச்னைகளும் அவற்றின் தீர்வுகளும் என்று பேசுவதற்கு முன்பு முதலில் பெண்களின் இருப்பு பற்றி புரிந்து கொள்ளவேண்டும். பெண்ணுரிமை என்ற பெயரில் எவ்வளவோ போராட்டங்கள் நடைபெற்றன. கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவழிக்கப்பட்டன. ஏராளமான முழக்கங்கள் முன்வைக்கப்பட்டன. அப்படியெல்லாம் இருந்தும் கூட பெண்களின் நிலைமையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. நீதி எனும் பெயரில் அநீதிகள்தான் அரங்கேறின. இன்றுவரை அந்த இழு பறியும் போராட்டமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
எல்லாரும் அறிந்த உண்மை என்னவென்றால், இஸ்லாம் பெண்களுக்கு அளித்துள்ள உரிமைகள் போன்ற இன்றைய நவீன உலகம் கூட அளிக்கவில்லை. இஸ்லாத்தில் பெண்களுக்கு எல்லாமே உண்டு. உரிமைகள் உண்டு. கண்ணியம் உண்டு. மரியாதை உண்டு. பாதுகாப்பு உண்டு. முஸ்லிம் பெண்களின் இந்த உரிமைகள் குறித்து இன்று அதிகம் பேசப்படுகின்றது. ஆனால் நடைமுறையில் அவை பேணப்படுவதில்லை.
தொடக்கத்திலிருந்தே மேற்கத்தியர்கள் முஸ்லிம் சமுதாயம் பற்றி தவறான கருத்துகளையே கொண்டிருந்தனர். ஆனால் நாம் கொள்கையை மட்டுமே சமர்ப்பிக்கிறோம். நடைமுறை உதாரணங்கள் தருவதில்லை. பெண்களை மேற்கத்தியப் பிடியிலிருந்து காப்பாற்ற என்ன செய்வது? நாம் மேடையில் நின்று கொண்டு, ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாத்தில் பெண்களுக்கு இன்னின்ன உரிமைகள் வழங்கப்பட்டிருந்தன என்று முழங்கினால் மட்டும் போதாது. மாறாக, இஸ்லாம் அளித்துள்ள பெண்ணுரிமைகளை நடை முறையில் செயல்படுத்திக் காட்டவேண்டும். அந்த உரிமைகளை நடைமுறைப்படுத்துவதற்குத் தடையாக உள்ளவற்றை எல்லாம் தகர்த்தெறியப் போராட வேண்டும்.
பெண்களின் எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வு இஸ்லாத்தில் இருக்கிறது எனத் தெளிவாகக் குறிப்பிடலாம்.இஸ்லாத்தில் பெண்களுக்கு எந்த அளவுக்கு உரிமைகள் அளிக்கப்பட்டுள்ளன எனில் ஆண்களுக்கும் கூட அந்த அளவுக்கு உரிமைகளை அளிப்பதில்லை. ஆனால் நடைமுறையில் இந்த உரிமை பெண்களுக்குக் கிடைக்கிறதா எனும் கேள்வி எழுகிறது. சாதாரண முஸ்லிம்களை விடுங்கள். நல்ல மார்க்கப்பற்றுள்ள குடும்பங்களில் கூட பெண்களுக்கு சொத்துரிமை மறுக்கப்படுகிறது.
அன்னை கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் செய்தது போல் சுதந்திரமாக வணிகம் செய்ய அனுமதி தரப்படுவதில்லை. தங்களின் முழுமையான திறமையையும் ஆற்றலையும் பயன்படுத்தி பெண்கள் சமுதாயப் பணி செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. இஸ்லாத்தில் மட்டுமே பெண்களுக்கான ஈடேற்றமும் அமைதியும் உள்ளன என முஸ்லிம் பெண்கள் இதர பெண்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். அநீதிக்கும் கொடுமைக்கும் எதிராகக் குரல் எழுப்புவது ஈமானின் இறைநம்பிக்கையின் தேட்டமாகும். மனிதர்களாய்ப் பிறந்த நாம் சமுதாயத்தில் நடைபிணமாக இருக்கக் கூடாது. உயிர்த்துடிப்புடன் செயலாற்ற வேண்டும். அன்னை ஆயிஷா, அஸ்மா ஆகியோரின் சமூகக் களப்பணிகள் நமக்கு முன்மாதிரிகளாக விளங்க வேண்டும்.
பெண்கள் தங்களின் வீட்டைப் பராமரித்து நிர்வகிப்பதிலும் திறமையை வளர்த்துக் கொள்ளவேண்டும். அதே சமயம் சமுதாயப் பணிகளிலும் தங்களின் முத்திரையைப் பதிக்க வேண்டும். சமூக சேவையில், சமுதாயப் பணிகளில் இன்று முஸ்லிம் பெண்கள் யாரேனும் சாதனை படைத்திருக்கிறார்கள் எனில், அவர்கள் இஸ்லாத்தைப் புறக்கணித்து விட்டு, அல்லது இஸ்லாத்தைக் குறை சொல்லிக் கொண்டுதான் அந்தச் சாதனையைப் புரிந்திருக்கிறார்கள். இஸ்லாமிய வரம்புக்குள் இருந்து கொண்டே, இஸ்லாம் தரும் உந்துசக்தியைக் கொண்டே நாம் சாதனைகள் படைத்துக் காட்டவேண்டும். இந்தியாவில் ஏழுகோடி முஸ்லிம் பெண்கள் இருக்கிறார்கள். இவர்களை வாய்மூடி மௌனிகளாக இருக்கச் செய்துவிட்டு இங்கே எந்தப் புரட்சியையும் நாம் கொண்டுவர முடியாது.
இந்தியப் பெண்கள் மீது இரண்டு விதமான கொடுமைகள் நடைபெறுகின்றன. ஒன்று பாரம்பர்யமாக நடைபெற்றுவரும் கொடுமைகள். குடும்ப வன்முறை, சமத்துவமின்மை, வரதட்சணை போன்றவை பாரம்பர்யக் கொடுமைகளாகும். மற்றொன்று நவீனத்தின் பெயரால் நடைபெறும் கொடுமைகள். பெண் விடுதலை, பெண்ணியம், பாலியல் சுரண்டல் போன்றவை. இந்த இரண்டு வகைக் கொடுமைகளுக்கும் பலியாவது பெண்கள்தாம். இந்தப் பாரம்பரியக் கொடுமைகளையும் நவீனக் கொடுமைகளையும் "கொடுமை’ என்று ஏற்றுக் கொள்ளவே பலர் தயாராக இல்லை.
முதலாளித்துவம், ஏகாதிபத்தியம், நுகர்வியம் போன்றவை தங்களின் சுயலாபத்துக்காகப் பெண்களைச் சுரண்டுகின்றன. இத்தகைய எல்லாவிதமான தீமைகளுக்கும் சுரண்டல்களுக்கும் ஒரே தீர்வு இஸ்லாம்தான். ஆனால் நாம் பேசிக்கொண்டே இருக்காமல் களத்தில் இறங்க வேண்டும். ஆந்திராவில் எழுதப் படிக்கத் தெரியாத ஒரு பெண், மதுக்கடைகளுக்கு எதிராகப் போராட்டத்தைத் தொடங்கினாள். அவளுடைய இடைவிடாத முயற்சியின் காரணமாக இன்று ஆந்திராவில் 800 மதுக்கடைகள் மூடப்பட்டுவிட்டன. இந்தச் சாதனை புரிய அவள் மாநாடு நடத்தவில்லை. சுவரொட்டிகள் ஒட்டவில்லை. பெரிய பெரிய "பயான்கள்’ எதுவும் செய்யவில்லை. ஆகவே நாமும் அதுபோல் களத்தில் இறங்கிப் பணியாற்ற வேண்டும்.
-சமரசம்

வஹ்ஹாபிகள், பித்னாவாதிகளுடன் போர்!

தமிழ்பேசும் இஸ்லாமிய உலகில் தனி ஒரு ஆளாக நின்று சுன்னத் வல் ஜமாஅத் கொள்கைக்கு மாறுபட்டவர்களுடன் வாதம் புரிந்து சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையை நிலை நிறுத்தப் பாடுபட்டார்கள்.
வடநாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்கும், இலங்கைக்கும் நுழைந்த வஹ்ஹாபிய இயக்கமான தப்லீகு ஜமாஅத்தையும் அதன் தலைவர்களையும் முஸ்லிம்கள் மத்தியில் இனம் காட்டி அவர்களின் முகத்திரைகளை கிழித்தெறிந்தவர்கள் நமது ஷெய்குனா அவர்கள். எவருடைய பணத்திற்கும் மசியாமல், யாருக்கும் பயப்படாமல் உண்மையை மக்கள் மத்தியில் எடுத்துரைத்து மக்கள் வழிதவறி செல்வதிலிருந்து காப்பாற்றிய பெருமை நமது ஷெய்குனாவைச் சாரும்.

இதற்காக அவர்கள் பட்ட துன்பங்கள், துயரங்கள் எண்ணிலடங்கா. அதையெல்லாம் லட்சியம் செய்யாமல் நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கீர்த்தியை உயர்த்தியும், அவர்களின் மஹப்பத்தை மக்கள் மத்தியில் ஆழமாகத் தரிபடுத்தியும், பல்வேறு பெயர்களில் மறைமுகமாக வந்து வஹ்ஹாபியக் கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்பிக் கொண்டிருந்த தப்லீக் ஜமாஅத், ஜமாஅத்தே இஸ்லாமி போன்ற இயக்கங்களை கடுமையாக சாடி அவர்களின் முகத்திரைகளை கிழித்தெறிந்தார்கள். அதற்காக பிரசுரங்கள் வெளியிட்டும், மார்க்க உரை நிகழ்த்தியும், புத்தகங்கள் வெளியிட்டும், அவர்களுடன் விவாதங்கள் நடத்தியும் இருக்கிறார்கள். அவர்கள் தனிப்பட்ட முறையில் செய்த இந்த சேவையை தற்போது பல்வேறு நபர்கள், குழுக்கள் சேர்ந்து செய்தாலும் அதற்கு ஈடு செய்ய முடியவில்லை என்னும் போது அவர்களின் மகாத்தான சேவை, தன்னலமற்ற சேவை நமக்கு புலப்படும்.

தப்லீகு ஜமாஅத்திற்கு எதிராக அவர்கள் வெளியிட்ட புத்தகங்கள்:

1.தப்லீக் ஜமாஅத்தில் வஹ்ஹாபியத்தின் விஷக்கிருமிகள்: தப்லீக் ஜமாஅத்தை சுன்னத் வல் ஜமாஅத் என்று கூறிக் கொண்டிருக்கும் மக்கள் மத்தியில் அதன் கொள்கைகள் விஷக் கிருமிகளுக்கு ஒப்பானவை என்று ஆணித்தரமான ஆதாரங்களுடனும்; (அவர்களின் புத்தகங்களிலிருந்தே) அதற்கு மாற்றான சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையை விளக்கியும் இந்நூல் மொழி பெயர்க்கப்பட்டது. இந்நூல் வெளிவந்ததன் பிறகு மக்கள் மத்தியில் ஒரு எழுச்சி ஏற்பட்டது. மக்கள் தப்லீகின் கொள்கைகளை சரிவர விளங்கினார்கள். இதைக் கண்டு பொறுக்கமுடியாத தப்லீகு காரர்கள் அந்த புத்தகத்தில் ஏற்பட்ட அச்சுப்பிழையை கண்டுபிடித்து அதைக் கொண்டு ஷெய்குனா அவர்களிடம் மோத வந்தனர். அதை அவர்கள் 'அறிவாளர்களே ஆராய்ந்து பாருங்கள்!' என்று பிரசுரம் வெளியிட்டு முகமூடியைக் கிழித்தெறிந்தார்கள்.

2. தப்லீகு என்றால் என்ன?: தப்லீக் ஜமாஅத்தின் நோக்கம் அதன் கொள்கைகளை விளக்கி வெளிவந்த நூல். தப்லீக் ஜமாஅத்திற்கு அதன் பெயர் சரியான பொருத்தமா? என்று விபரிக்கும் நூல். இந்நூலில் மாத்தறையில் நடைபெற்ற தப்லீகு ஜமாஅத் பற்றிய விவாத மாநாட்டின் உண்மை நிலை பிற்பகுதியாக சேர்க்கப்பட்டுள்ளது.

3. இள்ஹாறுல் ஹக்(சத்தியப் பிரகடனம்): சுன்னத் வல் ஜமாஅத் கொள்கை மற்றும் வஹ்ஹாபிய தேவ்பந்தி, தப்லீகி கொள்கைகைiகைளை வேறுபடுத்திக் காட்டி வெளிவந்த நூல். மத்ரஸாக்களில் அகீதா பாடத்திற்கு ஏற்ற நூல்.

4. இல்யாஸி தப்லீகு ஜமாஅத் பற்றி உலமாக்களின் உண்மை தீர்ப்பு: தப்லீகு ஜமாஅத் பற்றி இந்திய மார்க்க அறிஞர்கள் வெளியிட்ட பத்வாவின் மொழிபெயர்ப்பு. மிகவும் அருமையான நூல். பார்த்து படித்து பாதுகாக்க வேண்டிய நூல்.

5. அல்முஹன்னதின் அண்டப்புளுகு: கலீல் அஹ்மது அம்பேட்டவி என்ற தப்லீகு தலைவர் அஃலா ஹஜ்ரத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கோர்வை செய்த ஹுஸாமுல் ஹரமைன் பத்வாவிற்கு மாற்றமாக வெளியிடப்பட்ட போலியான பத்வாவான அல்முஹன்னதின் வண்டவாளங்களையும், பொய்களையும் அக்குவேறு ஆணிவேராக தோலுரித்துக் காட்டியிருக்கும் நூல்.

6. புலியைக் கண்டு ஓட்டம்: தப்லீக்கின் மூல குருமார்களில் ஒருவரான அஷ்ரப் அலிதானவியின் ஈமானை போக்கும் கொள்கையை நேரடியாக சந்தித்து விளக்கம் கேட்க முயன்றபின் மீரட் மௌலானா அப்துல் அலீம் சித்தீகி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வெளியிட்ட குப்ரு பத்வாவின் மொழிபெயர்ப்பு.

7.ஜமாஅத்தே இஸ்லாமியைப் பற்றியும் அதன் தலைவர்களைப் பற்றியும் மார்க்கஅறிஞர்களின் தீர்ப்பு: ஜமாஅத்தே இஸ்லாமியும் அதன் கொள்கையையும் பற்றி வெளியிடப்பட்ட பத்வாவின் மொழிபெயர்ப்பு.

8. காதியாணி தேவ்பந்தி சம்பாஷணை: காதியாணியும், தேவ்பந்தியும் ரயிலில் சந்தித்து இருவர்களின் கொள்கைகளைப் பற்றிய உரையாடியதையும் அவர்களின் கொள்கைகள் ஒன்றானவை என்பதையும் விளக்கும் சிறு பிரசுர நூல்.

