ஒரு முஸ்லிமின் பண்புகள்

1.ஒருமுஸ்லீம் எப்போதும் பொய் பேசாது உண்மையே பேச வேண்டும்.
2.ஒரு முஸ்லிம் வாக்களித்தால் மாறு செய்யக்கூடாது. அவன் நம்பிக்கை நாணயத்துடன் நடக்க வேண்டும்.
3.ஒரு முஸ்லிம் மற்ற முஸ்லிம்களை புறம் பேச கூடாது.
4.ஒரு முஸ்லிம் தைரியமுள்ளவனாக இருக்க வேண்டும், கோழையாக இருக்கக் கூடாது.
5.ஒரு முஸ்லிம் உண்மையை ஆதரிக்கும் விடயத்தில் நிலையானவனாகவும், உண்மையை எடுத்துக் கூறுவதில் தைரியமுள்ளவனாகவும் இருப்பான்.
6.அடுத்தவர் தன்னை எதிர்த்த போதும் ஒரு முஸ்லிம் நீதமாக நடந்துக் கொள்ள வேண்டும். அடுத்தவரின் உரிமையை சட்ட விரோதமாக மீறவும் கூடாது. அடுத்தவர் மூலம் அநீதம் செய்யப் படுவதை அனுமதிக்கவும் கூடாது. அவன் வலிமை உள்ளவனாகவும் தன்மானத்தை எவரிடமும் இலக்காதவனாகவும் இருக்க வேண்டும்.
7.ஒரு முஸ்லிம் தன செயற்பாடுகளை இயன்றவரை நேர்த்தியாக செய்ய வேண்டும்.
8.ஒரு முஸ்லிம் கர்வமற்றவனாகவும், கருணையுள்ளவனாகவும் இருக்க வேண்டும்.
9.அவன் நன்மை புரிவதோடு அடுத்தவரையும் நன்மை புரியத்தூண்ட வேண்டும். அவன் தீமை புரிவதை தவிர்த்துக் கொள்வதோடு அடுத்தவரையும் அதிலிருந்து தடுக்க வேண்டும்.
10.ஒரு முஸ்லிம் அல்லாஹ்வின் மார்க்கம் நிலைத்திருக்கவும், உலகம் முழுவதும் பரவுவதற்கு முயற்சிக்கவும் போராடவும் வேண்டும். இஸ்லாத்தின் வரையறையை மீறாதவனாக அனைத்து காரியங்களையும் மேற்கொள்வான், இஸ்லாத்தின் வெற்றிக்கென சட்ட விரோத செயல்கள் எதனையும் மேற்கொள்ளக் கூடாது.