9.தன்னறிவில்லா தக்கபதிலுக்கு தகுந்தவிதமாக தலையில் தட்டு: தப்லீகு ஜமாஅத் பற்றிய குற்றச்சாட்டுகளும் தக்க பதில்களும் என்று மௌலவி கலீல் அஹ்மது கீரனூரியால் வெளியிடப்பட்ட நூலுக்கு (இதன்பிறகு பல்லாண்டு காலம் இந்நூல் வெளிவருவது நின்றுவிட்டது.)மறுப்பாக எழுதப்பட்ட கட்டுரை நூல்.

10.சுவர்க்க நகைகளா? அல்ல. நரகவிலங்குகள்!: அஷ்ரப் அலி தானவியின் பிஹஷ்திஜேவர் என்ற நூலை 'சுவர்;க்க நகைகள்' (இதன்பிறகு இந்த நூல் மார்க்கச் சட்டங்கள் என்று பெயர் மாற்றம் பெற்று வெளிவந்துள்ளது.)என்று குலாம் ரஸூல் என்பவர் மொழிபெயர்த்து வெளியிட்டார். அதில் இருந்த வஹ்ஹாபியக் கொள்கைளுக்கு மறுப்பு தெரிவித்து வெளியிடப்பட்ட நூல்.

தப்லீகு பற்றியும், ஜமாஅத்தே இஸ்லாமி பற்றியும் எண்ணற்றப் பிரசுரங்கள் வெளியிட்டிருக்கிறார்கள். மார்க்க உரைகள் ஆற்றியிருக்கிறார்கள்.

விவாதங்கள்:

1. தப்லீக் ஜமாஅத் பற்றி மாத்தறை விவாத மாநாடு 1965: மாத்தறையில் தப்லீக் ஜமாஅத் பற்றி விவாதம் செய்ய விவாத அரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஷெய்குனா அவர்களின் வாதங்களைக் கேட்டு அதற்கு பதில் சொல்லமுடியாமல் கூச்சலிட்டு குழப்பமேற்படுத்தி மாநாட்டை குலைத்தனர் தப்லீக் ஜமாஅத்தினர். அதன்பிறகு திருட்டுத்தனமாக கையெழுத்துப் போட்டு தாங்கள் வெற்றி பெற்றுவிட்டதாக அறிவிப்பும் செய்தனர். அவர்களின் அந்த திருட்டுத்தனத்தை வெளிப்படுத்தி சுன்னத்வல் ஜமாஅத்தினர் வெளியிட்ட பிரசுரத்தைக் காண:http://sufimanzil.org/wp-content/uploads/downloads/2010/04/visakirumi.pdf

2. இதேபோல் இலங்கையின் பல்வேறு இடங்களிலும் விவாதத்திற்கு ஷெய்குனாவை அழைத்து பின் அமீரின் உத்திரவு அனுமதி இல்லை என்று கூறி புறமுதுகிட்டு ஓடிய தப்லீக் ஜமாஅத்தினரின் முகமூடிகள் பிரசுரங்கள் மூலம் வெளிக் கொணரப்பட்டுள்ளது.

3. ஜும்ஆ தொழுவதற்கு முன் உள்பள்ளியில் அரபியல்லாத மொழியில் (தமிழில்) பயான் பண்ணக் கூடாது என்று ஷெய்கு அவர்கள் காயல்பட்டணத்தில் குத்பா பெரிய பள்ளியில் நடத்திய விவாதம் பற்றி விபரம் காண:http://sufimanzil.org/shaiks-life-events/tamil-bayan-before-jumma-inside-the-mosque-debate

4. ஒடுக்கு கூடாது என்று தப்லீகை ஆதரித்த உலமாக்கள் (ஜாவியா உலமாக்கள்) பத்வா வெளியிட்ட போது அதற்கு மாற்றாக மஹ்லறாவில் பத்வா வெளியிடப்பட்டது. நடுநிலைக் கொண்டவர்கள் இதுபற்றி விவாதிக்க அழைப்பு விடுவித்தபோது தப்லீகர்கள் ஓடி ஒளிந்தனர். ஆனால் அதற்கு ஒப்புதல் தெரிவித்து ஷெய்குனா அவர்கள் கையொப்பமிட்ட விபரம் காண: http://sufimanzil.org/shaiks-life-events/odukufatwa-sufi-hazrat

http://sufimanzil.org/fatwa/fikhfatwas/odukku-fatwa

5. ஸுஜூது பற்றி சா.சாகுல்ஹமீது ஆலிம் என்பவர் காயல்பட்டணத்தில் பத்வா வெளியிட்டார். அதில் அவரை ஆதரிப்பவர்கள் கையொப்பமிட்டனர். இந்த பத்வா ஸுஜூது பற்றி விளக்கம் தெரியமால் வெளியிடப்பட்ட பத்வாவாகும். இதற்கு மறுப்பாக ஷெய்குனா அவர்கள் கலீபா அப்பா தைக்காவில் நடைபெற்ற கந்தூரி பயானில் பேசிவிட்டார்கள். ஆனால் ஷெய்குனா அவர்கள் ஊர் வரும்போதெல்லாம் இப்பத்வாவை வெளியிடுவது வாடிக்கையாக தப்லீகினர் வைத்திருந்தனர். அதற்கு மறுப்பாக வெளியிடப்பட்ட கட்டுரையைக் காண:http://sufimanzil.org/articles/others/sujood-explanation

6. ஷாபிஈ மத்ஹபு படி ஒரு ஊரில் இரு ஜும்ஆ நடப்பது கூடாது. இரண்டாவதாக ஏற்படுத்தப்பட்ட ஜும்ஆ செல்லாது என்று வெளியிடப்பட்ட பத்வாவில் ஷெய்குனா அவர்களும் கையொப்பமிட்டார்கள். இதன் பிரச்சனையாகத்தான் கொழும்பில் தங்கியிருந்த இடத்தை விட்டு அவர்கள் வெளியேறினார்கள். இந்த பள்ளியை அவர்கள் வழிகெடுத்துக் கொண்டிருக்கும் பள்ளி என்று சொன்னார்கள். அதுபடிதான் நடந்து வருகிறது. இவற்றைக் காண:http://sufimanzil.org/shaiks-life-events/al-jamiul-ilrar

பார்வை – ஒரு பார்வை

قُل لِّلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ذَلِكَ أَزْكَى لَهُمْ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ(நபியே!) மiுஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன். (24:30)இறைவன் மனிதனின் உடலில் அமைத்திருக்கும் அத்துணை உறுப்புகளும் இன்றியமையாதவைதான். ஆனாலும் அதில் மிக முக்கியமான உறுப்பாக பார்வை பிரதான இடத்தை பெறுகிறது. பார்வையற்ற பல சகோதர, சகோதரிகள் அவர்களின் அன்றாட வாழ்வில் அனுபவிக்கும் வேதனை வார்த்தைகளால் வடிக்க இயலாதவை.வெளிநாடுகளில் வாழும் எம்மில் பெரும்பாலோர், ‘என்ன வாழ்க்கை இது! கட்டிய மனைவி-பிள்ளைகளை பார்க்க முடியவில்லையே என்று வேதனையடைவோரை பார்க்கலாம். ஆனால், பார்வையற்றோர் தன் மனைவி-மக்கள் பெற்றோர்-உற்றார் அருகிலிருந்தும் அவர்களை பார்க்கமுடியாத அவலநிலை.இவ்வாறெல்லாம் பார்வையற்றோரின் நிலையிருக்க, இறைவனின் மாபெரும் அருட்கொடையான பார்வை கிடைக்கப்பெற்றவர்கள் தங்களின் பார்வையை இறைவனுக்கு உவப்பான வழியில் பயன்படுத்துகிறார்களா என்று பார்த்தோமானால், பெரும்பாலோர் தமது பார்வையை மார்க்கம் தடுத்த வழியில் செலுத்துவதை காணலாம். எல்லாவற்றிற்கும் வழிகாட்டும் இஸ்லாம், ஒரு முஸ்லீம் பார்வையை செலுத்தவேண்டும் என்பதற்கும் வழிகாட்டுகிறது.ரஸூல் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்; நீங்கள் உங்கள் பார்வைகளை தாழ்த்த வேண்டும், மர்மஸ்தானங்களை பேணவேண்டும். இல்லையேல்,அல்லாஹ் உங்கள் முகங்களை நிறம் மாற்றிவிடுவான் [தப்ரானி]பார்வை விசயத்தில் இந்த அளவு அல்லாஹ்வும் அவனது தூதரும் கூறியிருக்க, நம்மில் பலர் பார்வையை தாழ்த்துவதுமில்லை. இயன்றவரை பார்வையால் எவ்வளவு ரசிக்கமுடியுமோ அந்த அளவுக்கு ரசிப்பதையும் பார்க்கிறோம். ஆடவர்கள் ஒரு பெண்ணை பார்த்து விட்டால் அப்பெண்ணை விழுங்கிவிடுவது போல் பார்ப்பதும், அப்பெண் இவனை கடந்து சென்ற பின்னும் கழுத்து வலிக்கும் அளவுக்கு வளைத்து-வளைத்து பார்ப்பதும் பெரும்பாலோரின் வாடிக்கையான பணியாகவே ஆகிவிட்டது. இவ்வாறான செயலை ஒரு முஸ்லீம் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அன்னை ஆயிஷா (رَضِيَ اللَّهُ ) அவர்கள் அறிவிக்கிறார்கள்; அஸ்மா பின்த் அபூபக்கர் (رَضِيَ اللَّهُ) அவர்கள், நபியவர்களிடம் ஒரு மெல்லிய ஆடையணிந்து வருகை தந்தார்கள். நபி صلى الله عليه وسلم அவர்கள் அஸ்மா அவர்களை விட்டும் தன் பார்வையை திருப்பிக்கொண்டு, அஸ்மாவே! ஒரு பெண் பருவ வயதை அடைந்து விட்டால்,மனிக்கட்டுகளுக்கு கீழ் உள்ளவையும், அவளது முகத்தையும் தவிர மற்றவை வெளியே தெரியக்கூடாது என்று கைகளையும், முகத்தையும் சுட்டிக்காட்டினார்கள்.[அபூதாவூத்]அறியாமையாலோ, அல்லது அவசரத்தாலோ அஸ்மா (رَضِيَ اللّ) அவர்கள் முறையான ஆடை அணியாததை கண்ட நபியவர்கள், சட்டென தம் பார்வையை திருப்புகிறார்கள் எனில், நமது நிலையோ பரிதாபம்! தன் பிள்ளைக்கு பால் கொடுக்கும் தாயின் சரிந்த மாராப்பை கண்போடும் கயவர்களும் சிலர் உண்டு. மற்றொரு பொன்மொழியில் ரஸூல் صلى الله عليه وسلم அவர்கள், அல்லாஹ் கூறுவதாக கூறினார்கள்; பார்வை ஷைத்தானின் நஞ்சூட்டப்பட்ட அம்புகளில் ஒன்று.யார் அதனை எனக்கு பயந்து விட்டு விடுகிறாரோ, அதற்கு பகரமாக அவருக்கு நான் ஈமானை கொடுப்பேன். அதன் இனிமையை அவர் தன் உள்ளத்தில் கண்டுகொள்வார். [தப்ரானி,ஹாகிம்] மேலும், சிலர் அண்டை வீட்டில் நடப்பவைகளை ஜன்னல் வழியாகவும், மாடியிலிருந்தும் நோட்டம் விடுவர். இந்த செயல் மார்க்கத்தில் தடுக்கப்பட்டதாகும். மேலும் இச்செயல் நபியவர்களை கோபத்திற்கு உள்ளாக்கிய செயலுமாகும்.ஸஹ்ல் இப்னு ஸஅத் رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவித்தார்; ஒருவர் ஒரு துவாரத்தின் வழியாக நபி صلى الله عليه وسلم அவர்களின் வீட்டினுள் எட்டிப் பார்த்தார். அப்போது நபி صلى الله عليه وسلم அவர்கள் ஈர்வலிச் சீப்பால் தம் தலையைக் கோதிக் கொண்டிருந்தார்கள். (அவர் எட்டிப் பார்த்தையறிந்த) நபி صلى الله عليه وسلم அவர்கள், ‘நீ பார்த்துக் கொண்டிருக்கிறாய் என்று எனக்கு (முன்பே) தெரிந்திருந்தால் இந்த ஈர்வலியைக் கொண்டே உன் கண்ணைக் குத்தியிருப்பேன். (வீட்டுக்குள், நுழைய) அனுமதி கேட்க வேண்டும் என்று சட்டமாக்கப்பட்டதே பார்வைகள் (வரம்பு மீறி வீட்டிலிருப்பவர்களின் மீது விழக் கூடும் என்ற) காரணத்தினால் தான்’ என்று கூறினார்கள்.[புஹாரி]அண்டை வீட்டிற்குள் நுழைய அனுமதி கேட்கவேண்டும் எனபதற்கு காரணமே பார்வைதான் என்ற நபிصلى الله عليه وسلم அவர்களின் கூற்றை கவனிக்க கடமைப்பட்டுள்ளோம். இன்று நம்மில் பெரும்பாலோர் நமது றவினர் வீடுகளுக்குள் செல்லுகையில் அனுமதி கேட்பதில்லை. திறந்த ட்டுக்குள் எதுவோ நுழைந்தமாதிரி நுழைந்துவிடுவது; இவ்வாறு அனுமதியின்றி நுழைவதால், அந்த வீட்டில் உள்ள பெண்கள் அதிகப்படியான ஆடைகளின்றி இருக்கும் காட்சியை காண நேரிடும். அந்த காட்சிகள் தவறிழைக்கவும் தூண்டும். சமீபத்தில் ஒரு பத்திரிக்கை செய்தி; தனது அண்ணன் வீட்டுக்குள் நுழைந்த தம்பி, தனது அண்ணி குளித்துவிட்டு ஈர ஆடையுடன் வருவதை கண்டு காமம் கொண்டு அந்த அண்ணியை கற்பழித்து கொன்றான். எனவேதான் காணும் காட்சி தவறை செய்யத்தூண்டும். ரஸூல் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்;விபசாரத்தில் மனிதனுக்குள் பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். (மர்ம உறுப்பின் விபசாரம் மட்டுமல்ல் கண்ணும் நாவும் கூட விபசாரம் செய்கின்றன.) கண் செய்யும் விபசாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபசாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது; இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது பொய்யாக்குகிறது.[புஹாரி]இது மட்டுமன்றி, நம்மவர்கள் சினிமா, நாடகம் கேளிக்கைகள் என்று அதில் அரைகுறை ஆடைகளோடு வலம்வரும் அந்நிய பெண்களை பார்த்து ரசிக்கின்றனர். இவர்கள் மட்டுமன்றி, அந்நிய ஆண்கள் பங்குபெறும் சினிமாக்களை தமது மனைவி-சகோதரிகளை பார்க்க அனுமதிக்கின்றனர். மேற்கூறப்பட்ட ஹதீஸின் அடிப்படையில் இதுவும் ஒருவகை விபச்சாரமாகும். மார்க்கம் அனுமதித்த வீர விளையாட்டுகளை கூட பெண்கள் நேரடியாக பார்க்க நபியவர்கள் அனுமதிக்கவில்லை.ஆயிஷா (رَضِيَ اللَّهُ )அறிவித்தார் அபிசீனியர்கள் பள்ளிவாசலில் (வீர விளையாட்டுகள்) விளையாடுவதை நான் பார்த்துக் கொண்டிருக்க, நபி صلى الله عليه وسلم அவர்கள் (அவர்களின் பார்வையிலிருந்து) என்னை மறைப்பதை கண்டேன். அப்போது உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ அபிசீனியர்களைக் கண்டித்து தடுத்தார்கள். இதைக்கேட்ட நபி صلى الله عليه وسلم அவர்கள், ‘அவர்களைவிட்டுவிடுங்கள். நீங்கள் அச்சமின்றி இருங்கள், அர்ஃபிதாவின் மக்களே!” என்று கூறினார்கள். [புஹாரி] மேலும் சிலர், பெண்கள் படிக்கும் கல்வி நிலையங்களுக்கு எதிரில்/அருகில் அமர்ந்து கொண்டு அங்கு வரும் பெண்களை பார்வையால் அளவெடுப்பதும், அவர்களுக்கு இம்சை தருவதுமாக தங்களின் பொழுதை போக்குபவர்களும் உண்டு. கிராம புறங்களில் வீட்டிற்குள் இருக்கும் கன்னிப்பெண்கள் சற்றே பொழுது சாய தங்களின் வீட்டிற்கு தண்ணீர் எடுக்க வருவார்கள். அவர்கள் வரும் வழியில் சில ரோமியோக்கள் அமர்ந்துகொண்டு கேலி செய்பவர்களும் உண்டு. ஆனால் ஒரு முஸ்லீம் இது போன்ற செயல்களை தவிர்க்கவேண்டும்.அபூ ஸயீத் அல்குத்ரீ رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவித்தார். “நீங்கள் சாலையில் அமர்வதைத் தவிருங்கள்’ என்று இறைத்தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். மக்கள், ‘எங்களுக்கு அங்கு அமர்வதைத் தவிர வேறு வழியில்லை அவைதாம், நாங்கள் பேசிக் கொள்கிற எங்கள் சபைகள்” என்று கூறினார்கள்.நபி صلى الله عليه وسلم அவர்கள், ‘அப்படியென்றால் நீங்கள் அந்தச் சபைகளுக்கு வ(ந்து அம)ரும்போது, பாதைக்கு அதன் உரிமையைக் கொடுத்து விடுங்கள்” என்று கூறினார்கள்.மக்கள், ‘பாதையின் உரிமை என்ன?’ என்று கேட்டார்கள். நபி صلى الله عليه وسلم அவர்கள், ‘(அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும் (பாதையில் செல்வோருக்குச் சொல்லாலோ செயலாலோ) துன்பம் தராமலிருப்பதும், சலாமுக்கு பதிலுரைப்பதும், நன்மை புரியும்படி கட்டளையிடுவதும், தீமையிலிருந்து தடுப்பதும் (அதன் உரிமைகள்) ஆகும்” என்று பதிலளித்தார்கள்.[புஹாரி] பார்வைகளை பக்குவப்படுத்துவோம்! படைத்தவனிடம் பரிசு பெறுவோம்!!

சினிமாக்களால் பறிபோகும் கற்பு


சினிமாக்களால் பறிபோகும் கற்பு
  பிள்ளைகளே உஷார்! 
  பெற்றோர்களே உஷார்! 
[ என் பிள்ளை கிளாசுக்குப் படிக்கப் போகுது என்று நம்பி அனுப்புகிறார்கள். ஆனால், பிள்ளைகளோ சினிமா, பார்க், இன்டர்நெட் என்று தங்களின் மானங்களை தவறான பாதைக்கு அனுப்புகின்றார்கள். இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளால் அதிகம் பாதிக்கப்படுவது ஆண்களை விட பெண்கள்தான்.
நாம் மின்சாரத்தை தொட்டாலும், மின்சாரம் நம்மை தொட்டாலும் பாதிப்பு நமக்குதான். அதே போல்தான் ஆண், பெண்ணைத் தொட்டாலும், பெண், ஆணைத் தொட்டாலும் பாதிப்பு பெண்ணுக்குதான்.
உங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளை அவ்வப்போது கல்லூரி நிர்வாகத்தினரிடம் விசாரித்துக் கொள்ள வேண்டும். பிள்ளைகளிடம் ஆசிரியர்கள், நிர்வாகம் பற்றி விசாரிக்க வேண்டும். ]
பெற்றோர்களே! நீங்கள் உங்கள் பிள்ளைகளை கல்வி கற்றவர்களாக ஆக்கவேண்டும் என்பதில் கவனமாய் இருக்கின்றீர்கள். பிள்ளைகளை பாடசாலை ,கல்லூரி, பல்கலைக்கழகம் என்பவற்றில் அவர்களை சேர்த்துவிடுவதுடன் நமது வேலை முடிந்துவிடுவதில்லை. இனிமேல்தான் கவலையே ஆரம்பம் ஆகிறது. எப்படி?
முதலில் கல்லூரிகளுக்கு செல்லும் நம் பிள்ளைகளின் நடவடிக்கைகளை தினசரி நாம் உற்று நோக்க வேண்டும். ஏன் என்றால் இன்றைய கால கட்டத்தில் கல்லூரிகளில் படிக்கும் போது பிள்ளைகள் கல்வியை கற்பதை விட காமத்தை கற்பதற்கே அதிக நேரம் செலவழிக்கின்றார்கள்.
இன்றைய நவீன கலாசாரங்களான செல்போன்கள், இன்டெர்நெட் போன்றவைகள் இவர்களின் மூளை கல்வியைக் கற்பதை விட காமத்தை கற்க அதிகம் தூண்டுகிறது.
இந்த நவீன கலாசாரங்களின் பாதிப்புகள் பிள்ளைகளை வீட்டில் அதிகம் தாக்குவதில்லை. வெளியிடங்களில்தான் அதிகம் தாக்குகிறது.பிள்ளைகள் வீட்டில் இருந்துதான் கல்லூரிகளுக்கு படிக்க போகின்றார்கள். பிறகு எப்படி தவறு செய்வார்கள் என்று சிலர் யோசிக்கலாம். ஆனால் வீட்டிலிருந்து கல்லூரிகளுக்கு தான் போகிறர்கள் என்று நமக்கு எப்படித் தெரியும்? வீட்டில் இருந்தபடி செல்போனின் மூலம் தங்களின் நட்பு வட்டாரங்களுக்கு ஆளனுப்பி இன்று எந்தப் படம் பார்க்கப் போகலாம் என்று தங்களின் தவறுகளை தவறே இல்லாமல் செய்ய தொடங்குகிறார்கள். இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் பெண் பிள்ளைகள் ஆண்களிடமும், ஆண் பிள்ளைகள் பெண்களிடம் இந்த ஆளுகளை அனுப்புகிறார்கள்.
என் பிள்ளை கிளாசுக்குப் படிக்கப் போகுது என்று நம்பி அனுப்புகிறார்கள். ஆனால், பிள்ளைகளோ சினிமா, பார்க், இன்டர்நெட் என்று தங்களின் மானங்களை தவறான பாதைக்கு அனுப்புகின்றார்கள். இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளால் அதிகம் பாதிக்கப்படுவது ஆண்களை விட பெண்கள்தான். நாம் மின்சாரத்தை தொட்டாலும், மின்சாரம் நம்மை தொட்டாலும் பாதிப்பு நமக்குதான். அதே போல்தான் ஆண், பெண்ணைத் தொட்டாலும், பெண், ஆணைத் தொட்டாலும் பாதிப்பு பெண்ணுக்குதான்.
கல்வி கற்கத் தேவை கல்லூரிகள். காமத்தை கற்கத் தேவை திரையரங்குகள் என்றாகிவிட்டது. அங்கே தங்களின் காம பாடமுறைகளை ஆரம்பிக்கின்றார்கள். சினிமா திரையரங்கங்களை பற்றி சொல்ல தேவையே இல்லை. அந்த அளவுக்கு இந்தப் பணிகளை ஓய்வு இல்லாமல் செய்ய அனுமதி அளிக்கிறார்கள்.
திரையரங்கின் உள்ளே சென்றால் ஒரே இருட்டாக இருக்கும். இந்த இருட்டில் ஓர் ஆணும் பெண்ணும் தனியாக இருந்தால் என்ன செய்வார்களோ அதைத்தான் செய்வார்கள். அந்த திரைப்படம் முடிவதற்குள் ஒரு மினி தாம்பத்தியம் நடத்திவிடுவார்கள். நவூதுபில்லாஹ்! அல்லாஹ் நம் பிள்ளைகளை காப்பாற்ற வேண்டும். இப்படி எல்லா பிள்ளைகளும் செய்வதில்லை என்பதையும் இங்கே குறிப்பிடுகின்றோம்.
இதற்கு அடுத்து இன்னும் மேலே போய் இன்டர்நெட் மூலமாக தங்களின் காமப் பாடங்களை ஆரம்பிக்கின்றார்கள். பின்னர் தங்களின் அந்தரங்கங்களை அறிமுகம் செய்து பின்னர் தங்களின் அங்கங்களை அறிமுகம் செய்ய ஆரம்பிக்கின்றார்கள். இவையனைத்தும் இன்டர்நெட் மூலம் எடுக்கப்படும் தியரிகள். தியரி மட்டும் பார்த்தால் போதுமா? அதனால் இன்டர்நெட் மூலமே ஓர் இடத்தை தேர்வு செய்து அங்கே பிராக்டிகல் பாடத்தையும் நடத்துகிறார்கள். நாம் எவ்வளவு கவனமாக இருக்கவேண்டும் அல்லாஹ் நம் பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டும்.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும் என்று கல்லூரிகளுக்கு அனுப்புகிறார்கள். ஆனால், சில பிள்ளைகள் இப்படி வழி தவறுவதை மறக்கவும், மறைக்கவும் முடியாமல்தான் இங்கே நாங்கள் வெளிப்படுத்துகிறோம். இதில் சில வார்த்தைகள் உங்கள் மனதை புண்படுத்தியிருந்தால் எங்களை மன்னித்து விடுங்கள். இன்னும் நாங்கள் சொல்லாத எவ்வளவோ இருக்கின்றன. அதையும் தெரிவித்து கொள்கிறோம்.
இவ்வளவு தவறுகள் நடக்கின்றதே யார் மீது குற்றம் சொல்ல? தவறு செய்யக்கூடிய பிள்ளைகளையா? இல்லை தவறுகளை செய்யத் தூண்டுகின்ற நவீன கலாசாரங்களையா? இல்லை தவறுகள் நடப்பதை கவனிக்காமல் இருக்க கூடிய பெற்றோர்களையா? யாரை நாம் குறை சொல்வது? யாரையும் குறை கூற வேண்டாம்? குறைகளை சொல்லி காலத்தை கடத்துவதை விட குறைகளைக் களைய கண்காணிப்போடு நம் பிள்ளைகளை வளர்ப்போம். அதற்கு சில அறிவுரைகளை மனதிலும் மூளையிலும் பதிய வைப்போம்.
அறிவுரைகள்:
1. உங்கள் பிள்ளைகளிடம் செல்போன்களை வாங்கிக் கொடுக்காதீர்கள்.
2. பாடம் சம்பந்தமாக சில விஷயங்களை இன்டெர்நெட் மூலம் பார்க்க வேண்டும் என்றால், வீட்டில் இருந்து ஒரு நபர் இன்டர்நெட் மையங்களுக்க அழைத்துச் செல்ல வேண்டும். மையங்களில் உள்ள அறையின் உள்ளேயும் நீங்கள் இருந்து அவதானிக்க வேண்டும்.
3. வீட்டில் கணிப்பொறி இருந்தால் உங்கள் கண்காணிப்பில் அவர்கள் இன்டெர்நெட் பார்க்க வேண்டும். இதை அன்பாக சொல்ல வேண்டும். இல்லை என்றால் உங்கள் மீது வெறுப்பு வந்துவிடும்.
4. உங்கள் வீட்டில் உள்ள தொலைக்காட்சிப் பெட்டியில் ஆபாசங்களை, சினிமா சீரியல்களைத் தவிர்த்து அறிவை வளர்க்கும் நிகழ்ச்சியை பார்க்க வேண்டும்.
5. கல்லூரிகளுக்கு அழைத்துப் போவதும் அழைத்து வருவதும் உங்களுடைய கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.
6. உங்கள் பிள்ளைகள் வெளியே போனால் பர்தா முறையை கண்டிப்பாக கடைபிடிக்க சொல்ல வேண்டும்.
7. கல்லூரிகளின் நிர்வாகிகளின், ஆசிரியர்களின் குணங்களை நன்றாக கவனிக்க வேண்டும். அவர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்கள் இருக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும்.
8. மதரஸாக்களில் பிள்ளைகளைச் சேர்த்தாலும் அங்கும் எச்சரிக்கையாகத்தான் நீங்கள் இருக்கவேண்டும். அங்கும் சில பசுத்தோல் போர்த்திய புலிகள் இருக்கின்றன. காமவெறியாட்டம் ஆடக் கூடிய நிர்வாகிகள் எல்லா இடங்கிலும் இருக்கின்றார்கள்
9. உங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளை அவ்வப்போது கல்லூரி நிர்வாகத்தினரிடம் விசாரித்துக் கொள்ள வேண்டும். பிள்ளைகளிடம் ஆசிரியர்கள், நிர்வாகம் பற்றி விசாரிக்க வேண்டும். சில மதுரஸாக்கள் பெற்றார் ஆசிரியர் கூட்டங்களை நடத்துவதில்லை. இதுபற்றியும் அவதானமாக இருக்க வேண்டும்.
10. அல்குர்ஆன் மதரஸாக்களிலுள்ள லெப்பைகள் நீக்கப்பட்டு, அல்குர்ஆனை தஜ்வீத் முறைப்படி ஓதத்தெரிந்த பக்குவமான ஆலிம்கள் நியமிக்கப்படவேண்டும். அவர்களிடம் அனுப்பப்படும் பிள்ளைகள் மீதும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
11. உங்கள் பிள்ளைகளுக்கு தினசரி கொடுக்கக்கூடிய பணத்தைப் பற்றியும், அவர்களின் செலவினங்களைப் பற்றியும் அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் செலவுகள் பற்றி அவதானமாக இருக்க வேண்டும். இதை மென்மையாகக் கையாள வேண்டும்.
12. உலகக் கல்வியோடு இறையச்சத்தை ஊட்டக் கூடிய மார்க்கக் கல்வியையும் கண்டிப்பாகக் கற்றுக் கொடுங்கள்.இறையச்ச உணர்வு இருந்தால், அவர்கள் எல்லாத் தீமைகளில் இருந்தும் விலகி, அவர்களைக் காப்பாற்றிக் கொள்வார்கள்.
13. மேலே சொன்ன அனைத்தையும் விட உங்கள் பிள்ளைகளின் நேர்வழிக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
எங்கள் இறைவா! எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக. எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அழிப்பாயாக. நல்லோருடன் எங்களைக் கைப்பாற்றுவாயாக. (அல்குர்ஆன் 3:193)

முதலிரவன்று நீங்க சொன்னதை எப்படி மறக்க முடியும்...?!


 முதலிரவன்று நீங்க சொன்னதை எப்படி மறக்க முடியும்...?!
காலை மணி 11 இருக்கும்
‘ரெடியா இரு, இதோ வந்துர்றேன்...."
‘புரியலீங்க! எதுக்கு ரெடியா இருக்கச் சொல்றீங்க....?"
‘எல்லாம் அதுக்குத்தாங்கறேன்!’
‘அதுக்குத்தான்னா.... எதுக்குங்க? கொஞ்சம் புரியற மாதிரிதான் சொல்லுங்களேன்!’
‘நாம ரெண்டு பேர் மட்டும் ஒரு எடத்துக்கப் போறோம்.... அதுக்குத்தான்!’
‘எந்த எடம்னு சொல்லக்கூடாதோ?’
‘சொன்னா சஸ்பென்ஸ் கொறைஞ்சிடும்!’
‘ஓ! அப்படியா?’
‘அப்படியேதான்.... அதோட இன்னோரு ஆப்ளிகேஷன்’
‘என்னன்ன சொல்லுங்க.... ரொம்ப சஸ்பென்ஸா இருக்கே!’
‘ஒன்னுமில்லே! உன்னே நல்லா அழகா ஜோடிச்சுகோ!’
‘இதென்ன புதுக்கதையா இருக்கு! பொஞ்சாதிங்களெல்லாம் வீட்டுலெ இருக்கும்போது கணவனுக்கு எதிர்த்தாப்பல தான் தன்னை அழகுபடுத்திக்கிடணும், வெளியில் போறச்சே சாதாரணமாத்தான் இருக்கணும்னு நீங்கதானே அடிக்கடி சொல்வீங்க! இப்போ என்னங்க புதுசா வெளியே போறதுக்கு அலங்கரிச்சுக்கன்னு சொல்றீங்க! என்ன ஆச்சு உங்களுக்கு?’
‘நான் வீட்டுக்க வந்தப்புறம் எல்லாத்துக்கும் பதிலே தானாவே நீ தெரிஞ்சுக்குவே! அது வரைக்கும் கொஞ்சம் பொறுத்துக்கேன்.... அதோடு இன்னொரு விஷயம் அழகா டிரஸ் பண்ணிக்கிட்டு மறக்காம செண்ட் அடிச்சுக்க! மல்லியப்பூ கெடச்சா தலை நெறைய வெச்சுக்கோ.... அப்புறம்....’
‘என்ன ஆச்சு உங்களுக்கு? ‘வெளியே போகும்போது பொம்பளைங்க செண்ட்டு அடிச்சுக்கக்கூடாது’ன்னு 144 போட்டதே நீங்கதானே! இப்ப என்ன திடீர்னு எல்லாத்தையும் காத்துலெ பறக்க வுட்றீங்க!’
‘நான் சொல்றதை செய்! மத்ததை நேரிலே தெரிஞ்சக்குவே!’
கணவன் மனைவிக்குள் டெலிஃபோன் பேச்சு அதோடு கட்டானது.
கணவன் பேச்சை தட்டாத மனைவி மட்டுமல்ல அவள்! கணவனின் சந்தோஷத்துக்காகவே தன்னை முழுமையாக அற்பணித்துக் கொண்ட மனைவி. அதனால் கணவனின் பேச்சைத் தட்டாமல் விருவிருவென்று சமையல்வேலைகளை முடித்தவிட்டு கணவனின் ஆசைப்படி தன்னை அலங்கரித்துக்கொண்டு அவனுக்காக காத்திருக்கம்போது கதவ தட்டப்படும் சப்தம் கேட்டது.
ஓ! அவர்தான் வந்துவிட்டார் என்று எண்ணி துள்ளிக்குதித்து கதவைத் திறந்தவளுக்கு ஒரு பக்கம் ஏமாற்றமென்றாலும் இன்னொரு பக்கம் சந்தோஷம். நான்கைந்து தோழிகள் ஒன்றாக தன்னைக் காண வந்தால் எந்த பெண்ணுக்குத்தான் சந்தோஷமிருக்காது!
தோழிகளை பார்த்த சந்தொஷம் ஒரு புறமிருந்தாலும் கணவன் வருகின்ற நேரமல்லவா எனும் பதற்றம் இன்னொருபுறம். அடுப்பங்கறைக்குள் நுழைந்து தோழிகளுக்கு காஃபி கொடுப்பதற்குப் பதிலாக ஃபிரிட்ஜைத் திறந்து கூல் டரிங்ஸை ஊற்றிக்கொடுத்து உபசரித்தாள்.
ரெண்டு பெண்கள் கூடினாலே லேசில் நகர மாட்டார்கள். நான்கு பேர்கள் என்றால் கேட்கவா வேண்டும்! இல்லத்தரசிக்கோ இருப்புக்கொள்ளவில்லை.
பத்து நிமிடம் பத்து மணிபோல் அவளுக்கு நகர்ந்தது. வாசலை எட்டிப்பார்த்தாள். இதோ கணவன் சந்தோஷமாக சிரித்தபடி வாசல்கேட்டைத் திறப்பதைப் பார்த்தவள் கதவருகே நின்ற கொண்டு கணவன் ஸலாம் செல்வதற்குள் முந்திக்கொண்டு ஸலாம் சொன்னாள்.
மனைவியின் வரவேற்பையும் அவளின் ஆடையலங்காரத்தையும் பார்த்த அவன் கண்கள் ஆயிரம் வால்ட் சந்தோஷத்தைக் கொப்பளித்தன். தான் சொன்னதை தட்டாமல் அழகாக அலங்கரித்துக் கொண்டு ஒரு மனைவி தனது கணவனுக்குமுன் நின்றால் எந்த கணவனுக்கும் முகம் மலரத்தானே செய்யும்!
கூடத்தில் தோழிகள் எல்லாம் உட்கார்ந்திருப்பதால் வாசல்கதவைத் தாண்டி உள்ளே நுழைவதற்கு முன்னே வாசலிலேயே கணவனை மடக்கினாள். ஆனால் அவன் மனைவியின் தோழிகளைக்கூட பார்க்காமல் தலையை குனிந்தபடி அறைக்குள் நுழைந்தான்.
‘சரி இப்பவாச்சும் சொல்லுங்க! எங்கே போகப்போறோம்?’
மனைவியை மேலும் கீழும் பார்த்தவன் அவள் காதுகளில் ‘ ....... ....... ’ ஊதினான். [ அப்படி என்னதான் சொன்னான் என்று தெரிந்துகொள்ள ஆசையா? கொஞ்சம் பொறுங்கள்! கடைசியில் தெரிஞ்சுக்கலாம்.] அவ்வளவுதான் அவள் முகம் நாணத்தில் கொப்பளிக்க, ‘என்னங்க இது! நேத்து ராத்திரி தானே அந்த ஊருக்குப் போய்ட்டு வந்தோம்! அதுக்குள்ளே இன்னொரு தரம் போகணுமா? அதுவும் இந்த பட்டப்பகலிலா....’ என்றெல்லாம் கேட்கவில்லை. ஏனெனில் கணவனின் பேச்சைத் தட்டாத, கணவனின் சந்தோஷமே தனது சந்தோஷம் என்று எண்ணி வாழ்பவள் அவள்.
விருவிருவென்று கூடத்துக்க வந்தவள் தோழிகளிடம் சுருக்கமாகப்பேசி அவர்களை மறுபடியும் இன்னொருநாள் விருந்துக்கு அழைப்பு விடுத்துவிட்டு அனுப்பி வைத்தாள். சரி, சரி இவள் எங்கேயோ கணவனுடன் வெளியில் செல்லும் அவசரத்தில் இருக்கிறாள் என்று தோழிகளும் எதுவும் கேள்வி கேட்காமல் கிளம்பிச் சென்றனர்.
வாசல் கதவை இறுகத் தாழிட்டு விட்டு படுக்கையறைக்குள் நுழைந்தவள் தன்னை முழுமையாக கணவனுக்கு அற்பணித்து அவனை திருப்தியடையச் செய்தாள். எல்லாம் முடிந்தபிறகு கேட்டாள், ‘ஆமாம்! என்னைக்கும் இல்லாமல் இன்னைக்கு என்ன ஆச்சு உங்களுக்கு? அதுவும் பட்டப்பகலிலேயே இந்த ஆசையெல்லாம்?’
‘ஏன் பகலிலே.... கூடாதா....?’
‘நான் அப்படியெல்லாம் சொல்லலே! ஆனா இது உங்களைப் பொருத்தவரைக்கும் புதுசா இருக்கேன்னுதான் கேட்டேன்!’ என்றாள்.
‘சொல்றேன்... சொல்றேன்... உன் கிட்டே சொல்லாமே வேறு யார் கிட்டே சொல்றது! என்ன நடந்ததுன்னா.... இன்னைக்கு கம்பெனியிலே போர்டு மீட்டிங் நடந்தது. அதில் வெளி மாநிலத்தைச் சேர்ந்த ரெண்டு அழகான பொம்பளைங்க....’
‘மிச்சத்தை நான் சொல்லட்டுமா...?’
‘ம்’
அந்த ரெண்டு பொம்பளைங்களெப் பார்த்துட்டு அங்கிருந்த ஆம்பளைங்களெல்லாம் ஜொல்லு விட்டாங்க! என்னோட புருஷனுக்கும் ஜொல்லு விடணும் போல ஆசை வந்துச்சோ இல்லையோ உடனே அவருக்கு பொண்டாட்டி ஞாபகம் வந்துடுச்சி.... அதான் பாதிலேயே கம்பெனியிலேந்து ஒடி வந்துட்டாரூ! ஆம் ஐ கரெக்ட்!’
மனைவி தன்னை 100 க்கு 100 சதவீதம் புரிஞ்சி வெச்சிருப்பதைப் பார்த்து அவனுக்கு ஏக சந்தோஷம்.
‘ஆமா! உன்னாலே எப்படி இவ்வளவு கரெக்ட்டா நடந்ததை அப்படியே பார்த்த மாதிரி சொல்ல முடிஞ்சிச்சு?’
‘என் புருஷனைப்பத்தி எனக்குத் தெரியாதா? என் முந்தானைக்குள்ளே உங்களெ நான் டைட்டா முடிச்சுப்போட்டு வெச்சிருக்கும்போது உங்களாலே எப்படி தப்பான பாதைக்கெல்லாம் போக முடியும்? அதுவுமில்லாம நீங்க தானே எனக்கு, நம்ம உயிருக்கும் மேலான நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவுங்க வாழ்க்கையில நடந்த இதே மாதிரி ஒரு சம்பவத்தை நம்ம முதலிரவு அன்னிக்கு என் கிட்டே நீங்க சொன்னதெ என்னாலே எப்படி மறக்க முடியும்?’
சரி, அனைத்துக்கும் முன்மாதிரியாக இறைவனால் அகிலத்துக்கும் அருட்கொடையாக அனுப்பப்பட்ட இறைத்தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இல்லற வாழ்வில் நடந்த அந்த சம்பவம் தான் என்ன?
இதோ:
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு பெண்ணைப் பார்த்தார்கள். உடனே தம் மனைவி ஸைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் சென்று, தம் தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர் வெளியே வந்து, "பெண் எதிரில் வந்தால் ஷைத்தானின் வடிவில் எதிர்கொள்கிறாள். எனவே, நீங்கள் ஒரு பெண்ணைக் கண்டு மயங்கினால் தம் மனைவியிடம் செல்லட்டும். அவளிடம் இருப்பதுதான் இவளிடமும் இருக்கிறது" என்றார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூது, அஹ்மத்)
அது சரி! வீட்டுக்குள் நுழைந்தவுடன் மனைவியின் காதில் என்னமோ ஊதுனாரென்று சொன்னோமே அது என்னான்னா... "சொர்க்கத்துக்கு போகலாம் வர்றியா'' என்பதுதான்...! மேலோட்டமா பார்த்தா இது கிளு கிளுப்புன்னு எடுத்துக்கிட்டாலும் அவர் சொன்னதுலே உண்மையான அர்த்தமும் இருக்கு! கணவன்-மனைவி அனுபவிக்கிற "அந்த சுகத்தை" சொர்க்கத்துக்கு ஈடான சுகம்னு நாம சொல்றது வாஸ்தம்தான். ஆனா அதுலே இன்னொரு உண்மையும் கலந்திருக்கு என்பதை நம்மில் எத்தனைப் பேர் எண்ணிப்பார்க்கிறோம்? ஆமாங்க! ஒரு கணவன் தப்பான பாதையிலே போய் விபச்சாரம் செஞ்சா அவனுக்கு நரகம்னு சொல்ற நம்முடைய மார்க்கம் ஹலாலான தன் மனைவிக்கிட்டே சுகம் அனுபவிக்கிறதை நன்மையான காரியம்னு சொல்லுகிறதல்லவா?. நன்மையான காரியத்துக்கு கூலி சொர்க்கம் தானே.
ஆக, ஹலாலான மனைவியுடன் உடலுறவு கொள்ளும் மனிதனுக்கு இவ்வுலகிலும் சுகம், மறுமையிலும் சுகம் என்பது விளங்குகிறதல்லவா? விளங்கினால் மட்டும் போதுமா? இந்த அற்புதமான சுகத்தை வழங்கினானே அந்த ஏக இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டாமா? நம்மைப்படைத்ததன் நோக்கம் எதுவென்று இறைவன் குறிப்பிடுகிறானோ அந்த இறைவணக்கத்தை - இறை கட்டளைகளை அன்றாடம் சரியாக நிறைவோற்றுவதன் மூலமே, அவனுக்கு நாம் நன்றிக்கடனை செலுத்த முடியும். செய்வோமா?. செய்வோமா என்ன...! செய்தே தீர வேண்டும். இல்லையென்றால் அதைவிட நன்றிகெட்ட தனம் வேறு எதுவுமில்லை.
அனைவருடைய ''இல்லற வாழ்வை''யும் ''நல்லறமாக'' அந்த வல்ல ரஹ்மான் ஆக்கியருள்புரிவானாக, ஆமீன்.

'தாம்பத்தியம்'' ஒரு அழகான வார்த்தை மட்டுமல்ல....


தாம்பத்தியம் ஒரு அழகான வார்த்தை மட்டுமல்ல........
தாம்பத்தியம் என்ன ஒரு அழகான வார்த்தை, இந்த வார்த்தைக்கு உண்மையில் என்ன அர்த்தம் என்பது கூட பலருக்கு தெரிய வாய்ப்பு இல்லை, அப்படி இருக்கும்போது இந்த தலைப்பில் நான் எழுதினால் எப்படி என்று எனக்குள் ஒரு தயக்கம். ஆனால் கணவன் மனைவி உறவு பற்றி சொல்லும்போது இதைவிட சிறந்த தலைப்பு வேறு இருப்பதாக எனக்கு தோணவில்லை. இந்த ஒரு வார்த்தை பலருக்கு பலவிதமா தெரியலாம். படிக்க படிக்க உங்க வீட்டு கதை போலகூட தெரியலாம்.
என்னடா ஆரம்பத்திலேயே இப்படி குழப்புறாங்க என்று நினைக்காதிங்க. தாம்பத்தியம் கூட தொடக்கத்தில் தம்பதியருக்கு கண்ணை கட்டி காட்டில் விட்டது போல ஒரே குழப்பமாகத்தான் இருக்கும். போக போக முத்து எடுக்கத்தான் சம்சார சாகரத்தில் விழுந்திருக்கிறோம் என்பது புரியும். சிலர் எடுப்பது முத்தாக இருக்கும், பலருக்கோ வெறும் சிப்பியாக ஏமாற்றத்தில் முடிந்து விடுகிறது. முத்தை மட்டும்தான் தேடவேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருந்துவிட்டால் ஏமாற இடம் இருக்காது.
இந்த உறுதி இல்லாததால் தான் பலர் இன்று விவகாரத்திற்காக கோர்ட் படி ஏறுகிறார்கள்.
கோர்ட் வரை போக வழி இல்லாதவர்கள் அதாவது கெளரவம் பார்த்துகொண்டு ஏதோ வாழ்ந்து (மனதிற்குள் வெந்து) கொண்டிருக்கிறார்கள்.
பிறப்பு ஒரு முறைதான் இந்த வாழ்க்கையும் ஒருமுறைதான், நம் வாழ்கை ஓட்டத்தை நாம்தான் நன்றாக ஓடி முடிக்கவேண்டும். அதற்கு கணவனுக்கு மனைவியும், மனைவிக்கு கணவனும் துணை இருக்க வேண்டும். அவ்வளவுதான்.
அப்போதுதான் இருவரின் ஓடு பாதையை பின்பற்றி வரும் அவர்களின் வாரிசுகள் வெற்றி பெறமுடியும். அப்படி வெற்றி பெற்ற வாரிசுகளால் தான் ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்கமுடியும். ஆக ஒரு நல்ல சமுதாயதிற்கு அடிப்படை நல்ல குடும்பம். சமூகம் சரி இல்லை என்று குறை கூறுபவர்கள் முதலில் தங்களது வீடு சரியாக இருக்கிறதா என்று பார்த்து அதை சரி செய்தாலே போதும்.
முரண்பாடுகள் நிறைந்ததுதாங்க வாழ்க்கை. கல்யாணத்திற்கு பின் கணவன் மனைவி இருவருக்குமே பலவித எதிர்பார்ப்புகள் ஒருவர்மேல் ஒருவருக்கு இருப்பது தப்பு கிடையாது ஆனால் நம்முடைய எண்ணம் போலத்தான் இருக்கவேண்டும் என்று எதிர் பார்ப்பது ஒரு விதத்தில் ஆர்வகோளாறுதான். ஒரே கருப்பபைஇல் வளர்ந்து பிறந்த குழந்தைகளின் செயல்களிலேயே வேறுபாடு இருக்கிறப்ப வேறுவொரு சூழ்நிலையில் வேற குடும்ப பாரம்பரியத்தில் வளர்ந்து வந்த துணையிடம் மட்டும் ஒத்த எண்ணங்கள் இருக்கணும் என்று நினைக்கிறது எப்படிங்க சரியாயிருக்கும்.
நான் தொழிலில் பெரிதாக சாதித்தேன், கம்பெனிஐ உயர்த்த கடினமாக உழைத்தேன் பொருளாதாரத்தில் உயர்ந்த இடத்தில் இருக்கிறேன், நான் வெற்றியாளன் என்று பெருமையாக சொல்லலாம், ஆனால் அதை மட்டுமே முழு வெற்றியாக கருத முடியாது. உங்கள் குடும்ப வாழ்க்கை வெற்றிகரமாக நடக்கிறதா என்பதற்கு சரியான பதில் உங்களிடம் இருக்கிறதா? உங்கள் பதில் ஆம் என்று இருந்தால் மட்டுமே நீங்கள் முழு வெற்றியாளன். இல்லை என்று இருந்தால் நீங்கள் வெற்றி என்று நினைப்பது வெறும் கானல் நீர்தான். குடும்ப வாழ்வில் நிறைவு பெறாமல் அந்த சந்தோசத்தை உணராமல் வாழும் வாழ்க்கை ஒரு வாழ்க்கையா.......?
பொதுவா எதிர்பார்ப்புகள் அதிகம் இருந்தாலே வாழ்க்கை சுவைக்காது. ஆற்றின் நீரோட்டத்தை போல இயல்பா இருக்கணும். பள்ளம் இருந்தால் இறங்கியும் மேடு வந்தால் மேட்டில் ஏறியும் மண்ணின் நிறத்திற்கு ஏற்ப தனது நிறத்தை மாற்றியும் ஒரே சீராக ஓடி கடலில் சேரும் ஆறு போல இருக்க ஏன் சில பெண்களால் முடிவது இல்லை என்று தெரிவது இல்லை.
என் குடும்பம் : 
எனது குடும்பத்தை எடுத்து கொண்டால் எனக்கும் என் கணவருக்கும் பல விசயங்களில் கருத்துகள் ஒத்து போகாதுதான், இருந்தாலும் எது எல்லாம் ஒத்து வரவில்லை என்று உட்கார்ந்து பட்டியல் போட மாட்டோம். ஒரு சில நேரங்களில் என் கருத்தை அவரும் அவர் கருத்தை நானும் ஏற்று கொண்டு விடுவோம். வேற வழி......! குடும்பத்தில் சந்தோசம் நிலைக்கனும் என்றால் இந்த மாதிரி small adjustment
செய்துதான் ஆக வேண்டும்!
அப்படி எல்லாம் முடியாது என்று வாதம் செய்து கொண்டிருந்தால் வார்த்தைகள் தடிக்கும், மோதல் அதிகரிக்கும், இறுதியில் நாலு சுவத்துக்குள் பாராமுகம். பெண்களாகிய நாம் வாதத்திற்கு சளைத்தவர்கள் இல்லை, மூச்சுவிடாமல் ஒரு மணி நேரம்கூட பேசுவோம், அத்தனையையும் பொறுமையாக ஆண்கள் கேட்பார்கள் ஆனால் இறுதியாக அவர்கள் சொல்லும் ஒரு வார்த்தையில் நாம் துடித்து போய்விடுவோம். பதில் சொல்ல தோணாது, அப்புறம் எதற்காக சண்டை என்பதை மறந்து விட்டு என்னை பார்த்து இப்படி சொல்லி விட்டாரே என்று மனம் ஒடிந்து போனதுதான் மிச்சம்.
வேற்றுமையில் ஒற்றுமை :
நான் இந்திய நாட்டில் பல இன, மொழி, மதத்தை சேர்ந்தவர்கள் இருந்தாலும் எல்லோரும் இணைந்து வேற்றுமையில் ஒற்றுமை என்று இருக்கிறோம் அல்லது ஒற்றுமையாய் இருப்பதுபோல் தோன்றுகிறோம் இல்லையா.....? அதைபோலத்தான் குடும்பமும் கணவன், மனைவி இருவருக்கும் இடையில் பல வேறுபாடுகள் இருந்தாலும், வெளியில் இருந்து பார்க்கும்போது ஒற்றுமையாக இருப்பது போலாவது தெரியவேண்டும். அப்போதுதான் மூன்றாம் நபரின் தலையீடு என்பது குடும்பத்திற்குள் இருக்காது. (நானும் கள்ளகாதல் என்ற தலைப்பை எழுத வேண்டிருக்காது) அந்த மூன்றாம் நபர் ஆண், பெண் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.
கணவரை பற்றி எப்போதும் குறைச் சொல்லிகொண்டிருக்கும் ஒரு நடுத்தர வயது பெண்மணியிடம், ' குடும்பம்னா அப்படித்தான் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போங்க, அவர் நடந்துக்கிற விதம் பிடிக்கலைனாலும் பிடிச்சமாதிரி இருந்துகோங்க, அப்பதான் பிரச்சனை வராதுன்னு' சொன்னதுக்கு அந்த பெண் கொஞ்சங்கூட யோசிக்காம, ' அப்ப என்னை நடிக்க சொல்லுறீங்களா, எனக்கு வேஷம் எல்லாம் போட தெரியாது' , என்று கன்னத்தில அறைந்த மாதிரி சொல்லிட்டாங்க. இப்படி சொல்லும் இவர்கள் யதார்த்தம் என்ற ஒரு வார்த்தைக்கு அர்த்தம் தெரியாத அறிவிலிகள் என்றுதான் சொல்வேன்.
எது நடிப்பு.....? ஷேக்ஸ்பியர் சரியாதான் சொன்னார், 'உலகம் ஒரு நாடக மேடை, அதில் நாம் எல்லோருமே நடிகர்கள்தான்', இது சத்தியமான வார்த்தை. நம் அன்றாட வாழ்வில் யார்தான் நடிக்கவில்லை, என்னிடம் பேசிய அந்த பெண்ணையும் சேர்த்துதான் சொல்கிறேன். நாம் கடவுளிடம் கூட, "நான் ஒரு பாவமும் செய்யவில்லையே, எனக்கு ஏன் இந்த சோதனை" என்று கேட்கும்போது நடிக்கிறோம். பணிபுரியும் இடத்தில் மேலதிகாரி மேல் நமக்கு ஏதாவது கோபம் இருந்தாலும் வெளி காட்டிகொள்ளாமல், சிரிச்சிட்டே அவர் வரும்போது எழுந்து வணக்கம் சொல்லும்போது நடிக்கிறோம், பிடிக்காத உறவினர்கள் வீட்டிற்கு வந்தால் சந்தோசமாக வரவேற்று நடிக்கிறோம், இதை மாதிரி உதாரனங்களை சொல்லிட்டே போகலாம். முக்கியமா எல்லோரிடமும் நான் ரொம்ப பெர்பெக்ட் என்ற மாதிரி ஒரு முகமூடியை அணிந்துகொண்டு நடிக்கவில்லையா?
அனைவருக்குமே மற்றவர்களின் முன் சிறப்பாக நடக்கவேண்டும் என்ற எண்ணம் கட்டாயம் இருக்கும். அதேபோல் பெண்களுக்கு, நம் கணவரின் முன்னால் நல்லவிதமாக அவருக்கு பிடித்த மாதிரி நடக்க வேண்டும் என்று ஏன் தோன்றுவது இல்லை.
குடும்ப பிரச்சனைகளுக்கு பெண்கள் மட்டுமே காரணம் இல்லை. நான் ஏன் முதலில் பெண்களை வைத்து மட்டும் சொல்கிறேன் என்றால் நல்லவிதமாக எடுத்து சொன்னால் அவர்கள் புரிந்து கொண்டு திருத்திகொள்வார்கள், ஆனால் ஆண்கள்..........! 
இப்படிப்பட்டவர்களுக்கு, நரம்பு சம்பந்தமான பலவீனங்கள்., மனநோய், அஜிரணக்கேளாறுகள், ஆயாசம், நெஞ்சிடிப்பு, தலைநோய், தலைபாரம் போன்ற பலம் குன்ற வைக்கும் நோய்கள் தோன்றி அவதிக்குள்ளாக்கும். எனவே உடல் பக்குவம் அடைந்து திருமணம் ஆனவர்கள், காலம் தவறாமல் உடலுறவு வைத்துக்கொள்வது நல்லது.

உடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள்
ஆணும், பெண்ணும், ஒரு குறிப்பிட்ட பருவ வயதிற்கு வந்தபின்னர், தவறாமல் உடலுறவு கொள்ள வேண்டியது அவசியம். திருமணத்தின் முக்கிய நோக்கமே உடலுறவுதான்.
இறைவனின் படைப்பே விசித்திரமானது. ஆம்! ஆண், பெண் உடல் அமைப்பு விசித்திரத்திலும் விசித்திரம். பிறக்கும் முன்பே கருவிலேயே. ஆண், பெண் தீர்மானிக்கப்படுகிறது. அப்படித் தீர்மானிக்கப்படும் போதே, அந்தக் குழந்தையின் ஜீன்களில் கோட் வேட் போல சில சங்கேதக்குறிப்புகள் எழுதப்பட்டுவிடுகின்றன.
அதில் அந்தக்குழந்தையின் உடல் வளர்ச்சி, மனவளர்ச்சி, அதன் அறிவு, ஆற்றல் என அனைத்து சமாச்சாரங்களுமே பதியப்படுகின்றன. உதாரணமாக, ஒரு பெண் குழந்தையின் கருவில், அந்தக்குழந்தையின் உடல் வளர்ச்சி வேகமாகத் தான் இருக்கும்., அல்லது மெல்லத்தான் இருக்கும், அல்லது நிதானமாகத்தான் இருக்கும் என பதியப்பட்டுவிடும்.
அந்தக் குழந்தை வளர்ந்து 14 வயதில் பருவம் அடையும் என்பதெல்லாம் கூட கருவிலேயே தீர்மானிக்கப்பட்டுவிடும். அந்தக் கட்டளையை மீறாமல், அந்தக்குழந்தையின் உடல் வளர்ச்சி, பருவம் அடைதல் அனைத்துமே, ஏற்கனவே எழுதப்பட்டது போல, நடந்து கொண்டே வரும்., அதை யார் நினைத்தாலும் மாற்றி அமைக்க முடியாது.
இயற்கையை வென்றது யார் தான்...? அந்த வகையில் பார்த்தால், உடல் செயலியல் எனப்படும் பிசியாலஜியிலும் இதே போல ஏகப்பட்ட நுணுக்கமான விஷயங்கள் பொதிந்து வைக்கப்பட்டுள்ளன. அதாவது, ஆண், பெண் உடலில் ஒரு குறிப்பிட்ட காலம் வந்து, பருவம் அடைந்ததும், ஆணுக்கு, விந்துப்பை வளர்ச்சி அடைந்து, விந்து உற்பத்தயும் தொடங்கிவிடுகிறது. அதே போல, பெண்ணுக்கு, பருவம் அடைந்தது முதல், கருப்பையும் வளர்ச்சி அடைந்து, ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில், கருமுட்டைகளும் உற்பத்தியாகின்றன. இதில் சில விதிமுறைகள் உண்டு. அவற்றை மீறினால் இயற்கைக்குப் புறம்பாக நடக்கும் போது ஏற்படும் விளைவுகள் உண்டாகும்
உதாரணமாக, ஆணுக்கு விந்து நன்றாகச் சுரக்க ஆரம்பித்த பிறகும், அதை அவன் வெளியேற்றாமல் நீண்ட நாட்களாக அடக்கி வைத்துக்கொண்டே இருந்தால், என்னவாகும்? அந்த விந்து உள்ளேயே தேங்கி, அதனால் பின்விளைவுகளாக சில உடல் கோளாறுகளும் உண்டாக ஆரம்பிக்கும். தவிர, எந்த ஒரு உறுப்பை நாம் பயன்படுத்தாமல் விடுகிறோமோ அந்த உறுப்பானது நாளடைவில், அதன் செயல்திறனை இழப்பதோடு மட்டுமின்றி அது தன்னளவில் சுருங்கி இறுதியில் மறைந்து போகும்.
அந்த வகையில் பார்த்தால், ஆண், பெண்களின் செக்ஸ் உறுப்புகளுக்கும் இது மெத்தப்பொருந்தும். எனவே செக்ஸ் உறுப்புகளுக்கும் சரியான, மிதமான வேலை கொடுக்க வேண்டியது முக்கியம்.
அப்படித் தராவிட்டால், அந்த ஆணுக்கோ, பெண்ணுக்கோ, உடல் ரிதியான, மன ரிதியான கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.சில ஆண், பெண்கள், அடிக்கடி உடலுறவு வைத்துக்கொண்டால், உடல் நலம் கெட்டுப்போகும் என்ற அதீத பயத்தின் காரணமாக, நெடு நாட்களாக உடலுறவே வைத்துக்கொள்ளாமல் இருப்பார்கள்.
Thanks to - kousalya

இளம்பெண்களே! வாழ்க்கையில் தடம் புரளாதீர்கள்!


செல்ஃபோன்; இன்றைய இளம்பெண்கள் தீய இச்சையால் உணர்வால் தூண்டப்பட்டு காதல் எனும் வலையில் சிக்கி மானத்தையும் வாழ்க்கையையும் இழக்கக்கூடிய நிலைமை உருவாக முதல் காரணமாக இருக்கிறது.
விபச்சாரத்தின் அழைப்பு வீட்டுக்குள்ளும், பாக்கெட்டுக்குள்ளும், வந்துவிட்டது, முஸ்லிம் பெண்களுக்கு (ஷைத்தான்கள்) மொபைல்களின் மூலமும் இண்டெர்னெட்டின் மூலமும் நேரடியாகவும் அழைப்பு விடுகிறார்கள். நமது பெண்கள் பலர் பலியாகிவிட்டார்கள்.
இனி இப்படியான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மார்க்கத்தை பின்பற்றுங்கள், ஈமானை உறுதிப்படுத்துங்கள்.இனி இப்படியான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மார்க்கத்தை பின்பற்றுங்கள், ஈமானை உறுதிப்படுத்துங்கள்.]  
ஏற்கனவே ஈமான் என்றால்? என்ன இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் எப்படி வாழ வேண்டும்?என்ற அடிப்படை மார்க்க அறிவு கூட இல்லாமல். ஹிஜாப் முறையை சரிவர பேணாமல், அன்னிய ஆண்கள் (மஹ்ரம்) விஷயத்தில் எச்சரிக்கை இல்லாமல், வளரும் நம்முடைய சமுதாய பெண் பிள்ளைகள், கல்வி கற்க / தொழில் வேண்டி வீட்டை விட்டு வெளியேறி, பள்ளிக்கூடம், ஆபிஸ், காலேஜ், ட்யூஷன், கம்ப்யூட்டர் கிளாஸ், ட்ரைனிங்கிளாஸ் , ஹாஸ்டல், இண்டெர்நெட் கஃபே, ஸ்கூல்-டூர், காலேஜ்-டூர், ஆபிஸ் டூர், ஷாப்பிங் என்று போகும் இடங்களில், மஹரம் இல்லாத ஆண்களுடனும் மாற்று மத பெண்களுடனும், ஆண்களுடனும், பழகும் வாய்ப்பும், நட்பும், தோழமையும், ஏற்பட்டு அவர்களது பழக்க வழக்கங்களையும் அவர்களது கலாச்சாரத்தையும் பின்பற்ற ஆரம்பிக்கிறார்கள்.

இதன் காரணமாக சில மஹரம் இல்லாத ஆண்கள், மாற்று மத இளைஞர்கள் நமது முஸ்லிம் பெண்களுக்கு அண்ணன்களாகவும், நண்பர்களாகவும், ஆகிவிடுகிறார்கள். இவ்வாறு அண்ணன்களாகவும், நண்பர்களாகவும், பழகும் மஹரம் இல்லாத ஆண்கள், மாற்றுமத இளைஞர்கள். காதலர்களாக ஆகிவிடுகிறார்கள்.
இன்றைய இளம்பெண்கள் தீய இச்சையால் உணர்வால் தூண்டப்பட்டு காதல் எனும் வலையில் சிக்கி மானத்தையும் வாழ்க்கையையும் இழக்கக்கூடிய நிலைமை உருவாக முதல் காரணமாக இருக்கிறது. விபச்சாரத்தின் அழைப்பு வீட்டுக்குள்ளும், பாக்கெட்டுக்குள்ளும், வந்துவிட்டது, முஸ்லிம் பெண்களுக்கு (ஷைத்தான்கள்) மொபைல்களின் மூலமும் இண்டெர்னெட்டின் மூலமும் நேரடியாகவும் அழைப்பு விடுகிறார்கள். நமது பெண்கள் பலர் பலியாகிவிட்டார்கள்.
இனி இப்படியான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மார்க்கத்தை பின்பற்றுங்கள், ஈமானை உறுதிப்படுத்துங்கள்.இனி இப்படியான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மார்க்கத்தை பின்பற்றுங்கள், ஈமானை உறுதிப்படுத்துங்கள்.

 
இன்றைய நவநாகரீக இளம்பெண்கள் ஆடை அலங்காரங்களுக்கு ஏகப்பட்ட பணத்தை அள்ளி விடுகிறார்கள். அதே போல் வாசனை திரவியங்கள், சோப்பு போன்றவற்றுக்கும் கொட்டிக் கொடுக்கிறார்கள். வெளி பகட்டுக்காக பணத்தை தண்ணீராய் செலவழிக்கிறார்கள்.
பாஸ்டனில் உள்ள ஹார்வர்டு மெடிக்கல் ஸ்கூல் பேராசிரியர்கள், "இன்றைய இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களின் கேட்கும் திறன்’ பற்றி ஆய்வு மேற்கொண்டனர். பலபேர் கலந்துகொண்ட ஆய்வின் முடிவில், ஐபாட் போன்றவற்றில் தொடர்ந்து பாடல்கள் கேட்பதால், இளைஞர்களை விட இளம்பெண்கள் வெகுவிரைவாக கேட்கும் திறனை இழந்துவிடுவதாக தெரிந்துள்ளது
ஹார்வர்டு மெடிக்கல் ஸ்கூல் பேராசிரியர் எலிசபெத் ஹெண்டர்சென் இதுகுறித்து கூறியதாவது: ஆய்வில் பங்குபெற்ற அனைவருக்கும் கேட்கும் திறன் பற்றிய சோதனை நடத்தப்பட்டது. அதில், இளைஞர்களை விட, 17 சதவீத அளவிலான இளம்பெண்களுக்கு கேட்கும் திறன் மிகவும் குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதிக சத்தத்தில் பாடல்கள் கேட்பதுதான் கேட்கும் திறன் குறைவதற்கு காரணம் என தெரிந்தது.
கடந்த 1980ம் ஆண்டுகளில் ஹெட்போன்களில் பாடல்கள் கேட்பது என்பது 20 சதவீதமாக இருந்தது. 1990களில் இன்னும் அதிகரித்து 35 சதவீதமானது. இப்போது, செல்போன், ஐபாட், டிராய்ட், பிளாக்பெர்ரி என விதவிதமான சாதனங்கள் பயன்பாட்டில் உள்ளன. இன்றைய இளம் தலைமுறையினர் 24 மணிநேரமும் ஹெட்போன்களில் பாடல்கள் கேட்டபடியே உள்ளனர். இதனால், இளைஞர்களுக்கும் பாதிப்புகள் நிச்சயம் என்றாலும், இளம்பெண்கள் தான் வெகுவிரைவில் காதுகேட்கும் திறனை இழக்கின்றனர். இவ்வாறு எலிசபெத் ஹெண்டர்சென் கூறினார்.
காது கேட்கும் திறனை இழப்பதுமட்டுமின்றி அன்னிய ஆடவர்களின் செல்ஃபோன் தொடர்பினால்சட்டவிரோதக் கருக்கலைப்பிற்கு இட்டுச் செல்கின்ற காதல்கள் இன்று சாதாரண நிகழ்வுகளாகிவிட்டன. மறுபுறத்தில் இளவயது விவாகரத்துக்கள் பெருகிவருவதாக சமுதாய அனுதாபிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
கீழுள்ள திருக்குர்ஆனின் போதனையை செவிமடுங்கள்;
மேலும், (நபியே!) விசுவாசிகளான பெண்களுக்கு நீர் கூறுவீராக: "தங்கள் பார்வைளை அவர்கள் தாழ்த்திக் கொள்ளவும்; தங்கள் மர்மஸ்தானங்களையும் பேணிப்பாதுகாத்துக் கொள்ளவும்; அதினின்று வெளியில் தெரியக்கூடியவைகளைக் தவிர, தங்கள் (அலங்காரத்தை) அவர்கள் வெளிப்படுத்தவேண்டாம்; தங்கள் முந்தானைகளை தம் மேல்சட்டைகளின்மீது போட்டு (தலை, கழுத்து, நெஞ்சு ஆகியவற்றை மறைத்து)க் கொள்ள வேண்டும்; மேலும், அவர்கள் தம் அலங்காரத்தை தம் கணவர்கள் அல்லது தம் தந்தையர், அல்லது தம் கணவரின் தந்தையர், அல்லது தம் குமாரர்கள், அல்லது தம் கணவரின் குமாரர்கள், அல்லது தங்கள் சகோதரர்கள், அல்லது தம் சகோதரர்களின் குமாரர்கள், அல்லது தம் சகோதரிகளின் குமாரர்கள், அல்லது தங்களுடைய பெண்கள், அல்லது தம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது (ஆண்களில் பெண்களின் மீது) விருப்பமற்ற பணியாளர்கள், அல்லது பெண்களின் மறைவான அவயங்களை அறிந்துக் கொள்ளாத சிறு பிராயத்தையுடைய சிறார்கள் ஆகியவர்களைத் தவிர, (மற்றவருக்கும்) வெளிப்படுத்த வேண்டாம். அன்றியும் தம் அலங்காரத்திலிருந்து தாம் மறைந்திருப்பதை அறியப் படுவதற்காக, தங்களுடைய கால்களை (பூமியில்) அடிக்க வேண்டாம். விசுவாசிகளே! நீங்கள் வெற்றி பெறுவதற்காக அல்லாஹ்வின் பக்கம் (பாவமன்னிப்பைக் கோரி) தவ்பாச் செய்யங்கள். (அல்குர்ஆன் 24:31)

பெண்களின் உடல் ஒரு புதிர்

பெண் ஒரு புதிர்! குணத்தளவில் மட்டுமல்ல உடலளலவிலும் கூடத்தான். ஆம்! உடலளவில் அவர்களுக்குள் ஏற்படும் மாற்றங்களை அறியும்போது அது முற்றிலும் உண்மைதான் என்பது விளங்கும்.
பெண்களின் உடலில் ஒவ்வொரு நாளும் ஏற்படும் மாற்றங்கள் அவர்கள் குணங்களின் அவ்வப்போதைய மாற்றத்திற்கு காரணமாக அமைகிறது.

இது பற்றிய டாக்டர் ஷர்மிளா அவர்களின் விளக்கம் இல்லறத் தம்பதிகளுக்கு வழிகாட்டும் என நம்புகிறோம்.
மாதவிடாய்க்குப்பின் ஒவ்வொருநாளும் பெண்களுக்கு(ள்) ஏற்படும் மாற்றதை அழகாக விளக்கும் கட்டுரை இது. திருமணமான ஒவ்வொருவரும் இக்கட்டுரையிலுள்ள விஷயங்களை மனதில் பதிய வைத்துக்கொண்டால் இல்லறம் இனிதாக இனிக்கும் என்பதில் சந்தேகமில்லை. - adm.

பெண்களின் உடல் ஒரு புதிர்  
Dr.ஷர்மிளா
1 முதல் 5-ம் நாள் வரை
மாதவிலக்கு சுழற்சியின் ஆரம்ப நாட்களான இவற்றில் பெண்ணின் உடலில் ஈஸ்ட்ரோஜென் சுரப்பு குறைவாக இருக்கும். அதன் விளைவாக அவள் அமைதியின்றியும், தூக்கமின்றியும், டென்ஷனுடனும்காணப்படுவாள். பெரும்பாலும் இந்நாட்களில் பெண் அதற்குத் தயாராக இருப்பதில்லை. செக்ஸுக்கு அவளைக் கட்டாயப்படுத்தாமல், வேறு வேலைகளில் பிசியாக வைத்திருப்பது நல்லது.
6 முதல் 9-ம் நாள் வரை
பெண் உடலளவிலும், மனத்தளவிலும் ரொம்பவே உற்சாகமாக உணரும் நாட்கள் இவை. எதைப் பற்றிப் பேசினாலும் டென்ஷனாக மாட்டாள். அவளது உடல் செக்ஸ் உறவுக்குத் தயாராக இருக்கும்.
10 முதல் 15-ம் நாள் வரை
ஈஸ்ட்ரோஜென் சுரப்பு அதிகமாக இருக்கும் நாட்கள் இவை. எனவே இந்நாட்களில் செக்ஸ் உணர்வுகள் அவளுக்கு அதிகமிருக்கும். மற்ற நாட்களில் செக்ஸ் உறவின் போது தேவைப்படுகிற முன் விளையாட்டுக்கள் இந்நாட்களில் அதிகம் தேவையிருக்காது. கணவனின் கிசுகிசுப்புக் குரலுக்கும், லேசான ஸ்பரிசத்திலுமே அவளது உடல் உடனடியாக ஒத்துழைக்கும்.
15-ம் நாள்
பெண்ணின் செக்ஸ் உணர்வுகள் உச்சத்தில் இருக்கும் நாளாம் இது. இந்த நாள் அவள் கருத்தரிக்கவும் ஏற்ற மிகச் சரியான நாளாம். இந்நாளில் பெரும்பாலும் தன் கணவர் தன்னுடனேயே இருக்க வேண்டும் எனப் பெண் விரும்புவாள். மற்ற நாட்களில் சாத்தியப்படாத உறவின் போதான உச்சக்கட்டம், இந்நாளில் இரண்டு, மூன்று முறை கூடக் கிட்டுமாம்.
16 முதல் 23-ம் நாள் வரை
ஈஸ்ட்ரோஜென் மீண்டும் கொஞ்சம் குறைய ஆரம்பிக்கிற காலமிது. இந்நாட்களில் பெண்ணுக்குள் ஆண்மை உணர்வு கொஞ்சம் தலை தூக்கியிருக்குமாம். கணவனின் வழக்கமான ஆதிக்கத்தை உறவின் போது இந்நாட்களில் பெண் விரும்புவதில்லை என்கின்றன ஆராய்ச்சிகள்.
பிராஜஸ்டரோன் என்கிற ஹார்மோன் சுரப்பு அதிகமாக இருக்கும். எடுத்ததற் கெல்லாம் எரிச்சலடைவது,படபடப்பாவது என பெண்ணின் மனநிலை வேறுமாதிரி இருக்கும். தன் தோற்றம் எப்படியிருக்கிறது, மற்றவர்கள் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்கிற கவலை அதிகமிருக்கும்.
குழந்தைகளிடமும் கோபப்படுவாள். இந்நாட்களில் மனைவியுடன் பிக்னிக் செல்வது, பேட்மின்ட்டன் மாதிரியான விளையாட்டுக்களில் ஈடுபடுவது அல்லது அவளை பிசியாக வைத்திருப்பது போன்றவை ஏற்றதாக இருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். செக்ஸ் விஷயத்தைப் பொறுத்தவரை, அது அவளது விருப்பம். இந்நாட்களில் செக்ஸ் ஆர்வம் என்பது பெண்ணுக்குப் பெண் வேறுபடும் என்பதால், அதை அவளது விருப்பத்துக்கே விட்டுவிடுவது நல்லது. கட்டாயப்படுத்துவது கூடாது.
27 மற்றும் 28-ம் நாட்கள்
அடுத்த மாதவிலக்குக்குத் தயாராகும் நாட்கள் இவை. அவளது உடலில் ஈஸ்ட்ரோஜென் மற்றும் பிராஜஸ்ட்ரோன் என இரண்டு ஹார்மோன்களுமே குறைந்து காணப்படும். ஈஸ்ட்ரோஜென் சுரப்பு குறைந்து காணப்படுவதால், சாக்லேட் மாதிரியான கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்ணும் ஆவல் அவளுக்கு அதிகமிருக்கும்.
இம்மாதிரியான உணவுகள் அவளது மனநிலையை ஓரளவுக்கு சரியாக்கும் என்றாலும் அதன் விளைவாக அவளது உடல் எடை எக்குத்தப்பாக எகிறுவதும் இந்நாட்களில்தான். வெளியிடங்களுக்குச் செல்லவும், வெளியே சாப்பிடவும் இந்நாட்களில் விருப்பம் அதிகமிருக்கும் என்பதால் கணவர்கள் அதற்கு ஆவன செய்யலாம். இதற்குப் பிரதிபலன் பட்டியலின்படி பார்த்தால் பதினைந்தாம் நாள் கணவனுக்குத் திரும்பக் கிடைக்கும்.
Thanks to Dr.ஷர்மிளா
நன்றி: பூவையர் பூங்கா


என் அன்பான மகனே/மகளே...

பெற்றோர்களை நேசியுங்கள்,
அவர்களை கடைசி காலத்தில்
தனியே விட்டு விடாதீர்கள்.
ஏனெனில்,
''தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது.
தந்தையின் பொருத்தத்தில் இறைவனின் பொருத்தம் இருக்கிறது.''(நபிமொழி)
ஒரு தாய்/தந்தை தன்னுடைய மகன்/மகளுக்கு எழுதும் மிகவும் உருக்கமான கடிதம்...
என் அன்பான மகனே/மகளே...
நான் முதுமை ஆன பின், நீ என்னை புரிந்து கொண்டும் கனிவாக இருப்பாய் என்று நம்புகிறேன்.
நான் தெரியாமல் கண்ணாடியை போட்டு உடைத்து விட்டாலோ, அல்லது எதையேனும் கீழேபோட்டு விட்டாலோ, நான் பார்வை குறைவதால் தான் செய்கிறேன். நீ என்னை புரிந்து கொண்டு திட்ட மாட்டாய் என்று நினைகிறேன்.
முதியவர்கள் மிகவும் இளகிய மனம் படைத்தவர்கள் அதனால் திட்டும்போதும் கொஞ்சம் கனிவோடு திட்டு.
என்னுடைய கேட்கும் திறன் குறைத்து விட்டால் என்னால் நீ கூறுவதை கேட்க முடியாது, அப்பொழுது நீ என்னை செவிடன் என்று சொல்ல மாட்டாய் என்று நம்புகிறேன். நீ என்ன சொல் வந்தாயோ அதை திரும்ப சொல்! இல்லை என்றால் எழுதி தெரியபடுத்து.
என்னை மன்னித்து விடு, எனக்கு வயது ஆகிக்கொன்டே இருகின்றது.
என்னுடைய முழங்கால்கள் பலவீனமாகி கொண்டே இருகின்றது, நான் எழுந்து நிற்பதற்கு நீ பொறுமையாக எனக்கு உதவி செய்வாய் என்று நம்புகிறேன். எப்படி நீ குழந்தையாக இருக்கும் பொழுது நான் உனக்கு உதவி செய்தேனோ அப்படி நீயும் செய்வாய் என்று நம்புகிறேன்.
நான் ஏதேனும் சொன்னதையே திரும்ப திரும்ப பழைய ரெகார்ட் போல் பேசி வந்தாலும்; நீ! நான் சொல்லுவதை கேட்பாய் என்றும் என்னை கேலி செய்ய மாட்டாய் என்றும் அல்லது சலிப்படைய மாட்டாய் என்றும் நம்புகிறேன்.
உனக்கு ஞாபகம் இருகின்றதா, குழந்தையாக இருக்கும் பொழுது பலூன் வாங்கி தரும்வரை நீ அடம் பிடித்து பலூன் வாங்கியது...
என் மேல் இருந்து வரும் ஒரு விதமான நாற்றதிற்கும் என்னை மன்னிக்க வேண்டும். என்னை தினமும் குளிக்க சொல்லி வற்புறுத்தாதே ஏனென்றால் என்னுடைய உடம்பு மிகவும் பலவீனமாக இருகின்றது.
நான் ஏதேனும் புலம்பிக் கொண்டு இருந்தால் நீ பொறுமையாக இருப்பாய் என்று நம்புகிறேன். இது வயதானவர்கள் செய்யும் செயல். நீயும் வயதானவுடன் அதை தெரிந்து கொள்வாய்.
உன்னால் எனக்காக ஒரு ஐந்து நிமிடம் நேரம் ஒதுக்கி என்னுடன் நட்புடன் பேசுவாயா? உனக்கு வேலை அதிகம் என்று தெரியும் இருத்தாலும் நான் சொல்லும் கதைகளை உன்னை கேட்குமாறு கேட்டு கொள்கிறேன் அதற்காக எனக்கு கொஞ்சம் நேரம் ஒதுக்கு.
எப்பொழுது என்னுடைய நேரம் நெருங்குகிறதோ அப்பொழுது நான் படுத்த படுகையாக இருபேன், அப்பொழுது நீ என்னை கனிவோடு கவனிப்பாய் என்று நம்புகிறேன். தெரியாமல் நான் படுக்கையை நனைத்து விட்டால் என்னை மன்னித்துவிடு.
என்னுடைய கடைசி காலத்தில் நீ என்னை மிகவும் கவனமாகவும், அக்கறையோடும் பார்த்து கொள்வாய் என்று எனக்கு தெரியும், என்னுடைய நேரம் நெருங்கும் பொழுது நான் நீண்ட நாட்கள் உனக்கு தொல்லை தர மாட்டேன். நீ எனக்காக என்னுடன் கை கோர்த்து சாவை எதிர் கொள்ளும் மன தைரியத்தை தருவாய் என்று நம்புகிறேன்.
கவலைப் படாதே, இறைவனை நான் பார்க்கும் பொழுது அவனிடம் உன் மீது அருள் மழைப் பொழியச்சொல்கிறேன், ஏனென்றால் நீ உனது தாய் தந்தையை மிகவும் நேசித்தாய் என்று. நீ எங்களை மிகவும் கனிவோடு கவனித்ததற்கு மிக்க நன்றி..
என்றும் அன்புடன்,
அப்பா/அம்மா
நினைவு படுத்துகிறோம்
பெற்றோர்களை நேசியுங்கள், அவர்களை கடைசி காலத்தில் தனியே விட்டு விடாதீர்கள்.
ஏனெனில்,
''தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது.
தந்தையின் பொருத்தத்தில் இறைவனின் பொருத்தம் இருக்கிறது.'' (நபிமொழி)

குழந்தைகளின் சிந்தனையை சிதைக்கும் டி வி சேனல்


இந்தியா முழுவதுமே பள்ளி கோடை விடுமுறை நாள்களில்குழந்தைகளின் 

எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டுகேபிள் இணைப்புகள் மூலம் 

ஒளிபரப்பப்படும் குழந்தைகளின் சேனல்களை தடை செய்ய வேண்டும் என்ற 

கருத்து சமூக ஆர்வலர்களிடையே மேலோங்கி வருகிறது.
3 வயது குழந்தை முதல்பள்ளி மாணவமாணவிகள் வரை குழந்தைகளுக்கான சேனல்களின் (தமிழ் மற்றும் ஆங்கிலம்நிகழ்ச்சிகளை விரும்பிப் பார்க்கின்றனர்விரும்பி பார்க்கின்றனர் என்பதைவிட அதில் மூழ்கிவிடுகின்றனர் என்றே சொல்ல வேண்டும்.
இத்தகைய சேனல்களை மட்டுமே குழந்தைகள் விரும்பிப் பார்ப்பதால்அவர்களுக்கு வேறு எதன் மீதும் கவனம் செலுத்த இயலாத அளவுக்கு மூளையின் செயல்திறன் குறைகிறது.
படிக்கும் காலங்களில் படிப்பதற்கு அளிக்கும் முக்கியத்துவத்தைக் காட்டிலும் டிவி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதில் அதிக கவனம் செலுத்துவதால்கல்வியின் மீதான ஆர்வம் குறைந்து தேர்வில் குறைந்த மதிப்பெண்களே பெறும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்மேலும் டிவி பார்ப்பதால் கண்பார்வை பாதிக்கப்பட்டு சிறு வயதிலேயே கண்ணாடி அணிய வேண்டிய சூழலும் உருவாகி விடுகிறது.
இத்தகைய குழந்தைகள் சேனல்களை பார்க்கும்போதுபெற்றோர்கள் அதை பார்க்காதே என அறிவுரை கூறினாலோஅல்லது சேனல்களை மாற்றினாலோ அவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்துகிறதுஅதிலும் ஒரே வீட்டில் 2, 3 குழந்தைகள் இருந்தால் குழந்தைகள் சேனல்களிலே எந்த சேனல்களை வைப்பது என்ற சண்டை வேறு.

இத்தகைய சேனல்களை தொடர்ந்து பார்ப்பதால் குழந்தைகள் வீட்டைவிட்டு வெளியே செல்வதில்லை.இதனால்அவர்களுக்கு நட்பு வட்டாரம் குறைகிறதுஉறவினர்கள் வீட்டுக்குச் சென்று வரலாம் என பெற்றோர் அழைத்தால்கூட அவர்கள் வர மறுப்புத் தெரிவிக்கின்றனர்அப்படியே வந்தாலும்கூட அங்கு யாரிடமும் நன்கு பழகுவதில்லைஅங்கேயும் டிவி பார்ப்பதிலேயே கவனம் செலுத்துகின்றனர்.
உணவுவேளைகளில் சரியான நேரத்துக்கு சாப்பிடச் சொன்னால்கூட ஒழுங்காகச் சாப்பிடுவதில்லை.அப்படியே சாப்பிட்டாலும் அரைகுறை சாப்பாடுதான்இதனால்உடல் ரீதியாகவும்மன ரீதியாகவும் அவர்களுக்கு ஒரு விதத் தளர்வும்மன உளைச்சலும் ஏற்படுகின்றன.
சீரியலில் மூழ்கிக் கிடக்கும் பெண்களைப்போல இப்போது குழந்தைகள் சேனல்களால் வீடுகளில் பிரச்னைதான்.
இது தொடர்ந்தால் குழந்தைகளை இந்த மாதிரியான சேனல்கள் கற்பனை உலகத்திலே சுற்ற வைத்து விடும்பெற்றோர்களிடம் பாச உணர்வுடன் இருக்கவோசரியாக படிக்கவோவிளையாட்டுத்திறனை அதிகரிக்கவோ அது தடையாக இருக்கும் அவர்களின் மூளை செயல்திறனை மழுங்கடிக்கும்இத்தகைய சேனல்கள் குழந்தைகளுக்கு ஒரு போதைப் பொருள்போல ஆகிவிடும்.
இதனால் வருங்கால சமுதாயமே பாதிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லைஇதில் மத்தியமாநில அரசுகள் முக்கிய கவனம் செலுத்த வேண்டும்பொதுமக்கள் நலன் கருதி எப்படி ஆபாச சேனல்களுக்கு அரசு தடை விதிக்கிறதோஅதேபோல இத்தகைய குழந்தைகள் சேனல்களுக்கும் உடனடியாகத் தடைவிதிக்க வேண்டும்.
அவ்வாறு செயல்பட்டால் அன்றிவருங்கால இந்தியாவல்லரசு இந்தியா என்பதெல்லாம் பெயரளவில் சொல்லிக் கொள்ளலாமே தவிரநடைமுறைக்கு சாத்தியமில்லைஏனென்றால் இன்றைய குழந்தைகள் தானே நாளைய இளைஞர்கள்அவர்கள் ஒரு நல்ல குழந்தையாக இருந்தால் மட்டுமே நல்ல இளைஞராக உருவாக முடியும்அப்போதுதான் ஒரு நல்ல இந்தியனாக வந்து இந்தியாவை வல்லரசாக உருவாக்க முடியும்.
எனவேஅரசு இதைக் கருத்தில் கொண்டுகோடை விடுமுறை தொடங்கிவிட்டதுஇனி குழந்தைகளுக்கு நேரம் அதிகமாகக் கிடைக்கும் என்பதால்அந்தச் சேனல்களில் மூழ்கிவிடாமல் இருக்கவும்உடனடியாக கவனித்து குழந்தைகள் சேனல்களை தடைசெய்ய வேண்டும்அது விடுமுறை காலம் மட்டுமன்றி அனைத்து காலங்களிலும் இத்தகைய சேனல்கள் தேவை இல்லை என்பதில் உறுதியுடன் செயல்பட வேண்டும் என சமூக நல ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

மனைவிக்குப் பிடிக்காத வார்த்தைகள்!



வார்த்தைகளால் ஒருவரை மகிழ்ச்சிபடுத்தவோ, வருத்தபடுத்தவோ முடியும். ஓர் உறவை மலரச் செய்யவோ, கருகச் செய்யவோ இயலும். `ஆண்களும் தன்மையான வார்த்தைகளும்’ என்பது அபூர்வமான கூட்டணி. அதிலும் கணவன்மார்கள் மனைவியிடம் சர்வ ஜாக்கிரதையாக வார்த்தைகளை பயன்படுத்தாவிட்டால் சிக்கல்தான்.
எனவே, கணவன்மார்களுக்கு உதவும் விதமாக, அவர்கள் மனைவியிடம் கூறக் கூடாத வார்த்தைகள் இங்கே...

'உன்னோட ரசனை மகா மட்டம்’
எப்படித்தான் இப்படி ஒரு ரசனையை வளர்த்துக்கிட்டியோ?’ என்று ஒருபோதும் கூறாதீர்கள். ஆரம்பத்தில் நீங்கள் அப்படிச் சொல்லும்போது லேசாக முகம் சுளிப்பவர், பின்னர் `பளீரென்று’ திருப்பி அடிக்கத் தொடங்குவார். மனைவி `சீரியல்’ பார்பது பிடிக்கவில்லையா? சத்தமில்லாமல் அடுத்த அறைக்கு நகர்ந்து விடுங்கள்.
'ரொம்ப குண்டாஆயிட்டே’
எந்த பெண்ணும் தான் குண்டாகி விட்டதாகக் கூறப்படுவதை விரும்ப மாட்டார். மனைவி உடம்பு குண்டாகிக் கொண்டிருந்தாலும் அதை `ஒல்லியாகக் காண வேண்டியது’ உங்கள் பொறுப்பு.
'உனக்கு சமைக்கவே தெரியல’
உங்கள் அம்மாவின் கைபக்குவமே தனிதான். அவர் சாதாரணமாக புளி காய்ச்சினாலும் ஊரையே வாசனை தூக்கும்தான். ஆனால் உங்கள் இல்லத்தரசியின் சமையலைத்தான் இனி ஆயூசுக்கும் சாப்பிட்டாக வேண்டும். எனவே பாராட்டாவிட்டாலும், குறை சொல்லாமல் இருப்பது உத்தமம்.
'உங்க குடும்பத்தில எல்லாருமே இப்படித்தானா?’
நாசுக்காக அதிருப்தியை வெளிபடுத்தும் மாமனார், மாமியார், நீங்கள் அணிகிற ஆடை முதற்கொண்டு உரிமையோடு எடுத்து பயன்படுத்துகிற மைத்துனன் என்று உங்களின் மனைவி வீட்டார் ஓர் இனிய (?) இம்சை. அதற்காக, `உங்க வீட்டுல எல்லாருமே இப்படித்தானா?’ என்றோ, `உங்க அப்பா, அம்மா, தம்பி, தங்கச்சி எல்லாருமே `வித்தியாசமா’ இருக்கீங்களே!’ என்றோ கடுப்பாய் `கமெண்ட்’ அடிக்காதீர்கள்.
'உன்னை விட உன் தங்கச்சி...’
'உன்னைவிட உன் தங்கச்சி அழகு, புத்திசாலித்தனம் எல்லாத்திலயும் ஒரு படி மேலே....’ என்று சொல்லித் தொலைக்காதீர்கள். (ஜாலியாக பேசுகிற பாணியில் `உண்மையை’க் கூற நினைத்தாலும்!) சில ஆசைகளை மனசுக்குள்ளே போட்டு பூட்டிக்கொள்வது, குடும்பத்தில் கலவரம் வெடிக்காமல் இருக்க உதவும்.
'எங்க அம்மா மாதிரியே இருக்கே’
பாராட்டுவதாக நினைத்துக் கொண்டு கூட, `எங்க அம்மா மாதிரியே இருக்கே’ என்று கூறிவிடாதீர்கள். அது சுயமாக சூனியம் வைத்துக்கொள்வது மாதிரி. போயும் போயும் `மாமியாருடனா’ ஒப்பிடுவது?
அதுமட்டுமின்றி கணவன் தன் மனைவியைப்பார்த்து 'உன்னுடைய முதுகு என் அம்மாவின் முதுகைப் போல்' என்று சொன்னால் 'தலாக்' நிகழ்ந்து விடும். எச்சரிக்கையாக இருக்கவும்

காதல் என்றால் என்ன? எது உண்மையான காதல்?


                                                          
[ உன்னதமான காதலை மனைவிமேல் கொள்வதுதான் நூற்றுக்கு நூறு சரியான செயலாக இருக்கும். அதற்கு தகுதியுடையவளும் அவளே. காரணம் உங்களுக்காகவே இறைவனால் படைக்கப்பட்ட ஒரு ஜீவன் அவளே.
இறைவன் படைத்த மனிதப்படைப்பில் முதல் உறவே கணவன் மனைவி உறவுதான்.
முதல் மனிதர் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாமும் அவருக்குத்துணையாக இறைவன் படைத்ததும் அவர்களது மனைவியான ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்களைத்தானே! ]
காதல் என்றால் என்ன?  
எதிர்பாலினர் மீது அன்பு, ஆசை கலந்து இளமையில் உருவாகும் ஈர்பின் பெயர் காதல்!’ - இதை அறிவியல்பூர்வமாக பார்த்தால் `காதல் என்பது பசி, தாகம், கோபம் போன்ற ஓர் இயல்பான உணர்வு! உடல் ரீதியாக பார்த்தால் காதல் என்பது சுரபிகளின் விளையாட்டு. ஆண்ட்ரோஜன், ஈஸ்ட்ரோஜன், அட்ரினலின் போன்ற சுரப்பிகளின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள். `காதல் என்பது அப்பட்டமான சுயநலத்தின் வெளிப்பாடு’ என்கிறார்கள் உளவியல் அறிஞர்கள்!
காதல் செய்யும் மனிதர்களில் சுமார் பத்து சதவீதம் பேர்கூட திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதே நிதர்சன உண்மை! சுமார் 60 சதவீத காதல், திருமணம் என்ற பேச்சினை எட்டும் முன்னரே கலைந்து போய் விடுகிறது. இதற்கு அடிப்படை காரணம் இருவருமே முதன்முறையாக காதலில் விழும்போது அவசரபட்டு விடுவதுதான். பின்னர் இது காதல் இல்லை. நம் வாழ்க்கைக்கு இது சரிபடாது என்று பிரிந்து விடுகின்றனர்.
பருவ மாற்றம் காரணமாக இரண்டுங்கெட்டான் பருவத்தில் எதிர்பாலினத்தவரை பார்த்ததும் ஈர்ப்பு உண்டாகிறது. அதை காதல் என்று தவறாக நினைத்து விடுகிறார்கள். அது வெறும் இனக்கவர்ச்சி. ஆகவே திருமணத்திற்குப்பின் கணவன் மனைவிக்குள் ஏற்படும் ஈர்ப்புத்தான் உண்மையான காதல் என்று தாளாரமாகச் சொல்லலாம்.
காமம் என்பதில் காதல் இருக்க வேண்டிய அவசியமில்லை. காமம் என்பது காதல் ஆகாது. ஆனால் காதலில் காமம் என்பது ஒரு சிறு பகுதி மட்டுமே. அது ஒரு சிலருக்கு பெரும்பகுதியாகவும், சிலருக்கு முழு பகுதியாகவும் அமையலாம். திருமணத்திற்குமுன் ஏற்படும் காதல் பெரும்பாலும் காமத்தை நோக்கியே நகரும். இல்லையென்று சிலர் மறுத்தாலும் உண்மை அதுதான் என்பது எதார்த்தம்.
ஒரு ஆணும் பெண்ணும் தனித்திருந்தால் மூன்றவதாக (அவர்களைக்கெடுப்பதற்காக) ஷைத்தான் அங்கு நிச்சயம் இருப்பான் என்னும் இஸ்லாமிய கண்ணோட்டம் மிகவும் சரியானதே என்பதை விஞ்ஞான ஆய்வுகளும் நிரூபிக்கின்றன.
ஒரு ஆணும் பெண்ணும் பேசும்போது அவர்களுக்குள்ள இடைவெளியைப்பொருத்து அவர்கள் கெடுவதற்குள்ள வாய்ப்பைப்பற்றி குறிப்பிடும்போது, ஒரு அடி இடைவெளிக்குள் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் நான்கு முறை அருகருகே நின்று பேசினால் கெடுவதற்கான வாய்ப்பு மிக அதிகம் என்கிறார்கள்.
ஆகவே அன்பு, நட்பு, நம்பிக்கை, பொறுப்பு ஆகிய நான்கு தூண்களின் மீது கட்டப்படும் அழகிய மாளிகை போன்ற காதலே உன்னதமானது. இந்த உன்னதமான காதலை மனைவிமேல் கொள்வதுதான் நூற்றுக்கு நூறு சரியான செயலாக இருக்கும். அதற்கு தகுதியுடையவளும் அவளே. காரணம் உங்களுக்காகவே இறைவனால் படைக்கப்பட்ட ஒரு ஜீவன் அவளே. இறைவன் படைத்த மனிதப்படைப்பில் முதல் உறவே கணவன் மனைவி உறவுதான்நபி ஆதம் அலைஹிஸ்ஸலாமும் அவருக்குத்துணையாக இறைவன் படைத்ததும் அவர்களது மனைவியான ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்களைத்தானே!
திருமணத்துக்குமுன் காதலா...
கல்லூரி மற்றும் அலுவலகங்களில் அல்லது வேலை பார்க்கும் இடங்களில் தன்னுடன் படிக்கும், வேலை பார்க்கும் ஆண்கள் பெண்களுடனும், பெண்கள் ஆண்களுடனும் தீவிர நட்புடன் பழகுவதுண்டு. இந்த நட்பில் நல்ல நம்பிக்கை இருக்கும். இதில் எல்லோருக்கும் காமம் இருக்கும் என்று சொல்ல முடியாது. ஒரு சிலரிடையே மட்டும் இருக்கலாம். பெரும்பாலானவர்களுக்கு அன்பு, நட்பு, அளவுகடந்த பாசம் போன்றவற்றிற்கும் காதலுக்கும் என்ன வித்தியாசம் என்று தெரியாமலே எல்லாவற்றைம் காதல் என்ற பெயரில் போட்டுக் குழப்பிக்கொள்கிறார்கள்.
குடும்பத்தை பற்றி அக்கறை இல்லாமல் சிலர், முழுக்க முழுக்க காதலையே நினைத்துக் கொண்டிருப்பார்கள். எதிர்கால வாழ்வு பற்றிய எவ்வித பொறுப்பும் இருக்காது. அதனால் இதுவும் உண்மையான காதலாக இருக்க முடியாது. ஆனால் வெளிலகிற்கு இவர்கள் தீவிர காதலர்கள் போல் தோன்றுவார்கள்.
பொழுதுபோக்கிற்காக பலர் காதலிப்பது உண்டு. கல்லூரி மற்றும் தாம் பணியாற்றும் இடங்களில் தன்னை பற்றி மற்றவர்கள் பெருமையாக நினைக்க வேண்டும் அல்லது பேச வேண்டும் என்பதற்காக யாரையாவது காதலித்துக்கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு காமம்தான் அடிப்படை. இவர்களுக்குள் ஓரளவுதான் நம்பிக்கை இருக்கும். ஆனால் கொஞ்சம்கூட பொறுப்பே இருக்காது. ஆனால் இவர்கள் ஒன்றாக இணைந்து ஊர் சுற்றுவார்கள். பலர் முன்னிலையில் தீவிரமாக காதலிப்பது போல் நடிப்பார்கள். இதை தேறாத காதல் என்று கூறிவிடலாம்.
சினிமா நட்சத்திரங்கள் மீது சிலருக்கு காதல் ஏற்படும். சிலர், தனது காதலை சொல்லாமலேயே, தான் மட்டுமே தனியே காதலித்து ஒருதலையாக அலைந்து கொண்டிருப்பார்கள். சிலர் வயது வித்தியாசமின்றி காதலிப்பார்கள். இவையெல்லாம் நடைமுறைக்கு ஒத்துவராத காதல்கள். இதை மூடத்தனமான காதல் என்றும் பொருந்தாக் காதல் என்றும் சொல்லலாம். ஆனால் முரட்டுத்தனமான நம்பிக்கையும், குருட்டுத் தனமான பொறுப்பும் கொண்டிருப்பார்கள். டீன்ஏஜ் பருவத்தில் உடலும், மனமும் புதுமையைத் தேடும் ஏக்கத்தில் இருக்கும். கண்ணுக்கு அழகாக இருப்பவர்கள் அல்லது தைரியமாக முன்வந்து பேசுபவர்களை மனது விரும்பும். அதை காதல் என்று பெரும்பாலானவர்கள் தவறாக எடுத்துக்கொள்கிறார்கள். எதிர்பாலினரின் உருவம் தவிர வேறு எதைம் அறியாமல் காதலில் விழும்போது அங்கே காமம் மட்டுமே இருக்கும்.
இயல்பான காதல் என்பது முதலில் நம்பிக்கையில் தொடங்கும். பொறுப்புணர்வு முழுமையாக இருக்கும். அதன் பின்னரே காமம் வரும். நம்பிக்கை, பொறுப்புணர்வு, காமம் இவை முன்றும் சரியான விகிதத்தில் கலந்திருப்பதே உண்மையான காதலாகும். காமத்திற்கும், காதலுக்கும் பெருமளவு தொடர்பில்லை. காமம்தான் காதல் என்று சிலர் சொல்வது அவர்களின் அறியாமையே. இருவரும் ஒருவரை ஒருவர் முழுமையாக புரிந்து கொள்வதே இயல்பான காதலின் ஆணிவேர். காதலில் விழுந்த பிறகு, ஒரு ஆணுக்கு, தாம் நேசிக்கும் பெண்தான் உலகிலேயே அழகியாகத் தெரிவாள். (அது உங்கள் மனைவியாக இருக்கட்டுமே) பிறரது விமர்சனங்களை பற்றி கண்டு கொள்ளவோ, ஏற்றுக் கொள்ளவோ மாட்டார்கள். அதுபோலவே ஓர் ஆணின் புற அழகை பார்த்தே பெண்கள் காதலுக்குரியவர்களை தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால் அந்த அழகு அவர்களுக்கு பிடித்திருக்கும் அவ்வளவுதான். இவையத்தனையும் போலியான காதல்.
உண்மையான காதல்
உண்மையான காதல் என்பது கணவன் மனைவிக்குள் இருப்பது, இருக்க வேண்டியது. உங்கள் உண்மையான காதலி உங்கள் மனையாகவே இருக்கட்டும். ஆகவே மீண்டும் மீண்டும் நினைவு படுத்துகிறோம்; ''உன்னதமான காதலை மனைவிமேல் கொள்வதுதான் நூற்றுக்கு நூறு சரியான செயலாக இருக்கும். அதற்கு தகுதியுடையவளும் அவளே. காரணம் உங்களுக்காகவே இறைவனால் படைக்கப்பட்ட ஒரு ஜீவன் அவளே. இறைவன் படைத்த மனிதப்படைப்பில் முதல் உறவே கணவன் மனைவி உறவுதான்.முதல் மனிதர் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாமும் அவருக்குத்துணையாக இறைவன் படைத்ததும் அவர்களது மனைவியான ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்களைத்தானே!''